
தசைகளை ஊடறுத்து நரம்புகளை தாக்கும் குளிர்,ஒன்றுக்கு மேல் ஒன்றாய் உடைகளை அடுக்கி, தலை, காது, கைகளையும் அங்கிகளால் மூடியபடி மக்கள் வெள்ளம் ஒஸ்லோ நகரில் நகர்ந்து கொண்டிருந்தது. கடிகார முள்ளின் வேக நகர்வின் நாளாந்தங்களோடு போராடும் மக்கள்.
மக்களோடு மக்களாக ஒஸ்லோ நகர மைய பகுதியில் வீடு செல்வதற்கான தனது பேருந்துக்காக காத்திருந்தான் ஜனகன். அடுத்த கல்வியாண்டில் உயர் கல்வித்தெரிவு தொடர்பான எண்ணங்கள்தான் அவனது மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜனகனின் பெற்றோர் தாயகத்தில் இருந்து நோர்வேக்கு புலம்பெயர்ந்து வந்தனர்.ஜனகன் இங்குதான் பிறந்தான் என்ற போதும் அவன் எண்ணத்தில் தமிழ்மொழி, தாயக உணர்வு என்ற அடையாளங்களை வளர்ப்பதில் பெற்றோர் அக்கறை கொண்டிருந்தனர்.
புலம்பெயர்ந்து வந்த காலத்தில் இருந்து ஜனகனின் அப்பா மீன் பதனிடும் தொழிற்சாலை ஒன்றில் தொழில் புரிந்து வருகின்றார். அம்மா பகுதி நேரமாக முதியோர் பராமரிப்பு வைத்திய நிலையத்தில் உதவி தாதியாக பணிபுரிந்து வருகின்றார்.
ஜனகன், மேல்நிலை கல்வியை இன்னும் சில மாதங்களில் முடிக்க இருக்கிறான். உயர்கல்வி தெரிவுக்கான விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டிய கால கெடுவிற்கு இன்னும் சில மாதங்களே இருந்தன.எந்த குறையும் இல்லாமல் ஜனகனை வளர்த்த பெற்றோர், மேற்படிப்பு விடையத்தில் மாத்திரம் அவனின் விடயத்தில் கத்தி வைப்பதாய் அவர்களின் தலையீடு தலையெடுத்தது. ஜனகனை மருத்துவர் ஆக்கி பார்க்க வேண்டும் என்பது பெற்றோரின் கனவு.எதிகாலத்தில் ஒரு ஊடகவியலாளராக தான் உருவாக வேண்டும் என்பது ஜனகனின் இலட்சியம்.
ஊடகத்துறை அவனது மனக்கண்ணின் முன் ஒளிவட்டமாய் தோன்றி மறைந்தது.வாசிப்பு மீதான அதீத பிடிப்பும், தன்னை சுற்றி என்ன நடக்கின்றதென்பதை அறியும் ஆவலும், அவனுக்குள் இருக்கும் இயல்பான சமூக பிரச்சனையும் அவனுள் கட்டி வளத்தன எனலாம்.
தனது கனவைக்கலைப்பதாய் பெற்றோரின் திணிப்பு அமைந்து விடுமோ என்ற அச்சமும் ஜனகனை ஆட்கொண்டது.இவன் நினைவுகளை மீட்டுப் பார்த்து முடிப்பதற்கு முன்னர் பேருந்து வந்து விட்டது.பேருந்துக்குள் ஏறிய பின் மீண்டும் கல்வித்தெரிவு அவனது எண்ணத்தை பற்றி கொண்டது."நீ டாக்டருக்குத்தான் படிக்க வேணும்" என்ற அம்மாவின் பிடிவாதமும் அப்பாவின் அழுத்தமும் நினைவு தெறிப்பாய் மாறிமாறி அவன் எண்ணத்தில் வந்து போயின.
அவர்களது டாக்டர் என்ற பல்லவியை நினைக்கும் போதெல்லாம் ஜனகனுக்கு எரிச்சல் தான் வந்தது.கல்வி தொடர்பாய் தமிழ் மக்கள் கொண்டிருக்கின்ற அறியாமை அவனுக்கு கவலையையும் ஏற்படுத்தியது. இருந்த போதும் ஊடகவியலாளன் என்ற ஆழ்மனதில் பதிந்த தனது கனவுக்காக பெற்றோரிடம் இன்று வாதாடுவதென்றும், அவர்களுக்கு தன்னைப் புரிய வைப்பதென்ற முடிவோடும் வீட்டுக்கு விரைந்தான்.
பாடப்புத்தகங்கள், உடகம்சாந்த சில புத்தகங்கள்,அன்றைய நாளிதழ்கள் என்பன ஜனகனின் படிப்பு மேசையை ஆக்கிரமித்திருந்தன.சற்று ஓய்வாக அமர்ந்தவாறுஅன்றையநோர்வேயிய நாளிதழ் ஒன்றைப்புரட்டினான்.வெளிநாட்டு செய்திகள் என்னும் பக்கத்தில் தமிழ் மக்களைப்பற்றி சிலஅவதூறான கருத்துக்களும், இது பற்றி ஆழமான அறிதல்களின்றி நுனிப்புல் மேயும் ஐரோப்பிய ஊடகவியலாளர்களை நினைக்கும் போது ஒருபக்கம் கவலையும் இன்னொரு பக்கம் சினமும் கொண்டான். இவற்றை எல்லாம் எண்ணி பார்க்ககையில் ஜனகனின் ஊடகக் கனவுக்கு மேலும் வலு சேர்த்தன எனலாம்.
எமது மக்களது உண்மை நிலைமைகளை வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இளைய தலைமுறையினர் அந்தந்த நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.அதற்கு ஊடகத்துறையில் அறிவைப்பெற்று அதனோடு செயற்படுவதன் மூலம் காத்திரமான பயனைப்பெறலாம் என ஜனகன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தான்.
சமையல் முடிஞ்சுது வந்து சாப்பிடு ஜனகன்...........என்ற அம்மாவின் குரல் வாசிப்பில் மூழ்கியிருந்த ஜனகனின் காதுகளில் எட்டவில்லை.ஜனகனின் அறைக்குள் பிரவேசித்த அம்மா, " என்ன மகனே எப்பபார்த்தாலும் உந்த பேப்பருகளை பிரட்டிக்கொண்டிருக்கின்றாய்.பள்ளிக்கூடப் புத்தகத்தை எடுத்து படிஎண்டு எத்தனை தரம் சொல்லிப்போட்டன். கனடாவில் அக்கான்ரை இரண்டாவது மகள் பானுவுக்கும் மெடிசின் கிடைச்சிருக்கு! நீயும் மெடிசின் படிச்சு எங்களுக்கு பேர் எடுத்து தரவேணும்". என்ற அம்மாவின் வார்த்தைகளால் சலிப்படைந்தான்.
அம்மா நான் எத்தனை தரம் சொல்லிபோட்டன் எனக்கு மெடிசின் படிக்கிறதில்லை கொஞ்சமும் விருப்பமில்லை எண்டு?.விருப்பமில்லாத துறையிலை என்னாலை படிகேலாது. படிக்கப்போறது நான்..........எனக்குத்தான் தெரியும் எது என்னாலை முடியும்? எது முடியாதென்று? நான் ஜெர்ணலிசம் படிக்கப்போறான்............ இவ்வாறு தனது உள்ளக்கிடக்கையை அம்மாவுக்கு வெளிப்படித்திக்கொண்டிருந்த வேளையில் அப்பா வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.
பசிக்களையில் வீட்டுக்கு வந்த அவர், ஜனகனின் முடிவுக்கு எதிராக தனது கோபத்தை கொட்டித்தீர்க்க அவர் தவறவில்லை. ஜெர்ணலிசம் என்னடா படிப்பு உது....? உதை படிச்சு நாசமாய் போகப்போறியோ...........?உது நாளைக்கு உனக்கு சாப்பாடு போடுமே..........?அப்பிடி ஏதும் நினைப்பிருந்தால் அத மறந்திடு!ஒழுங்கா டாக்டருக்கு படிக்கிற வேலையைப்பார். உன்னை பெத்து வளர்த்த எங்கட மனக்கோட்டையை மண் ஆக்கிபோடாதை என்று தனது பங்கிற்கு திட்டி தீர்த்தார்.
ஏன் என்னை விளங்கி கொகின்றீகள் இல்லை?........!எல்லோரும் டாக்டரும், இஞ்சினியரும் எண்டு ஆரம்பிச்சா மற்ற வேலையாளை ஆர் பாக்கிறது? எனக்குள்ளையும் சில கனவுகள் இருக்கு, ஏன் உங்கடை விருப்பங்களை எனக்குள்ளே திணிக்கிறீர்கள்? என்று தனது மன குமுறல்களை வெளிப்படித்தியவாறு வீட்டிலிருந்து வெளியே சென்றான்.
தன் கனவு மீது கத்தி விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் சென்ற ஜனகன், கீதாவை கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்தான்.மூன்று ஆண்டுகளுக்கு முன் பாடசாலையில் கீதா இவனுக்கு அறிமுகமானாள். இருவரும் ஒரே பாடசாலையில் பயிலும் சக மாணவர்கள் என்ற உறவுக்கு மேல் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட நல்ல நண்பர்கள்.சகலதையும் பற்றிப் பகிர்ந்து கொள்கின்ற, ஆரோக்கியமாய் விவாதிக்கின்ற, ஒருவருக் கொண்டென்றால் துடித்து போகும் அளவிற்கு ஆழமான நட்பு அவர்களுக்கிடையில் உண்டு.
"கீதா.....நான் உன்னோடை கதைக்கவேணும்.நீ ஒருமுறை ஒஸ்லோ சிற்றி கபேயில என்னை சந்திக்க முடியுமோ......."எனற ஜனகனின் வேண்டுதலை கேட்டு சற்று பதட்டமடைந்த கீதாவிடம்......பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை என சமாதானப்படுத்தினான்.ஒகே,அரை மணித்தியாலத்தில் உன்னைச் சந்திக்கின்றேன் என்று கூறிய கீதா, சொன்னபடி அரை மணித்தியாலத்தில் கபேக்கு வந்தாள்.
வீட்டில் ஏதும் பிரச்சனையா என்று வினாவிய கீதாவிடம் பெற்றோரின் வற்புறுத்தலையும் தனது மன கவலையையும் சொல்லி முடித்தான்.என்ர படிப்பை என்னை முடிவெடுக்க விடுகினமில்லை.அவையின்ரை விருப்பத்துக்கு நான் மெடிசின் படைக்க வேண்டுமென்று கட்டாய படுத்துகினம்.நான் மனசளவில் சரியாய் நொந்து போய் இருக்கிறன்.என்ரை கனவை, என்ரை எதிர்கால படிப்பை தெரிவு செய்கின்ற உருமை எனக்கில்லை.இது எனக்கு பெரிய தலையிடி.
"ஜனகன் ஏன் இப்படி வெறுப்பாய் கதைக்கிறாய் உன்ரை அப்பா அம்மாவுக்கு சரியான முறையில் எடுத்துச் சொல்லிப்பார்.ஜெர்ணலிசம் என்பது உன்ரை கனவு! அந்த முடிவில் நீ உறுதியாக இரு!"என்று அவனுக்கு நம்பிக்கை ஊட்டினாள். "என்ரை அப்பாவின் குணம் உனக்கு தெரியாது. அவர் பிடிச்சா பிடியா நிற்பார்.அம்மாவும் அவரோட சேர்ந்து மகிடி வாசிப்பா.அதோடை குடும்பமானம் அது இது எண்டு அவேன்ரை இம்சை தாங்கேலாது."என்று தனது உணர்வுகளை கொட்டிதீர்த்தவனை, இடை மறித்தாள் கீதா. "உன்ரை கவலையும் ஆதங்கமும் எனக்கு விளங்குது." நீ ஊடகவியலாளன் என்ற உன்னுடைய கனவை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க தேவையில்லை என்ற அவளின் வார்த்தைகள் அவனுக்கு தென்பைதந்தன.
எல்லோரும் இன்சினியருக்கும் டாக்டருக்கும் படிச்சா, இந்த சமுதாயத்தை யார் படிக்கிறது. மனித உணர்வுகளை யார் படிக்கிறது. காலையில் கணணி படிக்கிறவன் மாலையில் கவிதை எழுத வேணும்.பரந்த அறிவையும் ஆற்றலையும் பெற்றால் தான் ஒரு சமூகம் ஆரோக்கியமானதாக இருக்கும்.இது தனி மனிதனுக்கும் பொருந்தும்...ஏனென்றால் தனி மனிதர்கள் சேர்ந்துதானே சமூகம் உருவாகுதென்று ஒஸ்லோவில் இடம்பெற்ற உயர்கல்வி கருத்தரங்கொன்றில் கல்வியாளர் ஒருவர் குறிப்பிட்ட கருத்துக்கள் ஜனகனின் மனதில் உறுதியாக ஒலித்தன.பல்கலைக் கழக அனுமதிக்காக படிவத்தில் ஊடகத்துறையைத் தெரிவு செய்து விண்ணப்பத்தை அனுப்புவதென்ற முடிவோடு நடந்தான்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
நல்ல கருத்தை கதையாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். எல்லாரும் இஞ்சினீயர்,டாக்டர்,கலெக்டருன்னே போனா எப்படி தான் மத்த வேலைகளுக்கு ஆள் கிடைக்கும். சரியாக சொன்னீர்கள். இதை பார்த்தாவது பெற்றவர்கள் தங்கள் விருப்பத்தை குழந்தைகளிடம் திணிக்காமல் இருக்கட்டும்.
நல்ல கதை. அருமையான பேச்சு நடை. மேலும் பல கதைகள் எழுத வாழ்த்துக்கள்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
யோகராணி... வழக்கம் போல உங்க தமிழ் சூப்பர்!!! படிக்கும்போது கதாபாத்திரங்களுடன் நாமும் இருப்பது போன்ற உணர்வை உங்க வரிகள் கொடுத்தது. அருமை!!!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
யோகராணி
நல்ல சமூக அக்கறை உள்ள ஒரு இளைஞனின் கதை. பெற்றோர்களுக்கு நல்லதொரு கருத்தை தெரிவிக்கும். உறுதியுடன் இருந்தால் கனவு கண்டிப்பாக நினைவாகும் ;)
Ramya Karthick B-)
ஒருவரின் முதுகிற்கு பின்னால் செய்ய வேண்டிய ஒரே வேலை தட்டிக் கொடுப்பது மட்டுமே.
அன்புத் தோழி யோகராணி, வழக்கம் போலவே உங்களுடைய எழுத்து நடையும், மொழியும் நன்றாக இருந்தது. ஒரு சில இடங்களில் வார்த்தைகள் எனக்கு புரியவில்லை. இருந்தாலும் அதை ரசித்தேன். ஒவ்வொருவர் இல்லங்களிலும் நடக்கும் விஷயம் தான். பிள்ளைகளின் ரசனைக்கு தக்கவாறு அவர்கள் விருப்பப்படி படிக்க வைத்து அவர்கள் முன்னேறுவதை பார்ப்பதை விட்டு விட்டு ஒரு வீம்புக்காகவாவது தங்கள் விருப்பத்தை அவர்கள் மேல் திணித்து அவர்கள் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடுகிறார்கள் ஒரு சில பெற்றோர்கள். அவர்கள் எப்போது திருந்துவார்களோ. வாழ்த்துக்கள். தொடந்து உங்கள் அழகான தமிழை படிக்க காத்திருக்கிறேன் :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
உங்களோட இரண்டாவது கதை இது நன்றாக எழுதியிருக்கீங்க மேடம். உங்க இலங்கை தமிழ் கதையை படிக்கும்போது கதை சூப்பர். உங்க தமிழில் பல கதைகள் எழுதிட வேண்டும் வாழ்த்துக்கள் மேடம். "நம்முடைய லட்சியம், கனவை யாருக்காவும் ஒருநாளும் விட்டு கொடுக்க கூடாது" .
நாளாந்தங்களோடு,//// ..........?அப்பிடி ஏதும்///,வேண்டுமென்று கட்டாய படுத்துகினம்,///அவனுக்கு தென்பைதந்தன///,என்னை முடிவெடுக்க விடுகினமில்லை,///கனடாவில் அக்கான்ரை ///
இதுபொன்ற வாக்கிய அமைப்புகள் எனக்கு குழப்பமாக இருந்தது..இது எழுத்து பிழையா?அல்லது இலங்கை தமிழா யோகராணி மேடம்?
ஏனென்றால் யாழ்பான தமிழ் எனக்கு அதிகம் ஆர்வம் உண்டு படிப்பதற்கு..அதனால்தான் கேட்டேன்..மற்றபடி குறைகண்டுபிடிக்கும் நோக்கம் இல்லை.(எனக்கே ஆயிரம் குறை..)
எழுத்து நடையில் போன கதையை விட நல்ல முன்னேற்றம்..வாழ்துக்கள் தொடர்ந்து எழுத..
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஆமினா
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
வனிதா
வந்தவுடனேயே என் கதைக்குப் பின்னூட்டம் தந்து அசத்திவிட்டீர்கள். மிகவும் மகிழ்ச்சி.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
வாழ்த்துக்கு நன்றி ரம்யா அவர்களே.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
மிகவும் நன்றி, விநோயா உங்கள் ஊக்கம் என்னைத் தொடர்ந்து எழுதவைக்கும்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அன்புடன் ஷேக்!
உங்களுக்கு குழப்பம் வேண்டாம், இங்கே எழுத்து பிழை எதுவும் இல்லை. இது சுத்த இலங்கை தமிழே.
நீங்கள் குறிப்பிட்ட வசனங்களுக்கு (சொற்களுக்கு) கீழே விளக்கம் தருகின்றேன்.
உங்கள் ஆர்வத்திற்கு மிகவும் நன்றி.
பாராட்டுக்கள் ஒரு பங்கு ஊக்கமளித்தால் இதுபோன்ற சுட்டிக்காட்டல்கள் இரண்டுபங்கு ஊக்கம் கொடுக்கின்றன. எனவே தயங்காமல் குறையைச் சொல்லுங்கள்.
நாளாந்தங்களோடு =நாட்களோடு அல்லது காலத்தோடு,
அப்பிடி ஏதும் =அப்படி ஏதாவது,
வேண்டுமென்று கட்டாய படுத்துகினம்,=வீம்புக்காக கட்டாய படுத்துகின்றார்கள்,
அவனுக்கு தென்பைதந்தன =அவனுக்கு நம்பிக்கை கொடுத்தது அல்லது ஊக்கத்தை கொடுத்தது.
முடிவெடுக்க விடுகினமில்லை =முடிவெடுக்க விடுகின்றார்களில்லை,
கனடாவில் அக்கான்ரை =கனடாவில் (கனடா) அக்காவின்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
எனது கதையை வெளியிட்ட பாபு அவர்களுக்கு எனது உள்ளம் கனிந்த நன்றிகள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
நல்ல கதைக்கரு. மொழியை நன்றாகப் பயன்படுத்தியுள்ளீர்கள். படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. தொடார்ந்து எழுதுங்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள்
அன்புடன்,
இஷானி
மிகவும் நன்றி இஷானி.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
யோகராணி மேடம்,
நோர்வே நகரத்தை உங்கள் தமிழில் கேட்கவே இனிக்கிறது
உங்களது நடை ரொம்ப அழகு
இலங்கை தமிழ்,அசத்தும் நடை,தெளிவான நோக்கம் மூன்றும் உங்கள் கதைக்கு சிறப்பு மேலும் பல கதைகளை எழுத வாழ்த்துக்கள்
அன்புடன்,
கவிதா
யோகராணி
அழகான இலங்கைத்தமிழில் அழகா கதை சொல்லிருக்கீங்க... எல்லார் வீட்டிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது தங்களது லட்சியங்களை திணிக்கின்றனா். அதுவும் நம்ம ஊர்ல டாக்டர், இஞ்சினியர், கலெக்டர் விட்டா வேற எதையும் நல்ல மார்க் வாங்குற பசங்க சொல்லமாட்டேங்றாங்க... இதை விட நல்ல நல்ல படிப்புகள் இருக்கு.. அது எப்போது நம் நாட்டில் பிரபலமாகுமோ?
மேலும் பல நல்ல கதைகள் எழுத வாழ்த்துக்கள்.
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
நல்ல சிந்தனை.
உங்கள் இலங்கைத் தமிழும் அருமை.
//எல்லார் வீட்டிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது தங்களது லட்சியங்களை திணிக்கின்றனா். அதுவும் நம்ம ஊர்ல டாக்டர், இஞ்சினியர், கலெக்டர் விட்டா வேற எதையும் நல்ல மார்க் வாங்குற பசங்க சொல்லமாட்டேங்றாங்க... இதை விட நல்ல நல்ல படிப்புகள் இருக்கு.. அது எப்போது நம் நாட்டில் பிரபலமாகுமோ?//
மிகச்சரியாக சொல்லி இருக்கிறார் ராதா
இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும்.
அன்புடன்
ஜெமாமி
யோகராணி கதை சொன்ன விதம் சூப்பர்.
எந்த இடத்தில வருணிக்கனும் எந்த இடத்தில வசனம் வரணும்னு நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கீங்க. கதை ஆரம்பத்துல இருந்து எங்கேயும் பிரேக் இல்லாம நீங்க சொல்லவேண்டிய கருத்துக்கு வந்து நிக்குது. பேனாவுல இங்குக்கு பதிலா கதைய ஊத்தி எழுதுறிங்களா! சுத்த தமிழில் கதையும் இலங்கைத் தமிழில் வசனத்தையும் அமைச்சது மிக்க அருமை. வாழ்த்துக்கள்!
Don't Worry Be Happy.
இப்பிடித்தான் கன வீடுகளில, என்னதான் நாடு மாறிப் போனாலும் மூத்த சந்ததியினர் எல்லாராலயும் மாற ஏலாமல் கிடக்கு.
தொடர்ந்து எழுதுங்கோ யோகராணி. நல்லா எழுதுறீங்கள், பாராட்டுக்கள்.
இமா
எனது கதையை பொறுமையுடன் வாசித்து பிநூட்டமிட்ட கவிதா, றாதா, ஜெயந்திமாமி, ஜெயலட்மி மற்றும் இலா எல்லோருக்கும் எனது மனம் நிறைந்த நன்றியை தெருவித்து கொள்கின்றேன்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
யோகராணி...............
முதலில் பிடியுங்கள் என் பாராட்டை. ஏனெனில் இப்போதுதான் படித்தேன்.
சமுதாயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால்,அதன் அங்கமாக பல துறையினரும் இருக்க வேண்டும்.இதை அழகாக,மிக,மிக அழகாக இனிய இலங்கைத் தமிழில் இந்தக் கதையை அளித்திருக்கிறீர்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்
பாராட்டு தொடரும்
அன்புடன்
தேன்மொழி
சிரிப்பே சிறந்த மருந்து