ஈஸி உல்லன் டெடி பியர்

தேதி: August 21, 2010

4
Average: 3.3 (22 votes)

 

தெர்மாக்கோல்/காலண்டர் அட்டை
உல்லன் நூல் - பச்சை, ஆரஞ்ச் நிறங்கள்
கருப்புநிற வெல்வெட் துணி
பெவிக்கால்
கண்
ஸ்டிக்கர் பொட்டு
தெர்மாக்கோல் பால்ஸ் - பச்சை, ஆரஞ்ச் நிறங்கள்

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
பச்சைநிற உல்லன் நூலை 5 செ.மீ அளவில் அளந்து மொத்தம் 25 சுற்றுகள் சுற்றி நூலை நறுக்கி விடவும். பச்சைநிற உல்லன் நூலை 5 செ.மீ அளவில் நறுக்கி எடுத்துக் கொண்டு அந்த நூலின் முனையை இரண்டாக பிரித்து வைக்கவும். சுற்றி வைத்திருக்கும் நூலின் நடுவில் இந்த மெல்லிய நூலை வைத்து நன்கு இறுக்கமாக முடிச்சு போட்டுக் கொள்ளவும். முடிச்சு போட்டு வைத்திருக்கும் இந்த நூல்களின் இரண்டு பக்கத்திலும் நடுவில் கத்திரிக்கோலை விட்டு நூலை நறுக்கி விடவும்.
மேற்சொன்ன அளவில் பச்சைநிற நூல்களை சுற்றி 2 காதுப்பகுதிக்கும், 7 செ.மீ அளவில் 25 சுற்றுகள் சுற்றி இரண்டு கால் பகுதிக்கும் எடுத்துக் கொள்ளவும். அதேப் போல் ஆரஞ்ச் நிற நூல்களை 10 செ.மீ அளவில் சுற்றிய நூல் தலைப்பகுதிக்கும், 14 செ.மீ அளவில் சுற்றிய நூல் உடல் பகுதிக்கும் எடுத்துக் கொள்ளவும். சுற்றிய எல்லா நூல்களிலும் அதன் மேல் முனையையும், கீழ் முனையையும் கத்தரிக்கோலால் நறுக்கி விடவும்.
இப்போது நறுக்கின நூலின் முனையை பார்க்கும்பொழுது ஒவ்வொரு தனித்தனி துண்டுகளாக இருக்கும். தனித்தனி துண்டு நூல்களின் ஒவ்வொரு நூலும் நான்கு நூலால் சுற்றப்பட்டிருக்கும். அதனை தனித்தனி இழைகளாக பிரித்தெடுக்கவும். (படத்தில் உள்ளது போல்)
இதேப் போல் காது, தலை, உடல், கால் பகுதிக்கான எல்லா நூல்களையும் தனித்தனி இழைகளாக பிரித்து வைக்கவும். நூலின் ஒரங்களை கத்திரிக்கோல் வட்டமாக நறுக்கி விடவும்.
ஒரு காலண்டர் அட்டையின் முன்பக்கம் முழுவதும் கருப்பு நிற வெல்வெட் துணியை பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும்.
வெல்வெட் துணி ஒட்டிய அட்டையில் தலைப்பகுதியை வைத்து இரண்டு கண்களை பெவிக்கால் தடவி ஒட்டவும். ஸ்டிக்கர் பொட்டை சிறிய முக்கோணம் அளவில் வெட்டி மூக்கு பகுதியாக ஒட்டவும். அதன் கீழ் சற்று தள்ளி வாய் பகுதியாக முழு ஸ்டிக்கர் பொட்டை ஒட்டவும்.
அடுத்து காது, உடல், கால் பகுதிக்கான உல்லன் நூலை படத்தில் உள்ளது போன்று ஒட்டிக் கொள்ளவும்.
இப்போது அட்டையின் மேல், கீழ் முனையை அலங்கரிக்கப்பதற்கு அதன் ஒரங்களில் தெர்மாக்கோல் பால்ஸை வளைவு வளைவாக வைத்து ஒட்டவும். ஒரு வளைவு ஆரஞ்ச் நிறத்தாலும், மற்றொரு வளைவு பச்சைநிற தெர்மாக்கோல் பால்ஸாலும் அலங்கரிக்கவும்.
மேல்பக்கம் ஒட்டும் போது மாற்றி ஒட்டவும். ஒரு வளைவு பச்சைநிறத்திலும், மற்றொன்று ஆரஞ்சு நிறத்திலும் ஒட்டிக் கொள்ளவும். ஈஸி உல்லன் டெடி பியர் ரெடி. காலண்டர் அட்டைக்கு பதிலாக தெர்மாக்கோல் ஷீட்டில் வெல்வெட் துணி ஒட்டியும் செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

நாங்க ஒவ்வொரு நூலில் உள்ள இழையும் பிரித்து பிறகு சேர்த்து நடுவில் முடிச்சு போடுவோம். கஷ்ட்டமான வேலையா இருக்கும் :(

ஆனா இந்த முறை ரொம்ப சுலபமா இருக்கே!!!

அசத்திட்டீங்க !!!

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நீங்களும் செய்யலாம் பகுதில
நானும் நிறைய பாக்குறேன். ஆனா ஒண்ணு கூட பண்ண மாட்டேங்கறேன். எனக்கு சோம்பேறித்தனம் ஜாஸ்தி.. நீங்க பண்ணிருக்குற உல்லன் டெட்டி பியர் பாக்க ரொம்ப அழகா இருக்கு. செய்யனும்னு ஆசையா தான் இருக்கு. அட்லீஸ் இந்த பொம்மையாவது செய்து பாக்கனும். ட்ரை ப்ணறேன்.

ரொம்ப அழகா ஈஸியா புரியற மாதிரி செய்துள்ளீா்கள்
வாழ்த்துக்கள்

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அழகா இருக்கு டெடி. உண்மையாவே ஈஸியான குறிப்பாக இருக்கு. அடுத்த க்ராஃப்ட் க்ளாஸுக்கு சொல்லிக் குடுக்கிறேன் என் குட்டீஸுக்கு.

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகா இருக்கு டெடி. நானும் இந்த டெடிய ஸ்கூல் படிக்கும் போது செய்து இருக்கேன். வாழ்த்துக்கள்.

en magaloda craft work enna seyalam exibition la vaikkalam thing pannitu erunthoam ramba thanks nalla erukku and super............

டெட்டி பியர் ரொம்ப அழகா இருக்கு செய்யறதுக்கு சுலபமாவும் இருக்கு

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta