Stories

முன்கோபம் - வனிதா

அன்று இரவு பேச்சு அப்படி ஒரு வாக்குவாதத்தில் முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. பத்மநாபன் தன் மகள்களுடனும், மனைவியுடனும் பேசிக்கொண்டிருந்தார். திடீரென இளைய மகளின் கணவர் தன்னிடம் கோபமாக பேசியதைப் பற்றி மூத்தவள் சொல்ல, பேச்சு பிரச்சனை ஆனது.

கோபத்தில் "இப்படி வாய் கொழுப்பா பேசி பேசித்தான் இன்னைக்கு இப்படி நிக்குற" என்று ஆத்திரப்பட்டார் பத்மநாபன்.

வாய் பேசாமல் தன் குழந்தையை எடுத்து கொண்டு அறைக்கு போனாள் ராதா. மறுநாள் காலையில் இரவு பிரச்சனைப் பற்றி பாக்கியம் பத்மநாபனிடம் பேசினாள்.

"என்ன இருந்தாலும் நீங்க ராதா'வ அப்படி பேசி இருக்க கூடாது. உங்களுக்கு கோவம் ஏன் இப்படி வருதோ.. ராத்திரி அழுதுட்டே இருந்தா. அவளே பாவம் புருஷன் பேச்சை தாங்காம கை பிள்ளையோட நம்மகிட்ட வந்திருக்கா, அவகிட்ட அன்பா பேசுங்கன்னு எத்தனை முறை சொல்றது? ராத்திரியே பேசி இருப்பேன்... சரி உங்க கோவம் கொஞ்சம் குறையட்டும்'னு தான் எதுவும் சொல்லல. உண்மையிலேயே அன்னைக்கு சின்ன மாப்பிள்ளை அவகிட்ட கோவமா பேசினப்போ நானும் இருந்தேன். அவர் அவளைவிட வயசுல சின்னவர், அப்படி பேசினா அவளுக்கு கோவம் வரத்தான் செய்யும். அப்படியே அவ அனுசரிச்சு போகணும்'னு நீங்க நினைச்சிருந்தா கூட அவகிட்ட அதை அன்பா சொல்லி இருக்கலாம்... இப்படி கோவமா கத்தி அவளை அழ வைக்கணுமா?? என்னைக்கு தான் உங்க முன்கோவம் போகுமோ??? இப்படியே நானும் இத்தனை வருஷம் உங்க கூட குப்பை கொட்டிட்டேன்."

"சரி... நான் பேசினது தப்பு தான் பாக்கியம். என்ன பண்ண சொல்ற... ஏதோ ஒரு ஆதங்கம், கோவம்... சட்டுன்னு பேசிட்டேன். விடுமா. ராதா சாப்ட்டாளா?? என்ன காலைல இருந்து குழந்தை சத்தம் கூட இல்லை... இன்னுமா தூங்குறாங்க?!"

"தெரியல... ராத்திரி தூங்காம அழுதுட்டு இருந்தாளேன்னு நானும் காலைல கொஞ்சம் தூங்கட்டும்'னு போய் எழுப்பல. நீங்க போய் கூப்பிடுங்க. கோச்சிகிட்டு இருக்க போறா... "

கையில் காப்பியுடன் எழுந்து ராதாவின் அறைக்கு போனார் பத்மநாபன். படுக்கையின் மேல் அவர் கண்ணுக்கு கிடைத்தது கைப்பேசியின் கீழே ஒரு பேப்பர் தான். புரியாமல் காப்பியை மேஜை மேல் வைத்துவிட்டு பேப்பரை எடுத்தார். மகளின் கடிதம்!!!

//
அப்பா... என் திருமணம் உங்கள் விருப்பம் போல் தான் நடந்தது. எத்தனையோ கஷ்டங்களை ஆரம்பத்தில் இருந்து உங்கள் மனம் வேதனை அடையும் என்று சொல்லாமல் வாழ்க்கையை நடத்தினேன். கணவரின் அடி உதைகளை கூட வாங்கி இருக்கிறேன்.... என்றும் எதிர்த்து பேசியதில்லை. ஆனால் அவர் உங்களை அவமானப்படுத்தி பேசியதை தாங்க முடியாமலே எதிர்த்து பேசினேன். அது என்னை இன்று வாழாவெட்டியென பட்டம் கட்டி கொண்டு வந்து விட்டு விட்டது. என்னிடம் அன்பு காட்ட நீங்க இருக்கீங்க என்ற நம்பிக்கையில் இத்தனை நாள் இருந்தேன். எப்போது நான் வாழாவெட்டி என்று குத்தி காட்டி நீங்கள் பேசினீர்களோ அப்போதே புரிந்து கொண்டேன், நான் இங்கு வந்தது தவறு என்று. நான் உங்கள் மகள். எங்கும் என் சுய மரியாதையை இழந்து வாழ விரும்பவில்லை. நீங்கள் என்னை அப்படி வளர்க்கவும் இல்லை. உலகின் ஏதாவது ஒரு ஓரத்தில் என் மகனுடன் நிச்சயம் தலை நிமிர்ந்து வாழ்வேன். என்னை தேட வேண்டாம்.

உங்கள் அன்பு மகள்,
ராதா

//

கடிதத்தை படித்ததும் பத்மநாபன் கைகள் வெடவெடத்தது.

"ராதா... நான் பேசினது தப்பு தான்... இப்படி ஒரு தண்டனையை எனக்கு கொடுத்துடாதம்மா... எங்கம்மா இருக்க, ராதா... " பதறினார்.

வீட்டில் அனைவரும் ஆளுக்கொரு பக்கம் தேடினார்கள். பயன் இல்லை!!!
இது நடந்து 5 வருடங்கள் ஓடிவிட்டது... இன்றும் வாசலையே பார்த்து வழி மேல் விழி வைத்து தன் மகளுக்காகவும், பேரனுக்காகவும் காத்திருக்கும் பத்மநாபன் கண்களில் கோபம் இல்லை, கண்ணீர் மட்டுமே மிச்சம்.


3.25
(20 votes)
Your rating: None






,
கதை சுருக்கமாக நன்றாக இருக்கிறது.இன்னும் நிறைய எழுதுங்கள்.
அன்புடன் செபா.

வனிதா,
முன் கோபம் கதை நன்றாக உள்ளது. அதுவும் அந்த கடைசி வரியின் பன்ச் சூப்பர்.

ஷார்ட் அண்ட் ஸ்வீட் !!!

பட்டிமன்ற ஞாபகத்தில // போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன் :-)

அன்புடன்,
இஷானி

வனிதா, உங்களோட முன்கோபம் கதையை படிச்சுட்டு எங்களுக்குதான் முன்கோவம் வந்தது ;) என்னாப்பா மீதி கதை எங்கே? அழகா கொண்டு போயிருக்கிங்க கதைய. ஆனா, அவசரத்துல போட்டுட்டு போன மாதிரி இருக்குப்பா :) வாழ்த்துக்கள். அடுத்த முறை பெரிய்ய்ய்ய்ய்ய்ய கதைய எதிர்பார்க்கிறேன்.

நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)

நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது

வனிதா, உங்களோட முன்கோபம் கதையை படிச்சுட்டு எங்களுக்குதான் முன்கோவம் வந்தது ;) என்னாப்பா மீதி கதை எங்கே? அழகா கொண்டு போயிருக்கிங்க கதைய. ஆனா, அவசரத்துல போட்டுட்டு போன மாதிரி இருக்குப்பா :) வாழ்த்துக்கள். அடுத்த முறை பெரிய்ய்ய்ய்ய்ய்ய கதைய எதிர்பார்க்கிறேன்.

நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)

நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது

வனிதா, நல்லா இருக்கு உங்கள் கதை.
வாணி

வனிதா மேடம் கதை நன்றாக உள்ளது..குறைகள் கண்களுக்கு தெரியவில்லை.தொடர்ந்து எழுத வாழ்துக்கள்.நன்றி1

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

படிக்கரவங்களின் முன்கோபத்தையும் தூண்டி விடுதே உங்க எழுத்து.
அதுதானே எழுத்தின் வெற்றி .இல்லையா. கடைசியில் வைத்திருந்த பஞ்ச்
வரிகள் சூப்பபா.

அண்ணா... நீண்ட நாள் ஆச்சே கதை வராதுன்னு மறந்தே போனேன் அதை... வந்துடுச்சே!!! மிக்க நன்றி அண்ணா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட! அட! வனிதா கதைக்கு முதல் கருத்து யார் சொல்லி இருக்கிறாங்க!! ம். ;)))

வனிதா, ஸ்டாக் வச்சு இருக்கிறதை எல்லாம் தொடர்ந்து எடுத்து விடுங்க. பாராட்டுக்கள்.

அன்புடன் இமா

இமா

செபா ஆன்ட்டி... நீங்க அதுவும் முதல் பின்னூட்டம்!!! இதைவிட பெரிய சந்தோஷம் வேறு என்ன?? ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஆன்ட்டி. நலமா இருக்கீங்களா? வாலு பொண்ணு நலமா? ;)

ஹர்ஷா... அடிக்கடி இப்போலாம் உங்க பதிவுகள் பார்த்து பழகிடுச்சா, வரலன்னா தேட ஆரம்பிச்சுட்டேன்... ;) மிக்க நன்றி.

இஷானி...

//பட்டிமன்ற ஞாபகத்தில // போட்டுட்டீங்கன்னு // - வேலை பார்க்கர காலத்தில் மெயில் அடிக்கும்போது பழகினது ''//''. வேலைய விட்டேன் ஆனா இதை விட முடியல. :((

சரி எப்படியோ அதை பயன்படுத்தினா பட்டி மக்கள் எல்லாம் ஆஜர் ஆயிடுவாங்க.... ;) மிக்க நன்றி இஷானி.

கல்பனா...

//என்னாப்பா மீதி கதை எங்கே// - காக்கா தூக்கிட்டு போயிடுச்சு ;(
//அடுத்த முறை பெரிய்ய்ய்ய்ய்ய்ய கதைய எதிர்பார்க்கிறேன்.// - கண்டிப்பா கல்பனா. கலக்கல் கல்பனா சொன்னா மறு பேச்சே கிடையாது. மிக்க நன்றி :)

வாணி... மிக்க நன்றி. எங்கே உங்க கதை வந்து சில காலம் ஆயிடுச்சே!!! பிசியா இருக்கீங்களா?? சீக்கிரம் அனுப்புங்க... நான் உங்க கதைகளுக்கு ரசிகை.

ஷேக்... //குறைகள் கண்களுக்கு தெரியவில்லை// - தப்பிச்சுட்டேன். மிக்க நன்றி :)

கோமு... //படிக்கரவங்களின் முன்கோபத்தையும் தூண்டி விடுதே உங்க எழுத்து// - இதுல ஏதும் உள் குத்து இருக்காப்போல இருக்கே ;) எப்படியோ படிச்சு பின்னூட்டம் போட்டுட்டீங்க... சந்தோஷம் :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல கதை, கோபத்தில் அவசரப்பட்டு நாம் பேசிவதால் பின்பு வருத்தப்பட நேரிடும் என்பதை அழகாக சொல்லிருக்கீங்க. வாழ்த்துக்கள், உண்மைக்கதையா இல்லை கற்பனையா?

அன்புடன்
பவித்ரா

இமா... இதையே தான் நானும் செபா அன்ட்டிக்கு பதிவில் போட்டேன். மிக்க நன்றி இமா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி

பாவம் அந்த பெண் எத்தனை நம்பிக்கையில் அவள் பிறந்த வீட்டிற்கு வந்திருப்பாள். மனம் பாரமாகிவிட்டது.கோபம் வாழ்க்கையை சட்டென வேறு திசையில் மாற்றிவிடும் என்பது உண்மைதான்.. . நல்ல கதை.. வாழ்த்துக்கள்..

Ramya Karthick B-)

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் வழியில் மரங்கள் கிடையாது
ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது

என்னாப்பா இப்படி சொல்லிட்டீங்க. இந்த உள்குத்து பற்றியெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாதுப்பா. உங்க எழ்த்தோட வீரியம் பற்றி வேர எப்டி சொல்ரது தெரிலைபா. உங்க ஓரொரு கதையைப்படித்தும் பின்னூட்டம் கொடுதிருக்கேனே.

கோபம் ஆளயே கொன்றுவிடும், அதான் அந்த தந்தை உயிருடன் செத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் கோபப்பட்டதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? கதை ரத்தின சுருக்கம், சொல்லவந்ததை நச்சுன்னு சொல்லிட்டீங்க வனிதா பாராட்டுக்கள். ம் ம் ம் தொடருங்கள் உங்கள் கதைகளை

அன்பு வனி!
அன்பு மொழியால் எங்களை அடைக்காக்கும் உங்களின் கதை நெஞ்சை நெகிழ வைத்தது.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் வரும் கதையை சொல்லி
பாசம் என்றால் என்ன என்கிற விசயத்தை இதயத்துடிப்பின் மூலம் உணர வைத்த வனிதாவே .... பாராட்ட மொழி இல்லையே!

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நல்ல கருத்தை அழகான கதையா சொல்லியிருக்கீங்க!

சுருக்கமா இருந்தாலும் அதில் உயிர் இருந்தது.

காட்சிகள் கண் முன் வந்து போனது. கண்டிப்பாக கல்யாணம் ஆன பிறகு பிறந்த வீட்டில் யாரவது திட்டினால் ஒரு ரோசம் வந்துவிடுகிறது. நானும் அனுபவித்துள்ளேன். ஆனா அம்மா வீட்டை விட்டு அத்தை வீட்டுக்கு தான் வருவேன். ஓடி போகுற அளவுக்கெல்லாம் தைரியம் இல்ல!

அருமையான கதை!
வாழ்த்துக்கள்!

தொடர்ந்து எழுதுங்கள்............!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பவித்ரா... மிக்க நன்றி. கதை படிச்சு ரகசியமெல்லாம் கேட்க கூடாது ;)

ரம்யா... மிக்க நன்றி. நீங்களும் என்னை மாதிரி எல்லா கதையும் படிச்சு ஃபீல் ஆவறீங்க ;(

கோமு.. நான் இமா'வை கலாட்டா பண்ற மாதிரி சும்மா உங்களையும் கலாட்டா பண்ணேன்... தப்பா நினைக்காதிங்க ;) நீங்க எப்பவுமே என்னுடைய எந்த பதிவும் விட்டதில்லை என நன்கு தெரியும், வரலன்னா தான் தேடுவேன் :D

கௌரி.. மிக்க நன்றி. //ம் ம் ம் தொடருங்கள் உங்கள் கதைகளை// - முயற்சி பண்றேன் சரக்கு தான் பத்தல ;(. ஹிஹிஹீ...

யோகராணி... உங்க பாராட்டை படிச்சுட்டு வனி குதிக்க ஆரம்பிச்சுட்டா... மிக்க நன்றி :)

ஆமினா... மிக்க நன்றி. அங்க கோச்சுகிட்டு இங்க, இங்க கோச்சுகிட்டு அங்க??? நல்ல பாலிஸி. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மேடம் ,
சுருக்கம்+தெளிவு+நேர்த்தி
மேலும் பல கதைகள் எழுத வாழ்த்துக்கள்

அன்புடன்,
கவிதா

கவிதா... //சுருக்கம்+தெளிவு+நேர்த்தி// - புதுவகை பின்னூட்டமும் கூட!!! :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா

கதை அருமை. என் பெயரைப் பார்த்ததும் என்ன மாதிரியான கேரக்டர்-னு தான் முதல்ல யோசிச்சேன். கதை படிச்சு முடிச்சதும் அப்பாடி நம்ம பேர் டேமேஜ் ஆகல... அப்படின்னு ஒரு திருப்தி... மேலும் பல நல்ல கதைகள் எழுத வாழ்த்துக்கள்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வனிதா மேடம் கதை ரொம்ப அருமையா, நச்சுனு இருக்கு ஆனா நான் கொஞ்சம் கோவமா இருக்கேன்.......கதை சீக்கரமே முடிஞ்சிடுச்சு....... மேலும் நிறைய, பெரிய கதைகள் தர வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட் வடு
உங்க கதைய படிச்சதும் இந்த குறள் தான் ஞாபகம் வந்தது

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

கதை நல்லாயிருந்துச்சுபா.

ஆமா, முன்கோபத்துனால அவங்க அப்பாக்கு தண்டணை கிடைச்சுருச்சு!
அப்ப நம்ம ராதாவும் முன்கோபத்துல தான வீட்ட விட்டுப் போனாங்க அவங்களுக்கு என்ன ஆச்சு! சொல்லாம விட்டுடீங்களே!.சும்மா ஒரு கியுரியாசிட்டிதான்! அதனாலதான் இந்தப் பதிவு.

Don't Worry Be Happy.

கதை அருமை.காத்திருக்கும் தந்தையின் மனதை கண்ணீரில் முடித்தது என்ன நியாயம்?

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ராதா... மிக்க நன்றி :) உங்க பெயர் உள்ள ஒரு தோழி எனக்கு இருந்தார்... வெகு காலம் முன்.

நித்யா... மிக்க நன்றி //ஆனா நான் கொஞ்சம் கோவமா இருக்கேன்.......கதை சீக்கரமே முடிஞ்சிடுச்சு....... // - நம்ம கதை படிச்ச பிறகும் கோவமா??? வரப்புடாதே!!! ;)

மீரா கிருஷ்ணன்... மிக்க நன்றி. :)

ஜெயலக்ஷ்மி... மிக்க நன்றி :)

//நம்ம ராதாவும் முன்கோபத்துல தான வீட்ட விட்டுப் போனாங்க அவங்களுக்கு என்ன ஆச்சு// - இல்லையே!! அவங்க பாவம் மனசொடிஞ்சு போனாங்க. :((

ஆசியா... ஆசியா!! ஆசியா!!! ஹையா.... எங்க போனீங்க இத்தனை நாள்??? உங்களை காணாம :( வனி ரொம்ப அப்செட் ஆயிட்டா. மிக்க நன்றி ஆசியா. நீங்க ஊருக்கு போயிருக்கீங்கன்னு சீதாலஷ்மி சொன்னாங்க. இனி அடிக்கடி வருவீங்களா?? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அது சரி நீங்க எங்க போனீங்க? எல்லாரும் தேடறாங்க

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா.... என்னை தேடினாங்களா???!!! நம்ப முடியலயே ;) நான் தான் உர்ரை சுற்ற போயிட்டனே!!!! எங்க ஆள் ரொம்ப நாளைக்கு பின் ஊர் பக்கம் வந்தார்... பிள்ளைகளோடு ஊரை சுற்றினோம். அதான் இந்த பக்கம் தலைய காட்ட முடியல. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா