Stories

காலம் மாறி போச்சு - ஆமினா

பாலு வீட்டின் முன் மக்கள் கூட்டமாய் திரண்டிருந்தனர். “எப்படி தான் இவ்வளவு கூட்டமும் சமாளிக்கிறானோ? பேசாம இவனுக்கு பியூனா போயிடலாம்” என கிருஷ்ணன் தன்னை தானே நொந்துக்கொண்டான்.போதும்பொண்ணு வந்து பேசிய பின் அதிலிருந்து விலகி வீடு நோக்கி புறப்பட்டு போனான்.

இரண்டாயிரம் பேர் வசிக்க கூடிய கிராமம் அது. கிராமம் என்று சொன்னது தெரிந்தால் ஊர்மக்கள் என்னை ஆலமரத்தடியில் கட்டிவைத்து சவுக்கடி கொடுப்பார்கள். கிராமமென சட்டென சொல்லிவிட முடியாத அளவுக்கு மெதுவாக நகரமயமாதலுக்கு அடியெடுத்து வைக்க தயாராகிக்கொண்டிருந்தது. விவசாயமும்,நெசவும் தான் மக்களின் வருமானத்திற்கு கை கொடுக்கும் தொழில்கள்.

தங்கள் பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக்கொண்டதால் காவல் நிலையம் இல்லையென்றாலும் கட்டப்பஞ்சாயத்துக்கோ சற்றும் குறைவில்லை. பேருந்துகள் வந்தாலும் நெடுஞ்சாலையை இணைக்கும் அவ்வூர் சாலைகள் கொஞ்சம் குண்டும்,குழியுமாக இருக்கும். மத்தியில் பள்ளிகூடமிருந்தாலும் நகரத்தை தேடி ஓட வேண்டும். ஏனென்றால் அது நடுநிலைப்பள்ளி. மக்களின் மறியல் போராட்டத்திற்கு பின்தான் 3 வருடங்களுக்கு முன் தொடக்கப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக மாற்றினார்கள். இந்த தலைமுறையினர்கள் மட்டுமே கல்வி பயிலும் பாக்கியமடைந்துள்ளனர். தினமும் பயணம் செய்ய வேண்டியுள்ளதால் மற்ற உயர் கல்விக்கு மாணவ,மாணவிகள் பக்கத்து டவுனிலேயே விடுதியில் தங்கி பயிலுகின்றனர்.

இந்த மக்களுக்கு ஒரே ஆறுதல் அங்கு மருத்துவமனை இருப்பதே. போராடி வாங்காமலேயே கிடைத்த செல்வங்கள்! ஒன்றல்ல இரண்டல்ல....நான்கு மருத்துவர்கள் உண்டு. திடீரென ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் நகரத்தை தேடி ஓட வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால்..........

நான்கு மருத்துவர்கள் இருந்தபோதும் கிராம மக்களின் கண்ணுக்கு என்னமோ பாலு மட்டுமே மருத்துவராக தெரியும். எப்போதும் அவர் இடத்தில் தான் மக்கள் கூட்டம் திரளும். அவர் இல்லாத சமயத்திலும்,பாலுவை சில சொந்த காரணங்களால் விரும்பாத சொற்ப எண்ணிகையிலான நபர்களும் மட்டுமே மற்றவர்களிடம் செல்வார்கள்.

நாற்று நடும் பருவம் வந்தால் போதும். சேற்றில் இறங்கியவர்களின் கால்களை விஷ சந்துக்கள் முத்தமிட்டு செல்லும். மழைகாலங்களில் பெயரறியாத பல நோய்கள் அழையா விருந்தாளியாக வாசல் கதவை தட்டி உள்ளே நுழையும். இந்த நேரங்களில் தான் பாலுவின் கல்லாவும் நிறையும்.

பாலசுப்பிரமணியம் தான் நாளைடைவில் மக்களின் அன்பால் பாலுவானார். 45 வயது மதிக்கதக்க நபர். குடும்பத்தோடு இந்த கிராமத்திற்கு வந்து 15 வருடங்கள் உருண்டோடிவிட்டது. வந்த நாள் முதல் இன்று வரை அனைவராலும் “கைராசிக்கார வைத்தியர்” என அழைக்கப்படுகிறார். ஒரு ஊசியில் தீராத வலியும் தீரும், நாள்பட்ட நோயும் நொடியில் நீங்கும். அதற்கு அவர் வசூலிக்கும் கட்டணமும் மக்களால் கொடுக்க முடிந்த மதிப்பு தான். மருந்துகளுக்கு வெளியே சென்று அழைய வேண்டிய அவசியமே இல்லாமல் எல்லாமே அந்த கட்டணத்திலேயே கொடுத்திடுவார். சகஜமாய் பழகும் எளிய குணம் பாலுவிற்கு! யாரையும் இதுவரை எடுத்தெரிந்து பேசியதாய் வரலாறு இல்லை. ஊசி சதையில் நுழைகையில் ஏற்படும் சிறு எறும்பு கடித்த வலியும் அவர் புன்னகையில் சுவடே இல்லாமல் மறைந்துவிடும். இவையெல்லாம் தான் மக்கள் அவரை தேடி வர காரணம்.

பாலு எங்கேயாவது சென்றால் அன்று மற்ற மூவருக்கும் தீபாவளி தான். அன்று மட்டும் மக்களின் தரிசனம் அவர்களுக்கு கிடைக்கும். குறை மனதோடு,வேறு வழியில்லாமல் தான் மக்களும் அங்கு செல்வார்கள். அவர்கள் அன்பாய் பார்த்துக்கொண்டாலும் கூட பாலு தான் அவர்களின் மனம் முழுவதும் நிறைந்து இருப்பார். பலன் எதிர்பார்க்காமல் மழையிலும்,புயலிலும், இரவிலும்,தொலைவிலும் வருபவராச்சே!!

அன்று கிருஷ்ணா வாசலில் யாராவது வருகிறார்களா என வேடிக்கை பார்த்துக்கொண்டே மருந்தில் அமர்ந்த ஈக்களையும்,கொசுக்களையும் விரட்டிக்கொண்டிருந்தார். அந்த வழியாக கண்ணாயிரம் குனிந்த படி செல்வதை எப்படியோ பார்த்துவிட்டான். கிருஷ்ணாவுக்கு பயந்து அவன் குனிந்துக்கொண்டு போகவில்லை. காலில் ஏதோ கடித்துவிட்டதாம்! வழியில் வலியால் துடித்துக்கொண்டே போகிறவனை நோக்கி,

“ஏலேய்! எங்களையெல்லாம் உம்ம கண்ணுக்கு தெரியலையோ?அப்படி என்ன தான் புதுசா வைத்தியம் பாக்குறான்னு அவங்கிட்ட போறீரு? எல்லாம் ஒரே வைத்தியம் தானப்பு! இங்கே வாரது?” என பொறாமையில் வெந்தவனாய் கிருஷ்ணா கேட்க காதுகேளாதவனாய் அங்கிருந்து விரைவாக நடந்தான் கண்ணாயிரம்.

சிறுபிள்ளையாய் மாறி காலில் விழாத குறையாக கண்ணாயிரத்தை கெஞ்சிக்கொண்டே வந்தான் கிருஷ்ணன். அவனோ கண்டுக்கொள்வதாக இல்லை. “அட, விடுமய்யா! எனக்கு அந்த புண்ணியவான் கிட்ட போனாதேன் எல்லாம் பறந்து போவும்.” என்று முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டான். அதற்குள் பாலு மருத்துவமனையும் வந்துவிட்டது.

என்றுமில்லாத திருநாளாய் அன்று அதிக கூட்டம். அப்போது தான் கிருஷ்ணா “எப்படி தான் இவ்வளவு கூட்டமும் சமாளிக்கிறானோ?. பேசாம இவனுக்கு பியூனா போயிடலாம்” என தன்னை தானே நொந்துக்கொண்டான். அப்போது மேககூட்டத்தை கிழித்துக்கொண்டு மின்னல் தரை நோக்கி பாய்வது போல் வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டதை தள்ளிக்கொண்டு போதும்பொண்ணு வந்தாள் கண்ணாயிரத்தை நோக்கி!

“என்ன ஆத்தா? என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இம்புட்டு சனம் இருக்கு. இப்போதைக்கு வைத்தியர பாக்க முடியாது போலேயே! வலி உசுரு போவுது.”

“அட போடா பைத்தியக்கார பய மவனே! ஊரே கூ கூன்னு கெடக்கு.வெவரம் தெரியாதா ஒனக்கு? இவ்வளவு நாளா வேஷம் போட்டு நம்மல ஏமாத்திட்டான்லேய் இந்த கட்டைல போறவன்! மருந்துக்கடைல வேல பாத்தவனாம். மொளப்பாரிக்கு வந்த டவுன் புள்ளைங்க பெரிய அதிகாரிக்கு சேதி சொன்னதும் வந்து கையும் களுவுமா புடுச்சு போட்டாங்க. இவ்வளவு வருசமா டாக்டருன்னு பொய் சொல்லி காசு பறிச்சுட்டான் பாவி வரப்பா!இவன் கட்ட வேகவே வேகாது” என மண்ணை அள்ளி தூற்றிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள் போதும்பொண்ணு.

“சரி விடுங்க பா. இவன் இல்லைனா என்ன? ஒன்னுக்கு மூனு மவராசங்க முத்தா இருக்குறாங்க. வாங்க போவலாம்” என அங்கிருந்த சிலர் புத்தி வந்தவர்களாய் கிளம்பிவிட்டனர்.

வரிசையாய் மூன்று மருத்துவர்களும் வீட்டில் ஆள் இல்லை(?)!. வெளியில் பூட்டு போட்டிருந்தது. தன் பின்புறம் நன்றுக்கொண்டிருந்த கிருஷ்ணா நழுவியதன் காரணம் புரிந்தது கண்ணாயிரத்திற்கு!

கலிகாலம்!

யாரை தான் நம்புவது என தலையில் அடித்துகொண்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி மறியல் செய்ய புறப்பட்டனர்!


3.77778
(9 votes)
Your rating: None






நன்றி அட்மின் அண்ணா!

என் கதையை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி!

பெயர் மட்டும் தப்பா போட்டீங்களே?!

பரவாயில்லை விடுங்க. அமினான்னு போடாம விட்டீங்களே:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹஹஹா.... ஆமினா... காலத்துக்கு ஏற்ற கதை. சூப்பர்!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமி

குத்தகைக்கு நீங்களே எல்லாவற்றையும் எடுத்துவிட்டீங்க போல இருக்கும். ஒரு வித்தியாசமான கதை ஆமி.

வாழ்த்துக்கள்..;)

Ramya Karthick B-)

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் வழியில் மரங்கள் கிடையாது
ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது

நன்றி வனிதா அக்கா!

இப்ப நிறைய கிராமத்துல இப்படிதான் நடக்குது. கையும் களுவமா மாட்டின பிறகு தான் மக்களுக்கு புரிகிறது. பாவம் அவர்களும் என்ன செய்வார்கள். இந்த போலிகள் காட்டும் ஆணியில் மாட்டிய சர்ட்டிபிக்கேட்டை காட்டியவுடன் அவர்களும் நம்பி விடுகிறார்கள்.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அக்கா!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி ரம்யா

அந்த அளவுக்கெல்லாம் ஆசையில்லை ரம்யா!

தெரிஞ்ச அளவுக்கு எல்லாருடனும் பகிர்ந்துக்கொள்ள விருப்பம். அவ்வளவு தான்.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி, உங்களோட காலம் மாறிப்போச்சு கதை நல்லா இருந்தது. வாழ்த்துக்கள். ஒரே மாதிரியான கதையே தராம வித்தியாச வித்தியாசமா தந்துட்டு வர்றீங்க அமீனா. உங்களோட கதை நடைலயும் மாற்றங்கள் தெரியும்து. எழுதுங்க. எழுதுங்க. எழுதிகிட்டே இருங்க :)

நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)

நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது

மிக்க நன்றி! உங்கள் கருத்துக்கு!

நீங்க படிங்க படிங்க படிச்சுட்டே இருங்க. அப்ப தான் நான் எழுதுவேன்.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

அப்படியே குறைகளை பட்டியல் போடுங்க பாக்கலாம் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா நல்ல கதை "காலம் மாறிப் போச்சு" அழகா இன்றைய நடைமுறையில் நடப்பதை சொல்லிருகீங்க ஊருக்கு ஒருத்தன் இப்படிதான் இருகாங்க என்ன பட்டலும் நம் மக்கள் நம்புவதை போலிகளை நம்புவதை விட மாட்டார்கள்.

அன்புடன்
நித்யா

ஆமினா கதைய ஆரம்பித்தலேர்ந்து படிச்சுட்டு வரும் போது டாக்டர ரொம்ப நல்லவர் நினைச்சேன். கடைசில நாலு டாக்டருமே போலி. போதும்பொண்ணு கேரக்டர் பேரு வித்தியாசமா இருக்கு. நல்லா எழுதுரீங்க ஆமினா வாழ்த்துக்கள். குறை இருந்தா கண்டிப்பா சொல்வோம்.

நித்யா நீங்கள் சொல்வதை நான் ஒத்துக்கொள்கிறேன். படிக்காத மக்கள் ஏமாறுவது கூட பரவாயில்லை என விட்டு விடலாம்.ஆனால் படித்தும் ஏமாறும் மக்களை நினைத்தால் பரிதாபமாக உள்ளது.

வேலை வாங்கி தரேன். பணம் கொடு என்றால் உடனேகொடுத்து விடுவது. டெலிஷாப்பிங் நம்பி பணம் கொடுத்து மட்டமான பொருளை வாங்குவது,
சீட் வாங்கி தரேன் என சொல்லி இடைதரகர்களை நம்பி பணம் கொடுத்து குறுக்கு வழியில் சென்று லச்ச கணக்கில் கொடுத்து ஏமாறுவது என ஏமாறுபவர்கள் அதிகம்.

நாம் தான் கவனமாக இருந்து ஒன்றிற்கு 100 முறை யோசித்து களத்தில் இறங்க வேண்டும்.

கண்டிப்பா ஊருக்கு ஒருத்தன் என்ன இது போல் 4 பேர் இருப்பாங்க. நான் பார்த்த ஊரில் இப்படி தான் இருக்கிறார்கள். மாட்டிவிட்டால் அடுத்து வேற ஊரில் போய் மீண்டும் வைத்தியம் பார்க்க தொடங்குகிறார்கள். இல்லை பணம் கொடுத்து வாயை மூடவைக்கிறார்கள். ஆனால் நாம் தான் நடப்பதை எல்லாம் மறந்து மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி நல்லவர் என நினைத்து மீண்டும் குழியில் விழுகிறோம்.

கதை பிடித்து போனதில் மட்டற்ற மகிழ்ச்சி நித்யா. இந்த முறை தான் சீக்கிரமா கொடுத்துற்க்கீங்க. அப்படி தானே!

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! தொடர்ந்து படித்து பின்னூட்டமிடுங்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அவரை முதலில் நல்லவரா காட்டி பின் வில்லனாக குறிப்பிட தான் முயற்சி செய்தேன். அதில் ஓரளவுக்கு வெற்றி தான். ஆனாலும் இன்னும் கொஞ்சம் சஸ்பென்ஸாக கொண்டு வந்துருக்கலாமோன்னு தோணூது. புதுசா எழுதுவதால் சரியான நேர்த்தி பிடிபடவில்லை.

கிராமங்களில் இது போன்ற பெயர்கள் கொண்ட பெண்கள் அதிகம் உண்டு. வரிசையாக பெண்குழந்தை பிறந்தால் கடைசி பெண்ணுக்கு போதும் பொண்ணு என பெயர் வைப்பார்களாம். அடுத்து குழந்தை பிறக்காது என நம்பிக்கையாம். என் தோழிகள் அதிகமாக கிராமத்தை சேர்த்தவர்கள். கிராம மகிமை,பெருமை அதிகமாக பேசுவார்கள். கேட்பதில் எனக்கு அதிக ஆர்வம். அப்போது தான் அந்த பெயர் பற்றி சொன்னார்கள். சொன்னவள் பெயர் போதும் பொண்ணு! ஆனால் பள்ளியில் கூப்பிடுவதற்காக கவிப்ரியா என மாற்றிக்கொண்டாள்!

வாழ்துக்களுக்கு மிக்க நன்றி வினோஜா! குறைகள் தென்பட்டால் மறைக்காமல்,மறுக்காமல் சொல்லுங்க! நான் எதிர்பார்ப்பேன்.

தொடர்ந்து கதைகளை படித்து விமர்சனம் சொல்லுங்க.

மீண்டுமொரு முறை மிக்க நன்றி வினோஜா!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கதை ரொம்ப நல்லாயிருக்கு. எல்லா இடத்துலயும் இன்னும் இப்டி ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எங்க வீட்டுக்கு ஒரு பாட்டி தினம் பூ கொண்டுவரும். அவங்க ஒரு கண் எப்பவும் மூடியே இருக்கும். கேட்கனும்னு நினைப்பேன். எதாவது நினைச்சுக்குவாங்களோனு பேசாம இருப்பேன். நேத்து தான் கேட்டேன் ஆமி. அதுக்கு பாட்டி சொன்னதை கேட்டா ரொம்ப கஷ்டமாயிருந்துச்சு. பாட்டி கொஞ்ச வருசம் முன்னாடி கண் உறுத்திட்டேயிருக்குன்னு தெரிஞ்சவர்ட்ட சொன்னாங்களாம். அவர் எதோ கண் மருத்துவமனையில் வேலை பார்த்தாராம். ஒரு மருந்தை கொடுத்து இருக்கார். அவ்லோ தான். பாட்டி கண் புண்ணாகி எவ்லொ செலவு பண்ணியும் சரியாகம இன்னும் கண் மூடியே இருக்கு.நல்ல வேளை உங்க ஹீரோ அப்டி எதும் பண்ணுமுன் ஆப்பு வச்சுட்டீங்க.

இப்படி தான் நிறைய மக்கள் இருக்காங்க. காய்ச்சல் வந்தா மெடிக்கல்ல போய் தன்னால மாத்திரை வாங்கி சாப்பிட வேண்டியது. வியாதி முத்தின பிறகு கஷ்ட்டப்பட வேண்டியது.

ஒரு நர்ஸ் பக்கத்து வீட்டுல இருந்தா போதும் அவங்க கிட்ட மாத்திரை கேட்டு எழுதி வாங்க வேண்டியது. இப்படி தான் நிறைய பாத்துருக்கேன் கீதா.

ஏமாற்றுவர் ஒரு பக்கம் இருந்தா ஏமாறுபவர்களும் இருக்கிறார்கள். என்ன சொல்ல?

பாட்டிக்கு நடந்தது பெரிய வயித்தெரிச்சல். என்ன சொவதென்றே தெரியவில்லை. இந்த மாறி ஆள்களுக்கெல்லாம் பெரிய தண்டணை கொடுத்தா தான் நாடு நல்ல வழிக்கு போகும். ஆனா இங்கே தான் போலிஸ் ஸ்டேஷன் போனா அடுத்த நாளே வந்துராங்களே?!

ஏதோ இந்த பாலுவுக்கு கொஞ்சமா ஆசை இருக்குறதுனால கொஞ்சமா ஆப்பு வச்சுட்டு பிடிபட்டான்!

கருத்தை பகிர்ந்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி கீதா. உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி!

இது போல் தொடர்ந்து ஆதரவும்,ஆசிர்வாதமும் கொடுங்கள். அது இன்னும் என்னை ஒரு படி உயர்த்தி கொண்டு செல்லும்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஒவ்வொரு நேரமும் வித்யாசமான கதைகளாகவே எழுதுரீங்க. கதையும் நால்லா
இருக்கு. வாழ்த்துக்கள்.

ஆமினா,
நல்ல கதை
இதே போல் இன்னும் எத்தனை மருத்துவர்கள் நாட்டில் சுற்றுகிரார்களோ?என்று நினைப்பதற்கே பயமா இருக்கிறது
மேலும் தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி
வாழ்த்துக்கள்

அன்புடன்,
கவிதா

நல்லதொரு கருத்துள்ள கதைக்கு பாராட்டுக்கள் ஆமினா

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் ஆமி,
இப்போது தான் உங்கள் கதையை படித்தேன். கதை சொல்லிய விதம் அருமை. இன்று பல இடங்களில் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. டாக்டர்கள் எல்லாம் தெய்வங்கள் தான், போலிகள் என்று தெரிய வரும் வரை.

மேலும் நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

காலந்தான் மாறிப்போச்சு ஆமினா. ரொம்ப நல்லா கதை எழுத ஆரம்பிச்சிட்டீங்க :-)

காலத்திற்கேற்ற கரு. கதை நல்லா இருக்கு. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இஷானி

ஆமினா நேற்றே பதிவு போட நினைத்தேன் முடியவில்லை.கதை நன்றாக உள்ளது.தொடர்ந்து எழுத என் வாழ்துக்கள்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அன்பு ஆமினா..உன் கதை படித்தேன்..கலோக்கியல் தமிழ் இல் நல்லா இருந்தது...எனக்கு தமிழ் மொழி ரொம்பவே பிடிக்கும்..நல்லா தமிழ் தெரியும்..ஆனால் கவிதை எழுதும்போது ரொம்பவே கவனமாய் இலக்கிய தமிழ் கலந்து பேச்சு தமிழ் கலக்காமல் எழுத முயற்சி செய்வேன்..ஆனால்..அறுசுவை வந்து தான் இழை,பின்னூட்டம் இப்படி சில அழகு தமிழ் வார்த்தை எல்லாம் கத்துக்கிட்டேன்..நன்றி அறுசுவைக்கு..உன் ஆர்வம்,உன் வயதையும் மீறிய உன் maturity என்னை ரொம்பவே பிரமிக்க வைக்குது..நீ எனக்கு தங்கை..உன் சமையல் குறிப்பிகளும் சூப்பர்..உன் திறமை வெளியே கொண்டுவரும் இந்த தளம் உனக்கு ரொம்ப உதவி பண்ணுது..நானும் கவிதைன்னு வீட்டில் கிரிக்கிட்டு இருந்ததை அறுசுவையில் பார்த்ததும் சந்தோசம் தான்..நீ இன்னும் இன்னும் மெருகேற ஒரு சகோதரியாய் வாழ்த்துக்கள்..நிறைய கதைகள் இன்னும் எழுது..

Madurai Always Rocks...

என்னம்மா ஆமினா, இப்படி பண்ணிட்டியளே, திடீர்னு அதிகாரிங்க கிட்டே சொல்லிப் போட்டியளே. என்ன பண்றது? கம்பி எண்ணிக்கிட்டிருக்கேன். ஒரு ஆறுமாசம் போடுவாகளா? போடட்டும். அப்புறம் வேற ஒரு கிராமம் கிடைக்காமயா போயிடும். உங்கள அங்கே சந்திக்கிறேன் மருத்துவராக. இருந்தாலும் காலம் மாறித்தான் போச்சு.

அன்புடன்
THAVAM

நிஜமாவே காலத்துக்கு ஏற்ப கதை எழுதியிருக்கீங்க ஆமினா. மருத்துவம் தெரியலைன்னாலும் அவர் பேச்சுத்திறமையாலும் மனித நேயத்தாலும் எல்லார்க்கிட்டயும் நல்ல மருத்துவர்போல காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

எல்லாம் நீங்கள் ஒவ்வொரு முறையும் கொடுக்கும் ஊக்கம் தான்.

கதை பிடித்துப்போனதில் மிக்க மகிழ்ச்சி!

இது போல் எப்போதும் மறக்காம என் படைப்புகளை படித்து நிறை குறைகளை சொல்லுங்க!

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோமு!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நம்ம தான் பா கவனமா இருக்கனும். காசு கம்மியா இருக்கும்னு நாமே தேடி போய் வினை இழுக்க கூடாது:)

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இன்னும் இந்த மாறி ஆளுங்க இருக்காங்க :(

உங்கள் வாழ்த்துக்களுக்கு மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றி!

தொடர்ந்து எனக்கு ஊக்கம் கொடுத்துட்டு வரீங்க. அதுக்கு ஸ்பெஷல் நன்றி!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

என்ன பண்ண சொல்றீங்க! ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்க தான் செய்கிறான்.

கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஹர்ஷா!

வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல!

இப்படி தொடர்ந்து நீங்க கொடுக்கும் ஊக்கங்கள் தான் மேலும்,மேலும் என்னை எழுத தூண்டுகிறது!

தொடர்ந்து படித்து உங்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஒவ்வொரு முறையும் மறக்காம வந்து எனக்கு ஊக்கம் கொடுத்துட்டு வறீங்க! ரொம்ப சந்தோஷமா இருக்கு!

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி இஷானி!

உங்கள் அடுத்த கதையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா கதை நல்லா இருக்கு...கதை நடையும் நாளுக்கு நாள் மெருகு ஏறுகிறது... வாழ்த்துக்கள் ஆமினா..

எப்ப பதிவு போட்டால் என்ன!

போடுவது தான் பெரிய விஷயமில்லையா?

அது தானே நம்மை போன்றவர்களுக்கு பரிசு!

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உங்க பதிவு பார்த்ததும் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?

படிக்க படிக்க கண் கலங்கிடுச்சு! என்னை தங்கை என சொன்னதற்கு!

கண்டிப்பா அறுசுவை என் வாழ்க்கையை ரொம்பவே சுவாரசியமானதா ஆக்கி வச்சுருக்கு!

அறுசுவைக்கும், அட்மின் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் தான் என் நன்றியை சொல்லனும்!

நான் கதை எழுதும் போது என் கண் முன் வரும் நபர் நீங்கள் தான்.

//..ஆனால் அடுத்த படி முன்னேறனும் இல்லையா..அதனால் நேரடியாய் கதை களம்கு போறதுக்கு முன்னாடி..அறிமுக வருணிப்புகள் எப்பவும் குடுக்க மறக்காதிங்க..அடுத்த கதையில் நான் பார்ப்பேன்..சரியா..//

இந்த வார்த்தை தான் என்னை தூண்டிவிடும். என் ஆனந்தியிடம் பாராட்டு வாங்க வேண்டும் என என்னை மேலும்,மேலும் தூண்டும் வார்த்தைகள் அது!

அறுசுவையில் எனக்கு பிடித்த கவிதை என்றால் இஷானி,பிரியசகிக்கு பிறகு நீங்கள் தான். அந்த வார்த்தைகள் என்னை மிகவும் யோசிக்க வைக்கும்! எப்படி இந்த வார்த்தைகளையெல்லாம் கோர்த்து கவிதை எழுதுகிறார்கள் என சிந்திக்க வைக்கும். அந்த மாறி கவிதைகள் தான் மனதில் பதியும் இல்லையா? உங்கள் கவிதையை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி ஆனந்தி! இது போல் தொடர்ந்து எனக்கு உங்கள் பாசம்,ஆசிர்வாதம்,ஆதரவு தர வேண்டும்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா..ஆனந்தி ஐபிஎஸ்,,,இதை பார்த்துட்டு நான் சிரிச்சு ,ஒரு வாட்டி அந்த கதைய படிச்சு சிரிச்சுட்டு வந்தேன்..உதைக்கணும் உன்னையும்...அடுத்த வாட்டி..செம சிரிப்பு கதை எழுது..!!

Madurai Always Rocks...