Stories

விருந்தோம்பல் - ஷேக்

"வாங்க அத்தை வாங்க.. இப்படி திடுப்புனு வந்து நின்னா எப்படி? ஒரு போன் பண்ணி சொல்லிருந்தா உங்க புள்ள ஸ்டேஸனுக்கு வந்திருக்கும்ல?" முகத்தில் மலர்ச்சியுடன் வரவேற்றாள் ஜீவிதா.

"பரவாயில்லம்மா.. ராஜு எங்கே போய்ருக்கான்? இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமையாச்சே! பேத்தி கீதாவையும் காணோம்?"சரோஜா பாசம் கலந்த ஏக்கத்துடன் கேட்டாள்.

"கொஞ்ச நேரம் முன்னாடிதான் சந்தைக்கு ஜாமான் வாங்க கீதாவ கூட்டிட்டு போனாங்க..இப்ப வந்துருவாங்க..இந்த சேர்ல உக்காருங்களேன் குடிக்க தண்ணி கொண்டு வரேன்"ஃபேன் போட்டு குடிக்க தண்ணீர் கொடுத்தாள்.

சரோஜாவின் கணவர் காலமாகி பத்து வருடங்கள் ஓடிவிட்டது.. தனிக்கட்டைதான் இப்போது.. ராஜு கொடுக்கும் பத்தோ நூறையோ வைத்து காலம் ஓட்டினாள்.. தும்மினால் இருமினால் எல்லாத்துக்கும் ராஜுவைதான் எதிர்பார்க்கவேண்டிய நிலமை.

வெளியே பைக் உருமும் சத்தம் கேட்டது.. ராஜுவாகத்தான் இருக்கும்..
உள்ளே நுழைந்ததும் திருவிழாவில் புதுசாக பாத்த அதிசய பொம்மை சந்தோசம் அடைந்தாள் கீதா.

"பாட்டி எப்ப வந்திங்க?"ஓடி போய் பாட்டியின் மடியில் உக்காந்து கொண்டாள்.
சில வாண்டுகளுக்கு இப்படித்தான் அம்மாவைவிட பாட்டிமேல் பாசம் அதிகம்... வைத்த வலிச்சா.. மூக்குல நீர் ஒழுகுனா.. செய்யும் பழையகாலத்து வைதியத்தாலோ.. உணவு உண்ண அடம்பிடிக்கும்போது அலைந்து திரிந்து சிரமமின்றி ஊட்டுவதாலையோ... அம்மா அநியாயமாய் அடித்தால் அரவணைப்பதாலையோ.. சில பேத்திகளுக்கு பாட்டிகள் மேல் பாசம் அதிகந்தான்.

"எப்பம்மா வந்திங்க.. சரியான ஆளு நீங்க.. ஒரு போன் பன்னலாம்ல..இப்படி வேகதா வெய்ல வேத்து விறுவுறுத்து வரணுமா?"சொல்லியவாறெ அம்மா அருகே வந்து நின்றான் ராஜு.

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பக்கத்துவீடு ரம்யா கீதாவொடு விளையாட வருவது வழக்கம்.ரம்யா குடும்பம் கொஞ்சம் ஏழ்மையானது.அப்பா முத்துவிற்கு கூழி வேலை.என்றாவது வீட்டில் தோசைக்கு மாவரைத்தால்"இன்னைக்கு என்னம்மா விஷேசம்?"என ரம்ய அகேக்கும் அளவுக்கு வறுமை.மீன் இறைச்சி மூனு மாசத்திற்கு ஒரு தடவைதான்.

அன்று அம்ம வந்ததால் ராஜு வீட்டி இறைச்சி எடுத்திருந்தான்.எல்லோரும் வட்டமாக சாப்பிட உக்காந்தபோது
"கீதா இல்லையா ஆன்டி"கேட்டவாறே பதில் எதிர்பாராமல் உள்ளே வந்தள் ரம்யா.

சாப்பிடும் நேரத்தில் வந்ததால் எரித்துவிடுவது போல் பார்த்தாள் ஜீவிதா.

"கீதா விளையாட வரியா?"வெகுளித் தனமாய் கேட்டு ஜீவிதாவின் முகம் பார்த்தது

"ஏய் உங்கம்மா கூப்பிடுறாங்க போல் சத்தம் கேட்குது போய் என்னனு கேட்டுட்டு வா" கழுத்தைபிடித்து வெளியே தள்ளாத குறையாய் விரட்டினாள்.

"பரவாயில்லை ஆன்டி நான் வெய்ட் பன்றேன்"ஜன்னலோரம் இவர்கள் சாப்பிடுவதை பார்த்தபடியே நின்று கொண்டது.

"இருடி இப்ப வறேன்"

அம்மனை இதுவரை நேரில் பார்க்காதவர்கள் அப்போது கீதாவை பார்த்து முழியால் மிரட்டிய ஜீவிதாவை பார்த்தால் போதுமானது.

"ஏய் மூடிட்டு சாப்பிடுடி"

பேருக்கு கூட "சாப்பிட வாயேன்" என ரம்யாவை கூப்பிடவில்லை

இவர்கள் சாப்பிடுவதையே பார்த்தும் பாராமலும் கண்களால் விழுங்கிகொண்டிருந்தாள் ரம்யா.

சரோஜாவிற்கு கோபம் கோபமாக வந்தது.

"பெரியவர்களை அப்படி ஃபார்மாலிடிக்கு கூப்பிட்டால்"இப்பதான் சாப்பிட்டேனென சமாளித்து விடுவார்கள்.இது குழந்தையாயிற்றே!கூப்பிட்ட குரலுக்கு வந்து உக்காந்துவிட்டால் இரவு பங்கு என்னாவது?
சே சே என்ன மனிதர்கள் இவர்கள்?

தனி ஒருவனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழிக்க சொன்னானே பாரதி!

உணவில்லாத காரணத்தால் பிள்ளைக் கறி கொடுத்த தேசமாயிற்றே இது!
இந்த மண்ணில் இப்படி சில பிறவிகளா?அதுவும் எனக்கு வந்து வாய்த்த மருமகளா இப்படி?"மனதிற்குள் திட்டி தீர்த்தாள்.

ஒரு வாரம் கழித்து...

அன்று காலைலேயே எழுந்து ராஜு மீன் வாங்கி வந்தது சரோஜாவுக்குத் தெரியும்.

"என்னங்க சந்தைல போய் அத்தைக்கு துண்டுமீன பாத்து வாங்கிட்டு வாங்க"
முகம் சிரித்தாலும் மனசுக்குள் கருவியபடி சொன்னாள் ஜீவிதா.

"இப்பதான்டி மீ" என்றவனை கண்ணால் வாயடைத்தாள்.

"சரி.மீன் கிடைக்கலைனா சாம்பாருக்கு காய்கறிகள் ஏதும் வாங்கிட்டு வாங்க..டெய்லி மீன் கறி தின்னு நாக்கு மரத்துபோச்சு"

சரோஜாவிற்கு எல்லாம் புரிந்தது.விருந்தும் மருந்தும் மூனு நாள் என்பார்களே!இதில் மகன் வீடாயிருந்தால் என்ன,மகள் வீடாயிருந்தால் என்ன!

ராஜு எப்படி மாறினான்?அந்த அளவுக்கு பொன்டாட்டிக்கு அடிமையாகி விட்டானா?என் கணவர் உயிரோடிருக்கும் போது ராணி வாழ்க்கை வாழ்ந்தேனே நான்!
விருந்தென்றால் இருபது பேரை வீட்டிற்கு அழைத்து வருவாரே. பிரியாணிதான்..பழங்கள்தான்...அவருக்கு மகனா இவன்..பொட்டி பாம்பாய் மனைவிக்கு அடங்கி..சீ சீ விடிந்தால் முதல் வண்டிக்கு ஊர்போய் சேர வேண்டும்..இல்லாவிடில் இப்போதைய எனது ஒரே சொத்தான மானம் போய்விடும்" பலவாறு சிந்தித்து கண் கலங்கியவாளாய் எங்கேயோ வெரித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

விடிந்ததும்...

"நல்லவேளை அவர் உயிரோடிருக்கும்போதே ஒரு வீடு கட்டி வச்சாரு இல்லாடி இன்னைக்கு நான் ரோட்லதான் படுக்கனும்.. முடிஞ்சா நீ அனுப்புற பணத்த அனுப்பு.. இல்ல அதுகூட எனக்கு வேண்டாம்பா.. நாலுவீட்ல பத்து பாத்திரம் தேச்சிக்கூட என் வயித்த கழுவிக்குவேன்.. ரொம்ப மன்சு நிறஞ்சி போச்சுப்பா" சொல்லி முகம் திருப்பிகூட பார்க்காமல் போய்கொண்டிருந்தாள் சரோஜா என்ற மானஸ்தை பெண்.


4.30769
(13 votes)
Your rating: None






அருமையான கதை. நிறையா வீட்டில் இப்படி தான் நடக்குது. நானும் இது போல் நிறையா பார்த்திருக்கிறேன்.

எதார்த்த கதை. மேலும் பல எழுத வாழ்த்துக்கள். எழுத்து பிழை இந்த முறை அதிகமா வந்தது. கவனிக்கவில்லையா அண்ணா?

அந்த பொண்ணுக்கு சாப்பாடு கொடுக்க மனம் வரவில்லை என்றதும் மனம் பாரமாகிவிட்டது. காட்சிக்கள் கண் முன் வந்து போனது.

வாழ்த்துக்கள் அண்ணா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஷேக்

நல்ல எதார்த்தமான கதை.. என் பெயரெல்லாம் அடிபடுது.. ;)
ஆனால் அந்த ரம்யாவை பார்த்து இந்த ரம்யாவுக்கு மனசு கஷ்டமாயிடுச்சு ;(

வாழ்த்துக்கள் ஷேக் ;)

Ramya Karthick B-)

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் வழியில் மரங்கள் கிடையாது
ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது

ஷேக், வணக்கம், நலமா? ஊர்ல இருக்கீங்களா? அறுசுவை பக்கம் வர்றதே இல்லை போல. உங்களுடைய விருந்தோம்பல் கதை நல்லா இருந்தது, ஆனால் கதைக்குள் இருக்கும் நாயகி வனிதாவின் விருந்தோம்பல் கண்ணீரை நீர் வரவழைத்துவிட்டது அவ்வளவு காரம். நீங்க எதார்த்த வாழ்க்கைல நடக்குறதாம்பா கதையா சொல்லியிருக்கீங்க. நல்லா இருந்தது. வாழ்த்துக்கள். ஆமி, சொன்னமாதிரி எழுத்துப்பிழை குறைந்தால் இன்னும் நன்றாக இருக்கும். :)

நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)

நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது

இந்த கதை புரிந்தது, ஆனா மனசு பாரமா இருக்கு அண்ணா, சாப்பிடும் போது சில பேர் கதவை சாத்திக்கொண்டுதான் சாப்பிடுவார்கள், சின்ன குழந்தைய கூட சாப்பிட வான்னு கூப்பிட ஒரு கஷ்டம்ன்னா என்ன ஜென்மங்கள் இவங்க எல்லாம்.

ஆனா எழுத்துப்பிழை கொஞ்சம் ஜாஸ்தி, அடுத்த முறை கவனித்து கொள்ளுங்கள் அண்ணா.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

நன்றி ஆமினா.உண்மைதான் நிறையபேர் வீட்டில் இப்போதும் கிராமங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சாப்பிட அமரும்முன் எல்லாகதவகளையும் மூடி சமையலறையின் ஜன்னல்மட்டும் திறந்துவைத்துக்கொண்டு சப்பிடுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.கேட்டால் சொல்வார்கள் கொதி பட்டுவிடுமாம்.அப்படி ஒரு வார்த்தைக்கு அர்த்தம் இன்னும் தமிழ் அகராதியில் தேடிக்கொண்டுதானிருக்கிறேன்!

இன்ஷா அல்லஹ் எழுத்துப்பிழைகளில் இனி அதிகம் கவனம் செலுத்துகிறேன்!நன்றி தவறை சுட்டிக்காட்டியதற்கு

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

இந்த கதை எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. நம்மளோட கலாச்சாரமே விருந்தோம்பல் தானே, யாருமே இப்ப அத மதிக்கிறதுகிடையாது. ஆனால் இந்த கதையில் வரும் மருமகளை போல் யாரும் இருக்க கூடாது. அந்த மாமியாரின் பாலிசி தான் எனக்கும் விருந்தும் மருந்தும் மூன்று நாள் தான். பாராட்டுக்கள் ஷேக் தொடர்ந்து எழுதுங்க.

நன்றி தேவி சுரேஷ் மேடம்.
நமது கலாச்சாரமே விருந்தோம்பலில் கவனம் செலுத்துவதுதான்.இன்னும் சிலவீடுகளில் போனால் தண்ணீர் வேண்டுமா என்று கேட்ககூட தயக்கம்!

ஆனால் எனக்கு இந்த விருந்தும் மருந்தும் மூன்று நாள்கள்தான் என்பதில் உடன்பாடு இல்லை.மனமிருந்தால் மார்க்கம் உண்டு சரியா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ரம்யா மேடம் நன்றி உங்கள் பாராடுதலுக்கு..உங்கள் பேரெல்லாம் அடிபடுகிறதா?
ஹி ஹி ஹி...உண்மையும் அதுதான்!சிலசமயம் கதை எழுதும்போது கதாபாத்திரத்தின் பெயர்களுக்கு அறுசுவை தோழர்,தோழிகளின் பெயர்களை பயன்படுத்துவது வழக்காமாகிவிட்டது.இப்ப ரீஷன்டா அனுப்பின கதையில்கூட பவித்ரா என்ற பெயரை பயன்படுத்தியுள்ளேன்..

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

கல்பனா சிஸ்டர் வணக்கம்.நான் நலம்.இப்போது இருப்பது எனது சொந்த ஊரில் இல்லை.சென்னையில்தான்.நோன்பின் காரனமாக அடிக்கடி ஆன்லைன் வரமுடியவில்லை.

நன்றி உங்கள் பாராட்டுதலுக்கு.என்னை நினைவில் வைத்து பாராட்டுவதில் நீங்களுமொருவர்.

தொடர்ந்து எதிர்பார்கிறேன் உங்களது பின்னூட்டத்தை.நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நன்றி பவித்ரா சிஸ்டர்..அப்பாடி இந்த கதையாவது உனக்கு புரிந்ததா?ஆத்தாடியோவ்..பவித்ராவுக்காகவே இனி கதைகளை கவனமாய் எழுத வேண்டும்.

நன்றி பவித்ரா தவறை சுட்டிக்காட்டியதற்கு!அடுத்தமுறை தவறு இல்லாமல் எழுத முயற்சி செய்கிறேன்.ஜெயந்திமாமி மற்றும் இமா மேடத்தின் அறிவுரைகள் எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் இன்ஷா அல்லஹ்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நான் மற்றவர்கள் வீட்டிற்கு சென்றால் தான் விருந்து மருந்தும் மூன்று நாளுக்கு என்றேன். யார் என் வீட்டிற்கு வந்தாலும் அல்ல.

அது எனக்கு புரிந்தது மேடம்.ஆனால் நான் சொன்னது வனிதாவைபொல் சிலர் நினைப்பதை பற்றிதான்.(இதற்காகவே ஒரு வாரம் உங்கள் இல்லம் வந்து தங்கபோகிறேன் மேடம் கவனம்.நான் மட்டுமில்லை மனைவி மக்கள் எல்லோருடனும்)

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நிச்சயம் நிச்சயம். வாங்க அவசியம் வாங்க ஷேக். ரொம்ப சந்தோஷம் வரனு சொன்னதே. நீங்க மட்டும் இல்லை குடும்பத்தோட வாங்க. உங்க மெயில் ஐடி தாங்க ஷேக்.உங்களுக்கு எத்தனை பசங்க ஷேக்

ஷேக் அண்ணா கதை ரொம்ப அருமையா இருக்கு எதார்த்தமா இருக்கு விருந்தோம்பல் என்பது நம் தமிழ்நாட்டின் பண்பாடு இப்போ அதை யாரும் மதிப்பதே கிடையாது ஏழையா, பணக்காரனானுதான் பாக்கறாங்க, அது மட்டும் இல்லாம அந்த குழந்தையை பார்க்க வச்சு சாப்பிடுறது மாகா பாவம்.

அன்புடன்
நித்யா

நன்றி மேடம்.சும்மா பேச்சுக்குதான் சொன்னேன்..எனக்கு இரண்டு பெண்குழந்தைகள்.எனது மெய்ல் ஐடி

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நன்றி நித்யா தேவி சிஸ்டர்!
ரொம்பா நாளா இதுபற்றி எழுத நினைத்தேன்..ஏனெனில் நானே சிலவீடுகளில் இதை அனுபவித்ததுண்டு.
என்னதான் நாக்கில் தேன் பேச்சு இருந்தாலும் மனதில் உள்ளதைதான் முகம் காட்டிகொடுத்துவிடுமே!நன்றி!
தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் உங்கள் பாராட்டையும் விமர்சனத்தையும்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

கதை நல்லா இருக்கு. மாமியார்களுக்கும் மருமகள்களுக்கும் மத்தியில்
நல்ல புரிந்து கொள்ளல், அனுசரித்துப்போதல் இருந்தால் எலாக்குடும்பங்
களிலுமே மகிழ்ச்சி நிலைக்கும். பெரியவங்க, என்வீட்டுக்கார இருக்கும்போது
ராணி மாதிரி வாழ்ந்தேனே, மகாராணி மாதிரி வாழ்ந்தேனே என்று பழைய
ஃப்ளாஷ் பாக்கையெல்லாம், குறைச்சுண்டு யதார்த்த நிலைமையை யோசித்து
நடக்க பழகனும். சாதாரணமாகவே சாப்பாட்டு டைமில் வீட்டுக்கு யாரானும்
வந்தா, நாம அவ்ங்களையும் வாங்களேன் சாப்பிடலாம் என்றுதான் அழைப்போம்.
ஆனா இவங்க வீட்ல நடப்பது ஜீரனிக்கவே முடியலை.

நன்றி கோமு மேடம்!நீங்கள் சொல்லியபடிதான் மாமியார் மருமகள் இருக்கவேண்டும்.ஆனால் சிலரது வாழ்க்கையில் இதுபோல் இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..அதை நானே நிறைய தெரிந்த வீடுகளில் பார்த்துள்ளேன்..அதை அப்படியே பதிவு செய்ய நினைத்தன் விளைவு இந்த கதை....நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

என்ன ஷேக்... என் பெயர் மனசை ரொம்ப பாதிச்சுட்டுது போல!!! வில்லி கேரக்டர் வனிதா'கு பொருத்தமா தான் இருக்கு :)

நல்லா எழுதிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த கதையில் ஒரு கேரக்டர் பெயரை மாற்றி இருக்கின்றேன். இதைப் பற்றி யாரும் குறை கூறவில்லை. மாற்றச் சொல்லி கேட்கவில்லை. ஆனால் ஷேக் அவர்களின்
//
"ஹி ஹி ஹி...உண்மையும் அதுதான்! சிலசமயம் கதை எழுதும்போது கதாபாத்திரத்தின் பெயர்களுக்கு அறுசுவை தோழர்,தோழிகளின் பெயர்களை பயன்படுத்துவது வழக்காமாகிவிட்டது"
//

இந்த விளக்கத்தை கண்ட பிறகு, நானாகவே பெயரை மாற்ற வேண்டியது அவசியமாயிற்று. சாதாரணமாக பயன்படுத்திய பெயர் என்று சொல்லி இருந்தால் எதுவும் தெரியாது. இந்த கதையை வெளியிட்ட போது எனக்கு எதுவும் தெரியவில்லை. அவர் இப்படி குறிப்பிட்ட பின்பு அதைச் செய்ய வேண்டியது அவசியமாயிற்று.

அனைத்து கதாசிரியர்களுக்குமான வேண்டுகோள் : கதாபாத்திரங்களுக்கு தற்போது அறுசுவையில் வெகுவாக பார்டிசிபேட் செய்து வரும் உறுப்பினர்கள் பெயர்களை பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக வில்லத்தனமான கேரக்டர் பெயர்களுக்கு பயன்படுத்துதல் கூடாது. இந்த போக்கு நாளை வேறு விதமாக சென்றுவிடும்.

ஏற்கனவே கதாபாத்திர பெயர்கள் சம்பந்தமாக சில 'மதவாதிகள்' என்னுடன் மின்னஞ்சலில் வாதம் செய்து கொண்டிருக்கின்றார்கள். எங்கே நுழையலாம், எப்படி பிரச்சனை செய்யலாம் என்று சில 'நேரமுள்ள ஆசாமிகள்' காத்திருக்கும் இவ்வுலகில், அவர்கள் நுழைவதற்கு நாமே பாதை உண்டாக்கி கொடுக்க வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.

மிக அருமையான கருத்தை.....அருமையாக ஒரு சிறுகதையில்சொல்லியிருக்கின்றீர்கள்.......
நாளுக்கு நாள் உங்கள் கதைகள்
மெருகேறிக்கொண்டே வருகின்றன..
வாழ்த்துக்கள்.ஷேக்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நிங்கள் எதையும்மனதில் வைத்துக்கொள்ளவில்லை என்பதை எனது எல்லாக் கதைகளுக்கும் உங்களது பின்னூட்டத்தை பார்த்தபின்பு தெரிந்து கொண்டேன்.சில கதைகளுக்கு நீங்களே முதல் ஆளாக பதிவு போட்டிருப்பதையும் நான் அறிவேன்.ஆகவே உங்களது நட்பு என்ற வட்டத்திற்குள் நான் இருக்கிறேன் என்பதில் எனக்கு ரொம்ப சந்தோசம்.
வனிதா சிஸ்டர் நீங்கள் நினைப்பதுபோல் இல்லை.ஆங்கிலத்தில் கோ இன்ஸிடன்ஸ் என்று சொல்வார்கள்.உங்கள் பின்னூட்டத்தையும்,அட்மின் அண்ணாவின் பின்னூட்டத்தையும் பார்த்தபின் தான் அந்த தவறு எனக்கு புரிந்தது.மற்றபடி வேற எந்த நோக்கமும் இல்லை.இதில் வேறு நான் ரம்யா மேடத்தின் பதிவுக்கு பதில் போடும் போது அறுசுவையின் நண்பர்களின் பெயரை பயன்படுத்துவதாய் சொல்லிவிட்டேன்.தவறுதலுக்கு வருந்துகிறேன்.(கதையில் ரம்யா எனும் பெயர் சின்னப் பெண் கதாப்பாத்திரத்தில்தான் வருகிறது.)
சரியான நேரத்தில் என் தவறை திருத்திய அட்மின் அண்ணாவுக்கு நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

///நல்ல எதார்த்தமான கதை.. என் பெயரெல்லாம் அடிபடுது.. ;)
ஆனால் அந்த ரம்யாவை பார்த்து இந்த ரம்யாவுக்கு மனசு கஷ்டமாயிடுச்சு ;(

வாழ்த்துக்கள் ஷேக் ;)////
அட்மின் சார் மேலே உள்ளது ரம்யா மேடத்தின் என் கதைக்கான பின்னூட்டம்.இதை நீங்கள் இதை படிக்குபோதே உங்களுக்கு புரிந்திருக்கும் கதை எழுதும்போது கதையின் கதாபாத்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும்போது உடனடியாக அறுசுவையின் தோழிகள் பெயர் மனதில் தோன்றும்.அதை அப்படியே கதாபாத்திரத்திற்கு நான் வைத்துவிடுவேன்.அது போலத்தான் இதுவும்..இன்னோரு இழையில் கூட எனது இன்னொரு கதையில் பவித்ரா என்ற பெயரை வைத்ததாக சொல்லியிருந்தேன்.இட்ஸ் ஜஸ்ட் தி கோ-இன்ஸிடன்ஸ்!இது ரம்யாமேடத்தின் அல்லது பவித்ரா சகோதரியின் குணத்தை பற்றி நான் சொல்வதற்க்காக அப்படி பெயர் வைத்தேன் என்று நினைக்கமுடியுமா? கதையின் கதாபாத்திரத்திற்கும் அறுசுவைதோழிகளின் பெயருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை இதன்மூலம் விளங்கி கொள்ளலாம்.ரம்யா மேடமும் ரொம்ப சாதரணமாக இதை எடுத்துக் கொண்டார்கள்.பவித்ராவும் அரட்டையில் எனது பெயரை ஏடாகூடமாக பயன்படுத்தாதிங்க.உதை விழும் என்று இயல்பாய் அதை எடுத்துக் கொண்டார்கள்.ஆகவே எனக்கு இந்த மறைமுக தாக்குதலில் நாட்டம் கொண்டவனல்ல என்பதை இதன்மூலம் தெளிவு படுத்தவிரும்பினேன்.நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

///மிக அருமையான கருத்தை.....அருமையாக ஒரு சிறுகதையில்சொல்லியிருக்கின்றீர்கள்.......
நாளுக்கு நாள் உங்கள் கதைகள்
மெருகேறிக்கொண்டே வருகின்றன..///
நன்றி யோகராணி மேடம் உங்கள் பாராட்டுதலுக்கு.தொடர்ந்து உங்களது அன்பும் ஆதரவும் எனக்கிருந்தால் இன்னும் எழுதுவேன்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அப்பாடியோ.... ஷேக் நான் எதார்த்தமா விளையாட்டா தான் பதிவிட்டேன். நான் ஏதும் அண்ணாவிடம் சொல்லவில்லை. அண்ணா பொதுவா தான் போட்டிருக்கார்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா மேடம்.அட்மின் அண்ணாவும் அப்படிதான் சொன்னார்.நீங்கள் என்னை தவறாக நினைத்துவிடக்கூடாதே என்றுதான் அப்படி பதிவுபோட்டேன்.புரிந்து கொண்டமைக்கு நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ம் சூப்பர்.
கதையெல்லாம் ஷேக்காகாம வந்து விழுது.
நடத்துங்க.
அன்புடன்
ஜெமாமி

நன்றி ஜெயந்தி மேடம்.

கதையெல்லாம் ஷேக்காகலையா?ஏன்னா நானே ஷேக்.சோ எனக்கு கதை எல்லாம் ஷேக்காகாம வந்து விழுது மேடம்

சரியாபோச்சு போங்கள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக் அண்ணா
விருந்தோம்பல் நல்லாருந்தது.. விருந்தும் மருந்தும் 3 நாளைக்குதான் அப்படின்னு சொல்லுவாங்க.. அப்படி சொல்வதின் அர்த்தம் நம்ம வீட்டுக்கு வர்றவுங்க 2 அல்லது 3 நாள் தான் இருப்பாங்க அப்படின்னா தாராளமா விருந்து வைக்கலாம். ஆனால் பல நாள் வந்து தங்கினா தினமும் விருந்து சாப்பாடு வைப்பது சாத்தியமாகாது. தினமும் நன்றாக சாப்பாடு போட்டு கவனிப்பார்கள். ஆனால் விருந்து சாப்பாடாக அமைய வாய்ப்பில்லை. நாட்டில் அனைவரும் பணம் படைத்தவர்கள் இல்லையே.. தாங்கள் கூறிய மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதை பணமிருந்தால் விருந்து உண்டு என்று மாற்றிக்கொள்ளலாம்.
நல்ல கதை. எழுத்துப்பிழை தான் குறை.
http://software.nhm.in/ இந்த லிங்க் போய் டவுன்லோட் பண்ணுங்க. இதன் முலமா நீங்க உங்க ms word ல கூட டைப் பண்ணி, பிறகு அதை சரிபார்த்து அனுப்ப முடியும். வாழ்த்துக்கள் அண்ணா. மேலும் பல நல்ல கதைகள் எழுத வேண்டும்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அன்பு தங்கை ராதா!நன்றி உன் பாராட்டுதலுக்கு.

நீ சொல்வது போல் விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பது எல்லோருக்கும் அந்த விஷயம் பொருந்துமா?

அத்தை என்பது அடுத்த அன்னையாயிற்றே.அவங்களுக்குமா அந்த கதி?ஆனால் நீ சொல்வதுபோல் விருந்து என்பது மூன்று நாள் வசதி படைத்தவராய் இருந்தாலும் இல்லையென்றாலும் சரியே!

அந்த மூன்று நாள்களின் பின் அது விருந்தாக இருக்காது.நாம் என்ன சாப்பிடிகிறோமோ அதைதான் விருந்தாளிகளுக்கும் கொடுக்கமுடியும்.ம்ம்ம்ம்ம்ம்ம்

பார்க்கலாம் நானும் ஒருநாள் ராதா வீட்டிற்கு வரத்தானே போகிறேன்.அப்போது எனக்கான விருந்து மூன்று நாளா?இல்லை...ஒரு மணி நேரமா என்று தெரிந்து கொள்ள ஆசை!ஹி ஹி ஹி ஹி

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்