முட்டை கபாப்

image

வழங்கியவர் : தளிகா

தேதி : ஞாயிறு, 22/08/2010 - 18:36

ஆயத்த நேரம் : 30 நிமிடம்

சமைக்கும் நேரம் : 1 மணிநேரம்

பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு

5
3 votes
Your rating: None
 

 

  • முட்டை வேக வைத்து நீளமாக நாலாக நறுக்கியது - 3
  • உருளைகிழங்கு - 2
  • குருமிளகு தூளும் உப்பும் கலந்தது - 1/4 ஸ்பூன்
  • மல்லி இலை நறுக்கியது - 3 ஸ்பூன்
  • புதினா - 4 இலைகள் நறுக்கியது
  • மைதா - 1/4 கப்
  • ப்ரெட் கர்ம்ப்ஸ் - 3/4 கப்
  • வதக்க
  • =======
  • சின்ன வெங்காயம் - 10
  • இஞ்சி&பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  • கறி மசாலா தூள் - 1/2 ஸ்பூன்

 

  • முதலில் முட்டையை வேக வைத்து ஒவ்வொரு முட்டையையும் நாலாக நீளமாக நறுக்கி வைக்கவும்..மொத்தம் 12 துண்டுகள் கிடைக்கும்.அதன் மேல் மிளகும் உப்பும் கலந்து தூவி வைக்கவும்
  • மைதாவை சிறிது தண்ணீரில் மாவு போல் கலந்து வைக்கவும்
  • உருளை கிழங்கை குக்கரில் 2 விசிலில் நங்கு வேக வைத்து உடைக்கவும்.
  • பின் வதக்க கொடுத்துள்ளவற்றை வரிசையாக ஒவ்வொன்றாக 1 ஸ்பூன் எண்ணையில் வதக்கவும்..அதில் உருளை கிழங்கை சேர்த்து மசித்து விடவும்
  • மசாலா சேர்த்த மசித்த கிழங்கில் இரு கைய்யளவு உருண்டையை இடதி கைய்யில் எண்ணை தடவிக் கொண்டு வைத்து வலது கைய்யால் தட்டவும்..தட்டிய கிழங்கு மாவின் நடுவில் ஒரு முட்டை துண்டை வைக்கவும்.முட்டையின் மஞ்சள் புறம் உட்புறமாக வருமாறு வைத்தால் முட்டை பிரிந்து வெளியில் கொட்டாது.
  • பின்பு கிழங்கை முட்டையை சுற்றி மூடி உருட்டவும்..நீளமாக ரக்பி பாளின் வடிவத்தில் உருட்டவும்
  • இதே முறையில் 12 துண்டெஉகளையும் உருட்டவும்..கிழங்கினையும் 12 பிரிவுகளாக வைத்தால் அளவு சரியாக வரும்
  • பின்பு உருட்டிய கிழங்கு முட்டை கபாப்களை மைதா கலவையில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் பிரட்டி எண்ணையில் வறுத்தெடுக்கவும்

Note:

செய்ய சுலபமாகவும்..மிகவும் சுவையாகவும் இருக்கும்..பார்டிகளுக்கு பரிமாற ஏற்றது







நல்ல குறிப்பு. பெயர் பார்த்ததும் முட்டையில் கபாப்பா என நினைத்து வந்தேன். இப்பவே செய்யணும்னு தூண்டிவிடுது உங்க குறிப்பு!

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா சிறிது மாற்றம் செய்துள்ளேன் ..இது இன்னும் சுவையாக உள்ளது.முன்பு அரைத்து செய்வது கொடுத்தேன் இது வதக்கி செய்வது கூடுதல் சுவை தருகிறது..நிச்சயம் செய்து பாருங்கள்..நேற்று இங்கு கபாப் தான்

தளிகா

தளிகா மேடம்,
சூப்பரான ரெசிபி
இப்போது முட்டையில் இங்கு contamination இருப்பதால் வாங்குவது இல்லை
கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்

அன்புடன்,
கவிதா

இன்று மாலை நோன்பு திறக்க முட்டை கபாப் செய்தேன். அருமையாக இருந்தது.

குறிப்புக்கு நன்றி!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நோன்பு திறத்தலா, நோன்பு துறத்தலா..? எப்படி சொல்லணும்? நான் துறத்தல் னு சில இடங்கள்ல சொல்லி இருந்தேன். ஒருவேளை அது தப்போன்னு சந்தேகம் வந்துடுச்சு.. ரெண்டு மூணு பேர் திறத்தல் னு சொல்லி இருக்காங்க.. திறத்தல் தான் சரியா? இல்லை துறத்தல் லைத்தான் அப்படி வழக்கில சொல்றீங்களா?

ரொம்ப நல்லா இருந்தது.என் பொண்ணு நல்லா சாப்பிட்டா.இதை போல் நான் கீமாவில் செய்வேன்(கோலா உருண்டை மசாலா)

அட்மின் அண்ணா உங்கள் சந்தேகத்துக்கு நானும் பதில் சொல்லலாமா?! இந்தோனேஷியாவில் நோன்பு திறப்பதை "புக்கா புஆஸா" என சொல்வார்கள். புக்கா என்பதன் அர்த்தம் "open". அதனால் நோன்பு திறத்தல் என்பதே சரின்னு நினைக்கிறேன் :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அட்மின் அண்ணா!!!

“நோன்பு தொறக்குறது”

திறக்குவது தான் பேச்சு வழக்கில் தொறக்குறதா ஆச்சு!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இன்றே செய்து பார்த்துவிடுகிறேன், குறிப்பை படிக்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

நன்றி கவிதா

நன்றி ஆமினா..செய்துட்டீங்களா..சந்தோஷமா இருக்கு

அட்மின் நீங்க சொன்னப்ப தான் இதை பற்றி யோசிக்கிறேன்ன்..அது நோன்பு துறத்தலாக தான் இருக்குமோ...இவ்வளவு நாள் திறக்க என்றேன்.

எது எப்படியோ நோன்பு தொறந்தே ஆக வேண்டும்

தளிகா

நன்றி ரீம்,கவி,ஹேமா

தளிகா

ஹாய் தளிகா நல்லா இருக்கீங்களா முட்டை கப்பாப் சூப்பர் பா ரொம்ப நல்லா இருந்தது அப்புறம் நான் இவள்ளவு நாளா உங்க பெயரை தாளிகாணு நினைத்தான்
இப்பதான் தளிகா தெரிந்தது

ஹிஹிஹீ..பரவாயில்லைங்க நிறைய பேர் என்னை தாளிச்சிருக்காங்க..சிலவங்க தக்காளின்னு கூட நெனச்சிருக்காங்க
சுவையாக செய்து பார்த்தது சந்தோஷம் நஸ் ரீன்..என்ன பன்றது ஸ் உம் ரீ யும் சேர்ந்தால் உங்கபேரும் மாறுது

தளிகா