வெண்டை கத்தரி புளிக்கறி

வழங்கியவர் : ஆமினா
தேதி : வியாழன், 19/08/2010 - 16:10
ஆயத்த நேரம் : 10 நிமிடங்கள
சமைக்கும் நேரம் : 15 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 4 நபர்கள்
- வெண்டைக்காய் - 100 கிராம்
- கத்தரிக்காய் - 100 கிராம்
- புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
- வெந்தயம் - சிறிதளவு
- தக்காளி - 2
- வெங்காயம் - 1
- தனியா தூள் - 2 கரண்டி
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 3
- கறிவேப்பிலை - தாளிக்க
- கடுகு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- எண்ணெய் - 2 மேசை கரண்டி
- உப்பு - தேவைக்கு தகுந்தாற் போல்
- புளியை சுடுநீரில் ஊற வைக்கவும். வெண்டைக்காயை 1/2 இஞ்ச் நீளத்திற்கு வெட்டி வெறும் சட்டியில் பசை போக வதக்கவும்.
- வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம்,வெந்தயம், தாளிக்கவும்.
- பின் கறிவேப்பிலை,பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் தக்காளி மற்றும் எல்லா தூள்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்.
- பிறகு புளி கரைசலை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
- பின்னர் கத்திரிக்காய், வெண்டைக்காய், உப்பு சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.
- நீர் வற்றும் வரை வைத்து சுண்டிய பின் இறக்கவும்.
Note:
எல்லா வகை குழம்பு,சாதத்துடன் அருமையான ஜோடியாக இருக்கும். சுண்ட வைத்த புளிகுழம்பு போல் இருப்பதால் கஞ்சியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். தேவைபட்டால் சின்ன வெங்காயம் , வெள்ளை பூடும் சேர்க்கலாம்.கத்தரிக்காய் சேக்காமலும் செய்யலாம். மண் சட்டியில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். அதே சமயம் தண்ணீர் விரைவில் வற்றும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
ஆமினா,
மண் பத்திரம் கிடைக்காது பா
புளி சேர்த்து நல்ல குறிப்பு
மேலும்பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்
அன்புடன்,
கவிதா
வித்தியாசமா இருக்கும் வெண்டைக்காய் புளி சேர்த்து புளிக்குழம்பு செய்வேன், ஆனா இந்த மாதிரி செய்ததில்லை. ட்ரை பண்னிட்டு சொல்றேன். கத்திரிக்காய் வதக்க வேண்டாமா?
அன்புடன்
பவித்ரா
மண் பாத்திரம் இருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு தான் சொன்னேன். மத்த படி நானும் வெறும் பாத்திரத்தில் தான் செய்வேன். ஏன்னா எனக்கும் அதுக்கும் ஆகாது. ஏதாவது கோபம் வந்தா அதை தான் முதலில் உடைப்பேன்! (என் கையில் அடிக்கடி நழுவதால் உபயோகிக்க பயம் )
ஆனா அம்மா இன்னும் சில குழம்புகளுக்கு மண்பாத்திரத்தில் தான் சமைப்பார்கள். அம்மியில் தான் இஞ்சி,பூண்டு,மசாலா எல்லாம் அரைப்பாங்க. எனக்கும் பாக்க ஆசையா இருக்கும். ஆனா நேரமும்,பொறுமையும் தான் இல்ல:(
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கவிதா. செய்து பாருங்க!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
பவி வெண்டைக்காயில் வழுவழுப்பான பசை நீங்க அதை வதக்குவது என் வழக்கம். அப்போது தான் குழம்பில் போட்ட பிறகும் அந்த வழுவழுப்பு குழம்புக்கு பரவாது.எல்லாரும் அப்படி தான் செய்வார்கள். ஆனால் கத்திரிக்காயில் அந்த வழுவழுப்பு இல்லையே! அதான் அதை வதக்க தேவையில்லை.
கஞ்சி அதிகம் இருந்தா கொட்ட மனசு வராது பா. அதுனால இப்படி புளிகுழம்புன்னு சொல்லி ஏமாத்தி கொடுக்குறது என் ஆத்துக்காரர் வீட்டிலுள்ளவர்களுக்கு!
அது பிடிச்சு போனதுனால இப்ப சாம்பார்,ரசம் இருந்தால் கண்டிப்பாக இதை செய்யணும்:)
செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க!!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
வெண்டைக்காயின் வழ,வழப்புத்தன்மையால் அதை தனியாகத்தான்
வத்க்குவேன். அதிலிருந்து சிரிது மாறுபாட்டுடன் இந்தக்குறிப்பு பார்த்ததும் பண்ணத்தோன்றியது. புளி சேர்ப்பதால வெண்டையின் வழ,வழ்ப்பு போயே
போச். நல்ல குறிப்பு.
அதனால் தான் அதை வதக்குவேன்.
செய்து பார்த்தாச்சா?
மிக்க நன்றி பா.
இனி அடிக்கடி செய்து பாருங்க :)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஆமி,
ஒரே நாள்ள எத்தனை குறிப்புகள் அனுப்பி இருக்கீங்க..
வெண்டைக்காயும், கத்தரிக்காயும் சேர்த்து கடையல் செய்து இருக்கிறேன். ஆனால் உங்க ரெசிப்பி வித்தியாசமா இருக்கு. கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.
மேலும் குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.
ஒரு நாளைக்கு ஒன்னு தான் பா அனுப்புனேன்!
சீக்கிரம் செய்து பார்த்துட்டு சொல்லுங்க. அடுத்து உங்க பின்னூட்டத்திற்காக காத்திருக்கிறேன்!
நன்றி உங்கள் தொடர்ச்சியான பாராட்டுக்களுக்கு
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
வெண்டக்காய் கத்தரி புளிக்கறி வித்யாசமா இருக்கு ஆமினா கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லறேன் ஆமி.... தொடர்ந்து குறிப்புகள் வழங்க வாழ்த்துக்கள்.
அன்புடன்
நித்யா
சீக்கிரம் செய்து பார்த்துட்டு சொல்லுங்க! ஆவலா இருக்கேன் எப்படி இருந்தது என கேட்க :))
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
புளிக்குழம்பு சூப்பர் நானும் இதைவிட கொஞ்சம் மாற்றமாக செய்வேன்
இதுவும் நன்றாக இருந்தது நன்றி..
வாழு, வாழவிடு..