உடனடி உப்புகண்டம்

image

வழங்கியவர் : ஆமினா

தேதி : ஞாயிறு, 22/08/2010 - 15:52

ஆயத்த நேரம் : 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 45 நிமிடங்கள்

பரிமாறும் அளவு : 4 நபர்கள்

2.5
4 votes
Your rating: None
 

 

  • பீப் கறி -1 கிலோ
  • நீள பட்ட மிளகாய் -15
  • இஞ்சி,பூடு விழுது - 50 கிராம்
  • மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
  • கறிவேப்பிலை -1 கொத்து
  • உப்பு -தேவைக்கு
  • எண்ணெய் - 3 மேசைகரண்டி

 

  • பீப் கறியை நடுத்தர அளவாக வெட்டி சுத்தம் செய்யவும்.
  • குக்கரில் கறி,பட்ட மிளகாய்,இஞ்சி பூடு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 8 முதல் 10 விசில் வரை வைத்து அவிக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பின்னர் கறிகலவையை கொட்டி வதக்கவும்.
  • 1 கிலோ கறி 1/2 கிலோ ஆக சுருளும் வரை அடுப்பில் இருக்க வேண்டும்.
  • நன்கு சுருண்டு மொருக வந்த பின் இறக்கவும்.
  • இது உப்புகண்டம் சுவையில் இருக்கும்.

Note:

உப்பு கண்டம் கிடைக்காத நாட்களில் இது போல் செய்யலாம். வெங்காயம்,தேங்காய்,தக்காளி சேர்க்காததால் 3 நாள் வரையிலும் வைத்து சாப்பிடலாம். பக்ரீத் நாளில் கிடைக்கும் கறியில் செய்வது வழக்கம். இது போல் செய்து பீரிசரில் வைத்து தேவைப்படும் போது மட்டும் லேசாக வதக்கி சாப்பிடலாம். அதன் எண்ணெயை (வாசம் அதிகம் கிடைப்பதால் விரும்பி சாப்பிடுவர்) சோற்றில் பிரட்டி சாப்பிடலாம். நீள பட்ட மிளகாயில் அதிக காரம் கிடைக்காது. நன்கு பொரிந்ததால் மிளகாயும் வற்றல் போல் சுவையாக இருக்கும். ஆட்டு கறியிலும் பெரிய துண்டுகளாக நறுக்கி செய்யலாம்(4 விசில் மட்டும்). சாம்பார்,ரசம் போன்ற குழம்புகளுக்கு நல்ல ஜோடி. இதை உப்பு கறி, பொரித்த கறி,பீப் ப்ரை எனவும் அழைப்பார்கள்.







ஆமினா இதைதான் எங்க ஊரில் சுக்கா வறுவல் என்று சொல்லுவோம்.ஆனா பீப் இல்லை மட்டனில் தான் செய்வோம்.நல்லெண்ணை ஊற்றினால் பர்ஸ்ட் கிளாஸா இருக்கும்.very nice receipe

ரீம்

அடுத்த முறை நான் நல்லெண்ணெய் ஊற்றி செய்து பார்க்கிறேன். மட்டனிலும் செய்யலாம். நான் ஊரில் பீபில் தான் செய்வார்கள். உப்புகண்டம் சாப்பிட ஆசை வரும் போதெல்லாம் இப்படி செய்றது;)

இன்னும் நிறைய பெயர் இருக்கு இதற்கு. எங்க ஊர்ல நிறைய சொல்லுவாங்க. அடுத்த முறை கேட்டுட்டு சொல்கிறேன்.

வருகைக்கு நன்றி!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா