மொச்சை குழம்பு | arusuvai


மொச்சை குழம்பு

வழங்கியவர் : harshaa
தேதி : வெள்ளி, 20/08/2010 - 17:24
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
3.666665
6 votes
Your rating: None

 

 • மொச்சை கொட்டை - 2 அல்லது 3 கைப்பிடி
 • உருளை கிழங்கு - 2 (நடுத்தர அளவு)
 • வெங்காயம் - ஒன்று (பெரியது)
 • தக்காளி - 2 (நடுத்தர அளவு)
 • இஞ்சி-பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
 • பச்சை மிளகாய் - 2
 • கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
 • மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
 • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
 • தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
 • தேங்காய் - ஒரு பத்தை
 • சோம்பு - சிறிதளவு
 • புளி - கொட்டைபாக்கு அளவு
 • எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு

 

மொச்சை கொட்டையை 6 முதல் 8 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர், அதன் தோலை பிதுக்கி எடுத்தால் பிதுக்கு பருப்பு தயார். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி சிறுத் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

வெங்காயம் மற்றும் தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து மஞ்சள் தூள், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி நன்கு குழைந்தவுடன் பிதுக்கி வைத்துள்ள மொச்சையை சேர்த்து மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

பிதுக்கு பருப்பு வெந்ததும், வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்க்கவும். சிறிது நேரம் கொதித்தவுடன், உருளை கிழங்கில் உப்பு, காரம் இறங்கி இருக்கும்.

இதனுடன் தேங்காய் மற்றும் சோம்பு அரைத்த அந்த விழுதினை சேர்க்கவும்.

தக்காளியின் புளிப்பு போதவில்லையென்றால், கொட்டை பாக்கு அளவு புளியை கரைத்து ஊற்றவும்.

மொச்சை- உருளைக்கிழங்கு குழம்பு தயார். மேலே சிறிது கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். இது இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். தோலை நீக்கி விடுவதால் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் எளிதாக சாப்பிட முடியும். உடம்புக்கு நல்லது.


ஹர்ஷா.

மொச்சைக்குழம்பு பாக்கவே நல்லா இருக்கு. செய்து பாத்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்ரேன். ஓ. கே.வா?

ஹாய் ஹர்ஷா

தெளிவான செய்முறையோட விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். மேலும் பல குறிப்புகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!

செய்து பார்த்துவிட்டு பிறகு சொல்கிறேன்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அட்மின் அண்ணாவுக்கு நன்றி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவுக்கு எனது நன்றிகள்.

கோமு,

கோமு,
முதலில் வந்துள்ள உங்கள் பதிவைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. கண்டிப்பாக செய்து பாருங்கள். பதிவுக்கு நன்றி.

ஹாய் ஆமி,

ஹாய் ஆமி,
வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் பதிவு நிறைய ஊக்கம் அளிக்கிறது. உங்கள் பதிவுக்கு நன்றி. கண்டிப்பாக செய்து பாருங்கள்.

அன்பரசி

அன்பரசி,
மொச்சை குழம்பு நல்லா இருக்கே
கண்டிப்பாக செய்து பார்த்து விடுகிறேன்
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹர்ஷா

சூப்பர் குறிப்பு ஹர்ஷா... நான் சில நாட்கள் வெளி ஊர் போறேன், வந்ததும் அவசியம் செய்துட்டு சொல்றேன் :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிதா,

கவிதா,
பின்னூட்டத்துக்கு நன்றி. கண்டிப்பா செய்து பாருங்க. உங்களுக்கு பதில் போட லேட் ஆயிடுச்சு. Sorry.

வனிதா

வனிதா,
உங்க பதிவுக்கு நன்றி. ஊரில் இருந்து வந்தவுடன் செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

I usually prepare dhal

I usually prepare dhal kari,Tamirand kulubu using Mochai.U tried gravy ..fantastic dear....