வேர்க்கடலை சட்னி

தேதி: August 21, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (8 votes)

 

வேர்க்கடலை - அரை கப்
வெங்காயம் - பாதி
காய்ந்த மிளகாய் - 3
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கு
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க


 

வெங்காயத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாயை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.
இப்போது எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
வேர்க்கடலை சட்னி தயார். இது இட்லி மற்றும் தோசைக்கு நல்ல காம்பினஷன். இது நல்ல சத்தானதும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை, அனுப்பிய சில மணி நேரங்களிலேயே வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.

ரொம்ப சிம்பிளான குறிப்பு பா. செய்து பார்த்துட்டு சொல்கிறேன்

வாழ்த்துக்கள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் ஆமி,
பதிவுக்கு நன்றி. செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

ரொம்ப ஈசியான குறிப்பா இருக்கு. செய்து பாத்துட்டு சொல்ரேன்

ரொம்ப சுலபமாக செய்ய கூடியதாக உள்ளது, மிக்க நன்றி Harshaa

கோமு,
பதிவுக்கு நன்றி. கண்டிப்பாக செய்து பாருங்க.
உங்களுக்கு, ஆமியின் பூண்டு சாத குறிப்பில் ஒரு பதிவு போட்டேன். பார்க்கலையா?

ஜெயஸ்ரீ,
உங்கள் பதிவுக்கு நன்றி. உங்கள் பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும். என் அக்காவின் தோழி பேரும் ஜெயஸ்ரீ தான்.

நீ சொன்ன பிறகுதான் அந்தப்ப்திவு பார்த்தேன். நானும் 2, 3, குறிப்பு
அனுப்பி 10 நாட்களுக்கு மேல ஆயிடுத்து. போட்டோ எதுவும் இணைத்து அனுப்பலை ஏன் வரலை தெரியலையே?

கோமு,
கண்டிப்பாக குறிப்புகள் வெளிவரும். சீக்கிரம் விளக்கப்படங்களுடன் அனுப்புங்க. எங்களுக்கும் செய்து பார்க்க ஈசியாக இருக்கும்.

அன்பரசி,
நாளைக்கு இந்த சட்னி தான்
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
பதிவுக்கு நன்றி. கண்டிப்பாக செய்து பாருங்க.
மிகவும் எளிமையான குறிப்பு இது.

அன்பரசி,
உங்க வேர்கடலை சட்னி நல்லா இருந்தது பா...
காலைதான் செய்தேன்
மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
சட்னி செய்து பார்த்துட்டீங்களா? நன்றி. கேட்கவே (படிக்கவே) ரொம்ப சந்தோஷமா இருக்கு. பதிவுக்கும் நன்றி.

இதுவரை நான் சட்டினியில் புளி சேர்த்தது கிடையாது. இந்த முறை புளி சேர்க்கலாம் என்று உள்ளேன். மிக்க நன்றி. தொடரட்டும் சமையல் பயணம்.

shagila

ஹர்ஷா சட்னி பாக்கவே சாப்பிடனும்போல இருக்கு.. நான் தேங்காய் சேர்த்து தான் அரைப்பேன்.. நாளைக்கே நீங்க சொன்ன மாதிரி செய்து பாத்துட்டு சொல்றேன். வாழ்த்துக்கள்பா..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஷகிலா,
புளி சேர்த்து செய்து பாருங்க. கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும். உங்க பதிவுக்கு நன்றி.

ராதா,
எங்க அம்மா எப்பவும் இப்படி தான் செய்வாங்க. யாரும் சமைக்கலாம்-ல பார்த்தப்போ எல்லா வேர்க்கடலை சட்னி குறிப்புகளிலும் தேங்காய் சேர்க்கப் பட்டிருந்தது. அதனால் தான் இதை போட்டேன். செய்து பாருங்க. பதிவுக்கு நன்றி.

ஹர்ஷா, உங்கள் ரெசிப்பிகள் எல்லாமே நன்றாக இருக்கு. வேர்க்கடலை சட்னி, மேதி ரைஸ் இரண்டும் விருப்ப பட்டியலில் சேர்த்து விட்டேன். நேரம் கிடைக்கும் போது கட்டாயம் செய்து பார்க்க வேண்டும்.
வாணி

வாணி,
விருப்பபட்டியலில் சேர்த்தாச்சா? நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா செய்து பாருங்க. உங்க பதிவைப் பார்த்ததும் சந்தோஷமா இருக்கு.

ஹர்ஷா... இன்னைக்கு தோசைக்கு உங்க வேர்கடலை சட்னி தான். ரொம்ப நல்லா இருந்ததுங்க. அம்மா'கும் பிடிச்சுது. எங்க வீட்டில் கொஞ்சம் வித்தியாசமா செய்வோம்.... இனி உங்க முறையும் அடிக்கடி செய்வோம். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
வேர்க்கடலை சட்னி செய்து,பின்னூட்டம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி.அம்மாவுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.அம்மா மாலே வந்து இருக்காங்களா? கேட்டதாக சொல்லவும்.

எனக்கு ஒரு சந்தேகம் வெங்காயம் பச்சை வாசனை வராதா