ரிப்பன் பக்கோடா

தேதி: April 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

புழுங்கலரிசி - 4 கப்
கடலை மாவு - 3 கப்
வெண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க


 

புழுங்கலரிசியை நன்கு கழுவி, 6 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதை கிரைண்டரில் மிகவும் நைஸாக, முடிந்த அளவு குறைந்த தண்ணீர் விட்டு அரைக்கவும்.
அதை நன்கு ஈரம் உறிஞ்சக் கூடிய துண்டில் 2 மணி நேரம் சுற்றி வைக்கவும்.
பிறகு, அதில் கடலை மாவு, வெண்ணெய், உப்பு முதலியவையையும் கலந்து கெட்டியாகப் பிசையவும்.
மிளகாய்ப் பொடி இதற்குப் போடுவது தேவையில்லை. இருப்பினும் விருப்பமிருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், ரிப்பன் பக்கோடா அச்சில் மாவினை எடுத்து எண்ணெயில் பிழிந்து விடவும்.
கடலை மாவு புதியதாகத் திரித்துச் செய்தால் மிக ருசியாக இருக்கும்.


இதை வழக்கமாகச் செய்வதிலிருந்து, சற்றே மாறுபட்டுச் செய்யும் விதம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சில குறிப்புகள்


Comments

சித்திரா, மாலைச் சிற்உண்டிக்கு உங்கள் ரிப்பன் பகோடா செய்து சாப்பிட்டோம்.
நன்றாகவும், ரேஸ்ராகவும் இருந்தது வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.