புதினா பொடேடோ

தேதி: August 24, 2010

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புதினா - 1 கப்
கொத்தமல்லி - 1 கப்
பாலக் கீரை - 1 கப்
உருளை - 4
துவரம்பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1 (இரண்டாக வெட்டி கொள்ளவேண்டும்)
சின்ன வெங்காயம் - 10
காரட் - 1
பட்டாணி - 1/2 கப்
காப்சிகம் - 1 (சிகப்பு இருந்தால் கலர்புல்லா இருக்கும்)
பிரிஞ்சி இலை - 2
மிளகாய் தூள் - 1 tsp
கரம் மசாலா - 1/4 tsp
ஆலிவ் எண்ணெய் - 1 tsp
உப்பு - தேவையான அளவு


 

புதினா, கொதம்மல்லி மற்றும் கீரையை அரைத்து வைக்கவும்.
துவரம்பருப்பை ரொம்பவும் குழையவிடாமல் பெரிய வெங்காயம் ,பிரிஞ்சி இலை மற்றும் மற்றும் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
தண்ணீரை வடிகட்டி வெங்காயத்தையும் பிரிஞ்சி இலையையும் எடுத்து விடவேண்டும்.
உருளையை வேகவைத்து ஒன்றும் பாதியுமாக மசித்து வைக்கவும்.
எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பொடியாக நறுக்கிய காரட், குடை மிளகாய் மற்றும் பட்டாணியை சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
5 நிமிடம் பிறகு உப்பு , காரம் மற்றும் கரம் மசாலா சேர்த்து ஒரு கிளறு கிளறி மீண்டும் மூடி 8 நிமிடம் வேக விடவும்.
வேண்டுமானால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.
திறந்து அரைத்ததை சேர்த்து கிளறி 4 நிமிடம் மேலும் வேக விடவும்.
பருப்பு மற்றும் உருளை சேர்த்து கிளறி 5 நிமிடம் சிம்மரில் வைத்து இறக்கவும்.
சுவையான புதினா பொடேடோ தயார். சப்பாத்திக்கு அருமையான காம்பினேஷன்.


மேலும் சில குறிப்புகள்


Comments

லாவண்யா ,
நல்ல குறிப்பு
வித்தியாசமா இருக்கு
மேலும் பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

உங்களின் பாராட்டிற்கு நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மிகவும் ருசியான குறிப்பு. சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் நல்லா இருந்தது.

உங்களின் பின்னூடத்திற்கு மிக்க நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!