நிலக்கடலை சட்னி (பேச்சுலர்ஸ்க்கு)

தேதி: August 22, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

நிலக்கடலை - 50 கிராம்
பூடு-8 பல்
தேங்காய் - 3 சிறிய துண்டு
பட்ட மிளகாய்- 4
உப்பு-தேவைக்கு

தாளிக்க
கடுகு,உளுந்து-1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிதளவு
சீரகம் -1/4 ஸ்பூன்


 

நிலக்கடலையை வெறும் சட்டியில் வறுத்து தோலுரித்துக் கொள்ளவும்.

அதனுடன் பூடு,தேங்காய்,பட்ட மிளகாய்,உப்பு சேர்த்து அரைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்.

தாளித்தவற்றை அரைத்த விழுதில் சேர்க்கவும்.

சுலபமாக செய்யக்கூடிய நிலக்கடலை சட்னி தயார்.


நிலக்கடலை மொத்தமாக வாங்கி வறுத்து தோலினை உரித்து தயாராக வைத்தால் வேலை சுலபமாக முடிந்துவிடும். இட்லி,தோசை,சப்பாத்தி,நாண்,வடை,பஜ்ஜி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நீங்க கொடுக்கர குறிப்பு எல்லாமே வீட்டில் எப்பவுமே கைவசம் இருக்கும் சாமான் உபயோகப்ப்டுத்தியே இருக்கும் அதனால படிச்ச உடனே ஈசியா செய்துட முடிகிரது.

கோமு

ஆமிக்கு அந்த மாறி சமையல் தான் பிடிக்கும் :)

செய்து பார்த்து பின்னூடமிட்டதற்கு நன்றி. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு :)

இது மாறியே எல்லாவற்றையும் செய்துட்டு சொல்லனும் ஓக்கேவா கோமு!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நல்லாருக்கே, நான் செஞ்சு பாத்துட்டு சொல்றேன். பட்ட மிளகாய்ன்னா வரமிளகாய் தானே.

வறுத்து வச்சிட்டா வேணுங்கறபோது அப்படியே கூட சாப்பிடலாம் இல்லையா!

அப்படி வறுத்து வைத்த கடலையை நீங்க உப்புமா செய்யும்போது கூட போடலாம், அப்ப உப்புமா கொஞ்சம் டேஸ்டா இருக்கும்.

அன்புடன்
பவித்ரா

செய்து பார்த்துட்டு மறக்காம சொல்லிடுங்க.

அதே தான். வர மிளகாய்,காய்ந்த மிளகாய், பட்ட மிளகாய், மிளகாய் வத்தல் என நிறைய பேர் இருக்கு :)

நானும் மொத்தமா வறுத்து தோலுரித்து டப்பாவில் போட்டு விடுவேன். தேவை பட்டால் புளிசாதம்,லெமன் சாதத்தில் கூட தாளீக்கும் போது போடுவேன்

நன்றி பவி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கு ஒரு டௌட். நீங்க இந்த மாதிரி சமையல் குறிப்பு எல்லாம்
எந்த பகுதிக்கு அனுப்பரீங்க் ஆமினா? நானும் கொஞ்சம் குறிப்புகளை
தொடர்புக்கு என்று இருக்கு இல்லியா அது மூலமா அனுப்பினேன்.
ஏதுமே வரலை. ஏன் தெரியலை.

நீங்கள் குறிப்பு கொடுக்க விரும்புவதை முதலில் தொடர்புக்கு மூலம் சமையல் குறிப்புகள் குறித்து க்ளிக் பண்ணி அட்மின் அண்ணா கிட்ட சொல்லுங்க. அவங்க உங்க பெயரை சேர்த்து விடுவார்கள்.

சேர்த்த பின்னர்

எனது பக்கம்
குறிப்பு சேர்க்க
விருப்பமான குறிப்புகள்
விருப்பமான விளக்கப்பட குறிப்புகள்
வெளியேறு

இப்படி இருக்கும். குறிப்பு சேர்க்க க்ளிக் பன்ணினால் அங்கு பிரிவுகள்,காய்கறிகள், வட்டார பிரிவுகள்.செய்முறை,தேவையான பொருட்கள்,குறிப்பு, பங்களிப்பாளர் பெயர் என இருக்கும். அதில் எழுத வேண்டியது தான். ஒரு முறை சேர்க்க க்ளிக் பண்ணினால் குறிப்பு தானாகவே வந்துவிடும்.

அண்ணா எப்பவும் இவ்வளவு தாமதமாக நடந்துக்கொள்ளமாட்டார்கள். நீங்கள் அனுப்பியதும் உங்க குறிப்பு கண்டு உங்கள் பெயரை சேர்த்திருப்பார். எனக்கு என்னவோ சந்தேகமாக இருக்கிறது. முதலில் குறிப்பு சேர்க்க என்ற ஆப்ஷன் உங்க அறுசுவை விண்டோவில் தெரிகிறதா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனது பக்கம் பகுதியில் குறிப்பு சேர்க்க என்று எதுவும் இல்லியே?
பார்வையிடு மாறு, க்விஸ் டை என்று மூனு ஆப்ஷந்தான் இருக்கு
நான் இப்ப வரை ஐந்து குறிப்புகள் அனுப்பியிருக்கேன். ஒன்னுகூட வரலை
அதுதான் உங்ககிட்ட கேட்டேன் தொடர்புக்கு க்ளிக் பண்ணிட்டு அட்மின்சர்
கிட்ட மெயில் பண்ணி சொல்லனுமா?

கோமு

அது “ எனது பக்கம்” திறந்த பிறகு வரும் ஆப்ஷன்ஸ் :)

நீங்கள் லாக்கின்,லாக் அவுட் பண்ணீவீங்க இல்லையா?

புதிய உறுப்பினர்கள் பெயர்களுக்கு மேல் அதில் இருக்கா என பாருங்கள்.

இல்லையென்றால் அட்மின் அண்ணாவிற்கு உங்கள் விருப்பம் தெரிவித்து ஒரு மெயில் அனுப்புங்கள் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நீங்க சொன்னபடி தான் இருக்கு இப்போ என்ன பண்ணனும்?

ஆமினா நிலக்கடலை சட்னி செய்து பார்த்துட்டேன் ரொம்ப நல்லா இருக்குபா இட்லிக்கு செய்தேன் சூப்பரா வந்திருக்கு குறிப்புக்கு நன்றி.
கோமு சொன்ன மதிரிதான் எனக்கும் குறிப்பு செர்க்க என்னும் பகுதி இல்லை நானும் குறிப்பை தயார் செய்தபின் தொடர்புக்கு சென்று அட்மின் அண்ணவுக்கு அனுப்பனும், நீங்க சொன்ன மாதிரி செய்றேன்.

அன்புடன்
நித்யா

நன்றி பா. உங்க பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி!

இட்லி சாப்பிட்டு 4 மாசம் ஆச்சு :( ஞாபகப்படுத்திட்டீங்க!

இது மாறியே எல்லா குறிப்புகளையும் செய்து பார்த்துட்டு சொல்ல்ணும் :))

உங்க குறிப்புக்காக காத்திருக்கிறேன். சீக்கிரம் அனுப்புங்க பா.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா