masalapodi

மசாலாபொடி எவ்வாறு தயாரிப்பது?அளவுடன் சொல்லவும்.

நீளமான பட்ட மிளகாயை வாங்கி 2 நாட்கள் அதை வெயிலில் காயவைக்கவும்.பின் ரைஸ்மில்லில் அரைக்க கொடுக்கவும். அரைத்து வந்தபின் உடனே டப்பாவில் அடைக்காமல் ஒரு நீளமான நியூஸ்பேப்பரை தரையில் விரித்து பொடியை பரத்திவிட்டு சூடு போன பின் டப்பாவில் வைக்கவும். ( இது தானே நீங்க கேட்ட chilli powder )

மீன் குழம்பு பொடிக்கு:

மல்லி-1 கிலோ
மஞ்சள்-1 கிராம்
சீரகம்-100 கி
வெந்தயம்-100 கி
பட்ட மிளகாய்-250 கி
கட்டி பெருங்காயம்-100 கி
பெருஞ்சீரகம்-100 கி
கடலைப்பருப்பு- 100 கி
இவை அனைத்தையும் 2 நாட்கள் வெயிலில் காயவைக்கவும். கய்ந்ததும் அரிசியை(250 கிராம்) வெறும் சட்டியில் வறுத்து(கறுக்காத வண்ணம்) காய வைத்த பொருட்களுடன் கொட்டி .பின் ரைஸ்மில்லில் அரைக்க கொடுக்கவும். அரைத்து வந்தபின் உடனே டப்பாவில் அடைக்காமல் ஒரு நீளமான நியூஸ்பேப்பரை தரையில் விரித்து பொடியை பரத்திவிட்டு சூடு போன பின் டப்பாவில் வைக்கவும். ( இதை புளி குழம்புக்கும் உபயோகிக்கலாம்.)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி ஆமினா.

அன்புடன்
மஞ்சுளாஸ்ரீதர்

ஹாய் ஆமினா நீங்கள் கொடுத்துள்ள மசாலாபொடியை வேறு குழம்புகளுக்கும் உபயோகிக்கலாமா இல்லை மீன் மற்றும் புளி குழம்பிற்க்கு மட்டும்தான் உபயோகிக்க வேண்டுமா.

புளி குழம்பு,மீன் குழம்பு என இல்லை. கறி குழம்புக்கும் உபயோகிக்கலாம். சன்னா மசாலா செய்யும் போது இந்த தூளில் ஒரு கரண்டி சேர்ப்பேன். சாம்பார் சாதத்திலும் இந்த பொடியில் 2 ஸ்பூன் சேர்ப்பேன்.

கோழி இல்லாமல் கோழி குழம்பு (?) செய்யும் போதும் இதை தான் சேர்ப்பேன். கோழிக்கு பதிலாய் உருளை சேர்த்து செய்வேன் :)

ஆக மொத்தத்தில் எல்லாவற்றிற்கும் உபயோகிக்கலாம்!

இப்ப தான் பார்க்கிறேன். அதில்மஞ்சள் 1 கிராம் என தவறாக அடித்துவிட்டேன். 100 கிராம் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அன்பு தோழி ஆமினா அவர்களே நான் கேட்டதும் உடனடியாக வந்து பதில் போட்டதற்க்கு மிக்க நன்றி


நானும் மீன் இல்லாம மீன் கொழம்பு வெப்பேனே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கோழி மட்டன் கறி குழம்பு வகைகளுக்கு குருமா குழம்பு வகைகளுக்கு உண்டான மசாலா பொடி
கசகசா 1/4 கிலோ
சீரகம் 1/4 கிலோ
சோம்பு 1/4 கிலோ
மிளகு 100கிராம்
பட்டை 10கிராம்
கிராம்பு 5கிராம்
ஏலக்காய் 10கிராம்
மிஷினில் கொடுத்து அரைது வைத்துக்கொண்டு தேவைப்பட்டதை வெளியில் வத்துக்கொண்டு மீதத்தை பிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்
குருமா வென்ரால் மிளகாய்தூல்ள் மன்சள் தூள் சேர்க்ககூடாது மல்லித்தூள்பச்சைமிளகாய் தயிர் அரைத்த தேங்க்காய் சேர்க்கவும்
குழம்புஎன்றால் மிளகாய்தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் சேர்க்கவும்
கரி கோழி சாப்ஸுக்கும் கிரேவிக்கும் இந்தபொடி சேர்க்கலாம்

மேலும் சில பதிவுகள்