ப்ரஷ் ப்ரூட் கஸ்ட்டர்ட்

வழங்கியவர் : ஆமினா
தேதி : திங்கள், 23/08/2010 - 12:20
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- கஸ்ட்டர்ட் பவுடர் (வெண்ணிலா ப்ளேவர்) - 3 மேசை கரண்டி
- பால் -1/2 லிட்டர்
- சப்ஜா விதை -5 கிராம்
- சீனி -1/2 கப் (சுவைக்கு தகுந்தபடி மாற்றலாம்)
- திராச்சை- 16
- ஆப்பிள்-1
- வாழை -2
- மாதுளை-1
- முந்திரி,பாதம்-10
- சப்ஜா விதையை 6 மணி நேரத்திற்கு முன்பே ஊற வைக்கவும். ஆப்பிள்,வாழை பழங்களை நறுக்கிக்கொள்ளவும்.
- மாதுளையை தோல் உரித்து உதிர்த்துக்கொள்ளவும். முந்திரி, பாதாமை சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.
- பாலில் தண்ணீர் சேர்க்காமல் சீனி சேர்த்து கொஞ்சம் சுண்ட காய்ச்சவும்.
- கஸ்ட்டர்ட் பவுடரில் சிறிது குளிர்ந்த நீரை ஊற்றி கரைத்து பாலில் சேர்த்து சிறிது நேரம் அடிபிடிக்காவண்ணம் காய்ச்சவும்.
- கொஞ்சம் கொழகொழப்பானது (கூல் பதத்திற்கு வந்த பின்னர்) இறக்கி ஆறவிடவும்.
- நன்கு ஆறிய பின் ப்ரீசரில் ஐஸ் கட்டியாக ஆகும் வரை வைக்கவும்.
- பின்னர் எடுத்து மிக்ஸியில் நுரை பொங்க அடிக்கவும். பின் பழங்கள், சப்ஜா விதை, முந்திரி,பாதம் சேர்த்து கிளறி ப்ரிட்ஜில் வைக்கலாம். தேவைப்படும் போது எடுத்து சாப்பிடலாம்.
Note:
ஆரஞ்சு,செர்ரி,மாம்பழம்,பலா,சப்போட்டா,அன்னாச்சி என எந்த பழம் வேண்டுமானாலும் சேர்க்கலாம். பால் காய்ச்சிய பின் சீனி சேர்த்தால் நீர்த்து போகும். அதனால் பாலோடு சேர்த்தே கொதிக்கவைக்க வேண்டும். மிக்ஸியில் அடிப்பதால் நுரை வந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டது போல் இருப்பதால் அவ்வாறு செய்ய குறிப்பிட்டேன்(விருப்பமிருந்தால் செய்யலாம்).
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
நன்றி ஆமினா.. உங்கள் குறிப்பு நன்றாக உள்ளது. நான் இது போலத்தான் செய்வேன். ஆனால் எனக்கு அந்த சப்ஜா விதை என்றால் என்ன என்று தெரியவில்லையே.. பிறகு கஸ்டர்டு பவுடர் ஆர்டினரி ப்ளேவர் தான் இருக்கு.. வேற ஃப்ளேவர் எதுவும் இங்க கிடைக்கலையே.. ஒரு வேளை அது தான் வெண்ணிலா ஃபளேவரா? எனக்காக விரைவாக குறிப்பு தந்தமைக்கு மிக்க நன்றிப்பா...
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
எள் மாதிரி இருக்கும் பா. தண்ணியில் போட்டா ஊறின பிறகு ஜவ்வரி மாறி இருக்கும். கருப்பு கலர்ல இருக்கும். ஊறிய பின் மீன் கண் போல் இருக்கும். ரோஸ்மில்க் செய்யும் போது ஊறிய விதையை தூவுவார்கள். உடலுக்கு குளிர்ச்சி. சத்தானது. வயிற்று புண் ஆற்றும். சைவம் தான் அசைவம் இல்ல. விருப்பமிருந்தால் போடுங்க.
வெண்ணிலா ப்ளேவரில் வரும் வாசம் நன்றாக இருக்கும். அதனால் அதை சொன்னேன். உங்களுக்கு எது கிடைக்கிதோ அதில் செய்யுங்கள்.
ஆமிக்கு வென்னிலா ப்ளேவர் தான் பிடிக்கும்:)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஓஓஓஓ இந்த சர்பத்-ல போடுவாங்களே அதுவா?.... இனிமே இங்க கிடைச்சா வாங்கி யுஸ் பண்ணிடுறேன். தேங்க்ஸ்பா...
ம்ம்ம்ம் யம்மி யம்மி.. எனக்கும் வெண்ணிலா ஃப்ளேவர் தான் பிடிக்கும்.. ஹைய்யா சேம் பிஞ்ச்.....
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
செய்து பார்த்துட்டு சொல்லுங்க :)
சப்ஜா விதை கிடைத்தால் விட்டுராதீங்க!!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஆமினா,
நல்ல குறிப்பு
சப்ஜா விதை கண்டிப்பாக சேர்க்க வேண்டுமா?
எனக்கு கிட்டாது
அன்புடன்,
கவிதா
கவிதா
விருப்பப்பட்டா போடலாம் பா. இல்லைனா சும்மாவே செய்யுங்க. எல்லா கலரும் இருந்தா வீட்டுல விரும்பி சாப்பிடுவாங்க. அதுவுமில்லாம சத்தானதுன்னு போடுவேன். ஊருல இருந்து வாங்கிட்டு வந்தது. இங்கேயும் எனக்கு கிடைக்காது. நோன்பு வரைக்கும் தாங்குற அளவுக்கு மட்டும் தான் வச்சுருக்கேன்:(
நன்றி கவிதா
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
இங்க கிடைக்கும் ஆமினா... நான் ஒருமுறை எள் என்று நினைத்து வாங்கிட்டேன்... அப்பறம் அத என்ன பண்றதுன்னு தெரியாம துாக்கிப்போட்டுட்டேன்.. இதுல சத்து இருக்குனு தெரியாம போச்சு.. அடுத்த முறை கிடைச்சா கண்டிப்பா வாங்கிட்டு வந்து போட்டுடறேன்... தேங்ஸ்பா..
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
உ
நான் எதையும் தூக்கி போட மாட்டென்!
குப்பையை கூட! ஹிஹிஹி!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
நீங்க வேற மாமி.. நானாவது பரவாயில்லை... என் மாமியார் இங்க வந்தப்ப அத கடுகு-னு நினைச்சு தாளிக்க போட்டிருக்காங்க.. ரொம்ப நேரமா கடுகு வெடிக்கல வெடிக்கலனு காத்துக்கிட்டே இருந்து கடைசில அது கருகிப்போச்சு... அதுனால தான் பெரிய குழப்பமா இருக்குனு அத துாக்கிப்போட்டுட்டேன்...
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
நான் முன்னலாம் சர்பத்தில் போட்டு குடுத்தால் சாப்பிட மாட்டேன். ஆனா அதோட நன்மைகள் படிச்ச போது தான் சேர்க்க ஆரம்பிச்சேன். ரோஸ் மில்க் எசென்ஸ்,சர்பத் இங்கே கிடைக்காததால் ரோஸ் மில்க் போட ரொம்ப சிரமமாக இருக்கும். ரூகப்ஸா ல வர வாசனை எனக்கு பிடிக்காது. நோன்புக்கு எப்படியும் ரோஸ்மில்க் போடணும்னு ரூகப்ஸா போட்டு தான் செய்வேன். ஆனால் நான் குடிக்க மாட்டேன். சப்ஜா விதை போட்டு குடித்தேன். அந்த வாசனை தெரியவே இல்லை. அதிலிருந்து ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு!
அடுத்து கிடைச்சா யூஸ் பண்ணுங்க!
மாமி
அப்ப உங்க வீடுலாம் குப்பையா இருக்கும்னு சொல்லுங்க ஹி ஹி ஹி!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா