
"டேய் நாய்கடி மணி இன்னும்வரலையா?"?சக நண்பர்களை பார்த்து நக்கலாக கேட்டான் செல்வா.
இல்லையென்பது போல் தலையசைத்தார்கள் அனைவரும்.
முத்துப்பான்டி அண்ணன் பெட்டிகடைக்கு பக்கத்து வீட்ல ஒரு நாய் உண்டு.நண்பர்கள் அந்த நாய்க்கு வச்சபேர்கள் வங்கு.. சொறி.. எறுவுனி... கழுதவிட்ட.. இப்படி பட்டியல் கொஞ்சம் நீளம்.
தெருவுல போவோர் வருவோரையெல்லாம் பார்த்து தேவையில்லாமா குறைக்கும். மணியும் நண்பர்களும் சேர்ந்து என்னல்லாமோ செஞ்சி பாத்தாச்சி.. ம்ஹூம்.. அது விடுவாதாய் இல்லை.. போனாவாரம் இப்படித்தான் வீட்ல ஆளில்லாத சமயம் பாத்து ஒரு பெரிய கருங்கல்லால் சிவா எறிந்ததில் கண் பிளந்து இப்போதும் சீல் வைத்து காயம் ஆறாமல் அலைகிறது.. ஆனாலும் குறைப்பதை விடுவதாயில்லை.
நேற்றும் மணி அதெற்கென்றே வீட்டு முன்வாசலில் நின்ற பூவரசமரத்தில் ஒரு கம்பு தயாரித்து அதை நாயை கடிக்கசெய்து உடன் வெளியே எடுத்து விளையாடிக்கொண்டிருந்தான்.. அப்படிசெய்யும்போதே நாயின் வாயில் கம்பால் குத்தி புண்ணாக்க வேண்டுமென திட்டம்.
வாயில் வசமாய் குத்தியிருக்க வேண்டும்..திடீரென மணி,நண்பர்கள் எதிர்பாராத வகையில் வலது காலில் ஒரே கடி'லபக்'.
உடன் காலை உதறிவிட்டாலும் கால்வலி பொறுக்காமல் நாயை கெட்டவார்த்தை போட்டு திட்டினான்.
இன்று ஏதும் செய்து நாயை கொன்றுவிட திட்டம். ஆனால் மணி இன்னும் வரவில்லை.
"டேய் யாராச்சும் மணிவீட்ல போய் பாத்துட்டு வாங்கடா"சிவா.
"போடாங்கொயால..ஏற்கனவே அவன் அப்பனுக்கு நம்மல புடிக்காது..பாக்குற எடுத்தில் எல்லாம் முறச்சி முறச்சி பாப்பான்..தேவையா எனக்கு"வாசு.
போன வாரம் ... கடவுள் தாகத்துக்கு தண்ணி கேக்க அணில் இளநீர் கொடுத்துச்சாம்... ஓணான் மோன்டு கொடுத்துச்சாம்.. எவனோ சொன்ன இந்த கதையை கேட்டு உரோரமா இருக்குற பொத்தையடி பாறைல 12 ஓணான கல்லடிச்சி கொன்னு பொதைக்கும்போது பதிலுக்கு மோன்டு புதைதார்கள் மணியும் சக தோழர்களும்..
போன மாசம் ஒரு தடவை கிரிக்கட் விளையாடும் போது மாமிவீட்டு ஜன்னல் கண்னாடி உடந்துபோக "உங்க புள்ளையான்டன செத்த கன்டிச்சி வைக்கப்புடாதா.. புள்ளையாவா தலப்படுதுகள்.. நான் சொல்றத சொல்லிட்டேன் கேட்டேளா" வென வசபாடி போன்னாள் மாமி.
அதகேட்டு அன்னைக்கு மணிக்கு சாமக்கொடைதான் நடந்தது.. தூணில் அம்மணமாய் கெட்டிவைத்து... இடுப்புக்குகீழே வெங்காயம் மிளகா அரச்சி தேய்த்து.. ம்ம்ம்ம்ம்ஹூம்.. அதுக்கும் மசிஞ்ச பாடில்லை.
சிலரிதை பார்த்தால் "என்னப்ப புள்ளைய இப்படி மாடாட்டம் அடிக்குற..ஒரேடியா அடிச்சா மலுங்கிபோய்ருவான்..ஒரு பார்வைல அதட்டி வளக்கத்தெரியலையே என்று வியாக்கியானம் பேசுவார்கள்.
இன்னும்சிலர் "என்னையா புள்ள வளக்குற..பன்னிகுட்டிபெத்துபோட்டமாதுரி எதுக்கு நமக்கு புள்ளைங்க..சொல்லிகேட்கலையா..முட்டுக்குகீழ உரிச்சி..தலகீழா தொங்கவிடுவியா "என ஆவேசப்படுவார்கள்..இதில் யார் சொல்லை கேக்க?
மணி வீட்டில்..
மணிக்கு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான் காரணம் பக்கத்துவீட்டு கிழவி..
நேத்தும் அடுத்த தெருவுல யாரையோ நாய் கடிச்சி தொப்புள் சுத்தி நாப்பது ஊசி போட்டும் குணமாகலையாம்..
கிராமத்துபாட்டிகள் பொதுவாகவே ஒரு விசயம் கிடைத்தால் போதும்..அதுக்கு எடிட்டிங்..ரீ ரெக்கார்டிங்..ஸ்க்ரிப்ட் எல்லாத்தையும் முடித்துவிடுவார்கள்.. காலைல பத்துமணிக்கு இந்த தெருவுல ஒரு விசயம் கெடச்சா அடுத்த பத்து நிமிசத்துல அந்த ஊருக்கே அது பரவியிருக்கும்.
நாய் கடிச்சதை அம்மாவிடம் எப்படி சொல்வது?சொல்லாமல் போனால் ஏடாகூடமாய் ஏதும் ஆகிவிட்டால்.. மனசுக்குள் புழம்பிக்கொண்டிருந்தான்
மன்சுக்குள் திட்டம் உருவானது...
பெட்டில் மல்லாக்க படுத்து கம்மியகுரலில் விசும்ப ஆரம்பித்தான்..
"என்னடா காலங்காத்தால சாப்புடாம தூங்கிட்டு இருக்க"என கத்திக்கொண்டே வந்த மீனா அப்போதுதான் மணியின் விசும்பலை கவனித்தாள்.
"டேய் மணி என்னடா ஆச்சி?"
அவ்வளோதான் கேட்டதுதான் தாமதம்..திட்டத்தின் ஆரம்பம் வெற்றிகரமாய் முடிந்த சந்தோசத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் "எம்மே... நேத்..து... முத்..து. பாண்டி.. அண்ண்..ன் கடைக்கு.. போய்ட்ருந்த..ப.. நாய்.. கடிச்..சிடுச்சம்மேமெமே....
வார்த்தை தவணை முறையில் வந்தாலும்'நாய்'என சொல்லும்போது அழுகையை சற்று நீட்டி நல்லாவே நாடகம் ஆடினான்.
"என்னது நாய் கடிச்சுதா? என்னங்க...உங்க புள்ள செஞ்ச காரியத்தை பாத்திங்களா..மணியின் காதுமடலை இழுத்துபிடித்து கரகரவென ராஜேஷ் முன்னால் நிறுத்தினாள்.
"நான் சும்மாதான் போய்ட்ருந்தன்..திடீர்னு கடிச்சிடுச்சிப்பா"
"என்னடா சும்மதான் போன செமந்துகிட்டு போனேனுட்டு.. ஒன்னெல்லாம் பட்டினுபோட்டு கொன்னாதான் உருப்படுவ.. ஏய்.. நாளேலிருந்து இவனுக்கு பச்சத் தண்ணிகூட குடுக்காத.. அப்படி ஏதும் கொடுத்தின்னா உனக்கும் சேத்துதான் வாத்துமானம்(திட்டுதல்) கெடைக்கும் சொல்லிப்புட்டேன் ஆமா..மூஞ்சிய் பாரு கழுதையாட்டம்.. கடிக்கக்கூடாதா எடத்துல கடிச்சா தெரிஞ்சிருக்கும் சேதி.. நமக்குன்னு வந்து வாச்சதா பாரு.. போ..போய் அவனுக்கு முகம் கழுவி சட்டைபோட்டு ரெடி பன்னு டாக்டர்போய் பாத்துட்டு வாறேன்"
"புள்ள செஞ்ச தப்புக்கு தூக்கிபோட்டு நாலுமிதி மிதிக்காம நம்மக்கிட்ட கோவத்த பாரு..ஹூம்" சொல்லியவாறே கோபத்தில் அப்படி செய்தால் கழுத்து சுளுக்கிகொள்ளாத என நினைக்கும்படி கழுத்தை ஒரு வெட்டு வெட்டி மணியின் காதை பிடித்து இழுத்து வெடுக்கென்று இழுக்கவே கீழே விழுந்தவனை மறுபடியும் சட்டைகாலர் பிடித்து பலியாட்டைபோல் பாத்ரூம் கூட்டிச்சென்றாள்.
"அப்பாடா ஒரு வழியா நாய்கடி பிரச்சனை முடிய போவுது..இப்படி நாடகம் ஆடலனா சிவா சொன்ன மாதுறி நாய் விசம் தலைக்கேறி நாய்போல் கத்தி... போரவன் வாரவனெல்லாம் கடிச்சி.. அம்மாடீ.. இந்த நல்ல விசயத்த சாய்ங்காலம் சிவாகிட்ட சொல்லனும்..
இதுக்கெல்லாம் காரணம் அந்த பாழப்போன அந்த வங்குநாய்தானே! இருக்கட்டும் இருக்கட்டும் இந்த வாரம் எப்படியும் அது கதைய சிவா,ராமுகிட்ட சொல்லி முடிச்சாதான் நிம்மதி" மனசுக்குள் சபதம் எடுத்துக்கொண்டான் நாய்கடி மணி.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
ஒரு நாயை வைத்து கிராமிய பேச்சு வழக்கில் கதை நல்லா இருந்தது.
நம்மையும் கதை நடக்கும் இடதுக்கே அழைத்துப்போனதுபோல இருந்தது.
இன்னமும் நிரைய யதார்த்தமான கதைகளை அனுப்ப வாழ்த்துக்கள்.
நல்ல கதை
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஷேக்
ஒரு நாய்க்கு நல்ல ஒரு ரோல் குடுத்து பாவம் வில்லன் ரேஞ்சுக்கு காட்டிங்க.. பேச்சு நடை நல்லா இருந்தது .. ;)
Ramya Karthick B-)
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் வழியில் மரங்கள் கிடையாது
ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது
அன்பு ஷேக் அவர்களுக்கு
ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்தேன். ஆனால்... குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருந்தால்தானே ரசித்துப் படிக்க முடியும்!! ஒன்றிரண்டு இடங்களில் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். இப்படித் தாராளமாக இருந்தால்... ;)) கதை எழுதுவது மன்றத்தில் பேசுவது போன்றதல்லவே. நீங்கள் ஒரு எழுத்தாளராக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனில் பிழையின்றி எழுதுதல் முக்கியம்.
அடுத்த கதை எழுதியதும் அட்மினுக்கு அனுப்புமுன் ஒன்றுக்கு நான்கு முறை வாசித்துப் பாருங்கள். எழுதிய அன்றே 'ப்ரூஃப்' பார்க்காமல் இரண்டு நாட்கள் கழித்துப் பார்க்கலாம். இது உதவும். உடனே படித்தால் கண் மனதில் உள்ளதையே படிக்கும். ;) பிழைகள் புலப்படாது போய் விடும்.
வேறு யாரையாவது விட்டு வாசிக்க வைத்துப் பார்ப்பதுவும் நல்லது.
அவசரப்படாமல் நேரம் எடுத்து மெதுவே தட்டச்சு செய்யுங்கள்.
முயற்சி செய்வீர்களானால் இன்னும் அதிகம் பாராட்டுப் பெறுவீர்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா
பி.கு
உங்களுக்கு மட்டும் இப்படி எழுதிவிட்டேன் என்பதாக எண்ண வேண்டாம். பல கதைகள் இன்னமும் படிக்கவில்லை. ;)
இமா
ஷேக்... கதை நல்லா இருக்கு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஷேக், உங்களோட நாய்க்கடி நல்லாத்தான் இருக்கு. அதுல வர்ற மணி நீங்கதானோ ;) வசனங்கள் சாயம் பூசப்படாமல் எதார்த்தமா இருக்குப்பா. வாழ்த்துக்கள்.
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
முதலாவதாக எனது கதையை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கு என் நன்றி!எல்லா புகழும் இறைவனுக்கே!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
இப்பதான் என் கதைகளுக்குப் பின்னூட்டம் கொடுத்து முடித்தேன்.
இனி எல்லாருடைய கதைகளையும் படித்து பின்னூட்டம் கொடுக்க வேண்டும்.
அன்றே ஆமினாவுக்கும் பதிவு போட வேண்டும் என்று நினைத்தேன். வேலைப் பளு காரணமாக பதிய முடியவில்லை.
இமா சொல்வது போல் பிழைகளை நேர் செய்தால் போதும். எல்லார் மனதிலும் அருமையான கதைக் கருக்கள் கொட்டிக்கிடக்குது.
நான் 2007ல் ஒரே கதையை மாற்றி மாற்றி 12 தடவை கையால் எழுதினேன்.
இன்று தட்டச்சு செய்கிறேன்.
ஒரு கதையைத் தட்டச்சு செய்த பிறகு குறைந்த பட்சம் 15 முதல் 20 முறைகள் படிப்பேன்.
என் கதைகளிலும் ஏதாவது குறைகள் இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டுமாறு எல்லோரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
ஜேமாமி
கோமு மேடம் நன்றி!ரொம்ப நாளாக இதுபோன்ற ஒரு கதை எழுத வேண்டும் என் மனதில் ஆசை.அது இந்த கதையின் மூலம் நிறைவேறியது.இப்போதெல்லாம் எதார்த்தத்தின் மேல் கவனம் அதிகாமாய் போகின்றது..ந்ன்றி உங்களது அன்பிற்கும் பாராட்டுதலுக்கும்!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
நன்றி ஆமினா.
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ரம்யா மேடம் நன்றி உங்களது தொடர்சியான பாசத்திற்கும் பாராட்டுதலுக்கும்!வில்லன் நாய் இல்லை மேடம்.மணிதான் என்னை பொருத்தவரை..சரியா?
உங்களை போன்றவர்களது அன்பும் ஆதரவும் இருக்கும்போது இன்னும் எழுதுவேன் இதுபோன்று.நன்றி!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
அன்பு இமா மேடம் அவர்களுக்கு
நன்றி உங்களது அக்கறைக்கும் அன்பிற்கும்!
ஒரு விஷயத்தை நான் இப்போது மனம் திறந்து சொல்லவேண்டும்.எனது எழுத்துப் பிழை பற்றி அட்மின் அண்ணாவும் நிறைய இடங்களில் சுட்டிகாட்டியுள்ளார்.நான் பொதுவாகவே எந்த கதை எழுதிய பிறகும் அதை இன்னொரு முறை நீங்கள் சொலவதுபோல் வாசித்து பார்த்ததில்லை.மேலும் இன்றும் கூட அறுசுவையின் யூனிகோட் பயன்படுத்திதான் எழுதுகிறேன்.கூகுல் போன்ற தளங்களில் உள்ள தமிழ் எழுத உதவும் முறைகளை கையாள்வதில்லை.இதில் என்ன பிரச்சனை என்றால் அறுசுவை யூனிக்கோட் பயன்படுத்தி எழுதும்போது கட்டம் சிறியதாக இருப்பதால் பிழைகள் கண்களுக்குத் தெரிவதில்லை.
நீங்கள் தவறை சுட்டிகாட்டியதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை.நான் ஏற்கனவே சொன்னதுபோல் கலைஞன் என்பவன் சிலைபோல்.விமர்சனங்கள் உளிபோல்.நீங்கள் செதுக்க செதுக்க சிலை இன்னும் அழகாகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.நன்றி!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
கல்பனா மேடம் நன்றி உங்கள் பாராட்டுதலுக்கு.
அதில்வரும் மணி நான் என்றாலும் இதுபோல் சிறுவனாக இருக்கும்போது நிறைய அனுபவம் உண்டு.குறிப்பாக அந்த ஓணான் விஷயம்.
நிஜவாழ்க்கையில் நடந்த விஷயங்களை கதை உருவம் கொடுக்கும் போது அது இன்னும் எதார்த்தமாக இருக்கும் என்பது என் எண்ணம்.
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
தப்பா நினைச்சுக்காதீங்க, கதை புரியவே இல்ல, உங்க கதை மேல தப்பு இல்ல, ஏன்னு தெரியல, 2, 3 தடவை படிச்சேன், ப்ளீஸ் தவறா நினைக்காதீங்க. இருந்தாலும் வாழ்த்துக்கள், என் மேல கோபப்பாடாதீங்க.
அன்புடன்
பவித்ரா
வனிதா மேடம் நன்றி உங்களது பாராட்டுதலுக்கு!உங்களது கதை இப்போதெல்லாம் படிக்கமுடியவில்லையே ஏன்?அதென்ன எப்போது கமென்ட்ஸ் குடுக்கும்போதும் ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்கிறீர்கள்?
மனதில் ஏதும் வைத்துக் கொள்ளவேண்டாம்.நன்றி!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஜெயந்தி மேடம் நன்றி உங்கள் அறிவுரைகளுக்கு!
நீங்கள் செய்வதுபோல் நான் கதை எழுதியபிறகு 10 அல்லது 15 தடவை இல்லாவிடினும் ஒரு 5 தடவை படித்துப் பார்த்தாலே கண்களில் பிழை தட்டுப்படும்.
இனி வருங்காலங்கலில் அதை பின்பற்றுகிறேன்.நன்றி உங்களது அன்பிற்க்கும் அக்கறைக்கும்!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
என்ன பவித்ரா இதெல்லாம்?நான் ஏன் உன்மேல் கோபபட வேண்டும்?எனக்கு ஒரு விஷயம் ஆச்சர்யம் அளிக்கிறது.எல்லோரும் கதைபடித்து எழுத்துப்பிழை மட்டுமே சுட்டிக் காட்டினார்கள்.நீ மட்டும் புதிதாக கதை புரியலேன்னு சொல்றியேப்பா!
கதை புரியாமலேயே பாராட்டிய உன் அன்பிற்கு ஒரு ஜே!
இன்னும் இரண்டு முறை படித்து பார் சகோதரி!அப்படியும் புரியாவிட்டால் உனக்கு நான் கதைப்பற்றி விளக்கம் அளிக்கத் தயார்! நன்றி பவித்ரா!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஏண்டா மணி நீ திருந்தவே மாட்டியா? அது குலைச்சா நீ கல்லெடுத்து அடிப்பியோ?. மவனே நான் மட்டும் கிட்டே இருந்திருந்தேன்னு வெச்சுக்கோ, கைய அப்படியே ஒடிச்சி அடுப்பில வச்சிருப்பேன். டேய் மணி, நீ டாக்டரை பார்க்க போறதுக்குள்ள இன்னும் பத்து நாய் கடிக்கனும்டா. ஷேக் சார் போதுமா?. இன்னும் வேனுமா?.
அன்புடன்
THAVAM
நானும் முன்னாடியே படிச்சுட்டேன் இத சொல்ல தான் தயங்கி தயங்கிட்டு இருந்தேன். என்ன ஷேக் சொல்லவறீங்க. வாயில்லா ஜீவனை துன்புறுத்தல் ஆகாதுனு தான சொல்றீங்க. இல்ல நான் தான் மரமண்டையா இருக்கனானு தெரியல. இத்தன பேருக்கு புரிந்தது எனக்கு மட்டும் ஏன் புரியல ச்ச. ஷேக் ஆனாலும் பாராட்டுக்கள் ஷேக் இது எதுக்குன்னா உங்க ஊக்கத்திற்காக
NHM WRITER டவுன்லோடு செய்துகொள்ளுங்கள். ரொம்ப சுலபமாக இருக்கும். அருமையாக தமிழ் அடிக்கலாம்.
அன்புடன்
ஜெமாமி
மணி தம்பி தவமணி அண்ணா வீட்டுப்பக்கம் போவதாக இருந்தால் ஜாக்கிரதை!
அப்புறம் கவண்டமணி டயலாக்தான்..கல்லக்கண்டா மணியை காணோம்.மணியை மணியை கண்டால் கல்லக்காணோம்.
அப்புறம் ஏடாகூடமா ஏதும் நடந்துச்சுனா நான் ஒன்னும்செய்யமுடியாது...ஒக்கே.
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
மாமி உங்கள் உதவிக்கு நன்றி!போட்டியும் பொறாமையும் நிறைந்த இந்த உலகத்தில் அடுத்தவரின் முன்னேற்றத்தில் அக்கறைகொண்ட உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
தேவி சுரேஷ் மேடம் ரொம்ப நன்றி வெளிப்படையான கருத்துகளுக்கு.
இந்த கதை ஏதும் மெசேஜ் சொல்வதற்கு எழுதப்பட்டது அல்ல.எப்போதும் எனது கதையில் ஏதும் இருக்கும்.ஆனால் என்னை அறியாமலேயே இந்த கதையில் விலங்குகளை,அதுவும் நாய் போன்ற நன்றியுள்ள விலங்குகளை காயப்படுத்துவது கூடாது எனும் கருத்து இருக்கிறது.எப்போதும் என் கதையில் ஏதும் விஷயம் இருந்து இதில் அது இல்லையென்பதால் அந்த குழப்பம் உங்களுக்கும் பவித்ராவுக்கும் வந்திருக்கலாம்!நன்றி உங்களது பாராட்டிற்கு!விமர்சனத்திற்கு!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
உங்கள காயப்படித்தி இருந்தா மன்னிச்சுக்கோங்க உங்கள என் நண்பனா நினைச்சு தான் அந்த உரிமையில் தான் சொன்னேன். நான் எதுவுமே இல்லைனு சொல்லல, நான் புரிஞ்கிட்டதும் இதுதான் விலங்குகளை துன்புறுத்தக் கூடாதுங்கிறது. அப்போ எனக்கும் இந்த கதை புரிஞ்சிடுச்சு ஐ.
ஐயோ தேவிமேடம் நீங்கள் மன்னித்துவிடுங்கள் என்று கேட்டதுதான் எனக்கு இப்போது வருத்தமாக இருக்கிறது.
விமர்சனங்களால் நான் காயப்பட்டது கிடையாது மேடம்.
அப்பாடி உங்களுக்கும் ஒரு வழியாக கதை புரிந்துவிட்டது!இறைவா நன்றி!இதுபோல் பவித்ராவிற்கும் புரியவைத்துவிடு இறைவா.
நீங்களும் எனது தோழி என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.நன்றி தோழி!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஷேக் ,
கடவுள் பாதி மிருகம் பாதிங்கற கமலஹாசனோட பாட்டு மக்களுக்கு பிடிச்சிருக்கோ இல்லியோ கண்டிப்பா உங்களுக்கு பிடிச்சிருக்கும்ன்னு உறுதியா நம்பலாம் போலிருக்கு உங்க கதையிலிருந்து.நாயை வைத்து நல்லாய்தான் கதை விடுகின்றீர்கள்.
வாழ்த்துக்கள் ஷேக்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
கதை நல்லா இருக்கு.
எழுத்துப் பிழைபற்றி நிறைய பேர் சொல்லிவிட்டார்கள். அடுத்த கதையில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இமா மற்றும் ஜெ மாமி சொன்ன விசயங்களை பின்பற்றப்பாருங்கள். நிறைய மாற்றங்களைக் காண்பிக்கும். வாழ்த்துக்கள்
அன்புடன்,
இஷானி
///கடவுள் பாதி மிருகம் பாதிங்கற கமலஹாசனோட பாட்டு மக்களுக்கு பிடிச்சிருக்கோ இல்லியோ கண்டிப்பா உங்களுக்கு பிடிச்சிருக்கும்ன்னு உறுதியா நம்பலாம் ///
அப்படியெல்லாம் இல்லை யோகராணி மெடம்.எதோ நாய் வைத்து ஒரு கதை எழுத நினைத்தேன் அவ்வளவுதான்.அதோடு சிறுவயதில் நடந்த சம்பவங்களையுன் சேர்த்து எழுதினேன்.
உங்கள் பாராட்டுதலுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
என்னை மறக்காமல் என் ஒவ்வொரு கதைகளையும் பாராட்டி,குறைகளை சுட்டிக்காட்டுவதற்கு நன்றி!
நன்றி இஷானி மேடம்.அதை நேற்றே தீர்மானித்துவிட்டேன்.தொடர்ந்து உங்களது குறை நிறைகளை எதிர்பார்க்கிறேன்.ஊக்கத்திற்கு நன்றி!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஷேக், கதை புரியுது. ஆனால், அந்த வாயில்லா ஜீவனை கொடுமைப் படுத்துவதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அந்த பையனை கொடுமைப்படுத்துவதாக எழுதி இருக்கிறீங்க. இதெல்லாம் நடைமுறையில் நடக்கும் சம்பவங்கள் என்றாலும் படிக்கும் போது ரொம்பவே கஷ்டமா இருக்கு. தவறாக எண்ண வேண்டாம்.
இயல்பான நடையில் கதை நகர்த்தி செல்லும் விதம் அருமை.
வாணி