தேங்காய்பால் சாதம் சமையல் குறிப்பு - 16044 | அறுசுவை


தேங்காய்பால் சாதம்

food image
வழங்கியவர் : ஆமினா
தேதி : செவ்வாய், 24/08/2010 - 02:40
ஆயத்த நேரம் : 15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 3 நபர்கள்

 

 • அரிசி - 2 டம்ளர்
 • தேங்காய் பால் -4 டம்ளர்
 • கறிவேப்பிலை -2 கொத்து
 • ஏலக்காய் -2
 • பட்டை- ஒரு துண்டு
 • கிராம்பு-3
 • பிரிஞ்சி இலை - ஒன்று
 • எண்ணெய் அல்லது நெய்-தாளிக்க தகுந்தபடி

 

 • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி பட்டை,ஏலக்காய்,கிராம்பு,பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும்.
 • பின் கறிவேப்பிலை சேர்த்து, வெடித்து முடித்ததும் தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விடவும்.
 • நன்கு கொதி வந்த பின் களைந்த அரிசியை கொட்டி உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
 • தண்ணீர் சற்று வற்றியதும் தீயை மிதமாக வைத்து பாத்திரத்தின் கீழே தோசைகல்லும் மூடியின் மேல் கனமான பொருள் அல்லது பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தம்மில் போடவும்.
 • 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பரிமாறும் போது திறந்தால் போதும்.
கறிவேப்பிலை தான் இதற்கு வாசம் கொடுப்பது. தேங்காய் முதல் பால் தான் உபயோகிக்க வேண்டும். தரமான அரிசியில் செய்யலாம். பாஸ்மதி தேவையில்லை.வெங்காய ரெய்தா, கோழி குழம்பு,கிரேவி இவைகளோடு சேர்த்து சாப்பிட சுவை கூடும். செய்ய சுலபமானதும்,சுவையானதும் கூட


ஆமினா

ஆமினா ,
நல்ல குறிப்பு
நீங்க முன்னாடி சொன்ன தேங்காய்பால் சாதம் இது தானா?
மேலும் பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஆமி,

ஆமி,
தேங்காய் பால் சாதம், நானும் இப்படி தான் செய்வேன், கறிவேப்பிலை சேர்க்காமல். ஆனால் பிரிஞ்சி சாதம் என்று ஏமாற்றி விடுவேன்.
குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

ஆமினா தொடர்ந்து கலக்கிகிட்டு

ஆமினா தொடர்ந்து கலக்கிகிட்டு இருகீங்க வாழ்த்துக்கள் தேங்காய்பால் சாதம் சுலபமாக உள்ளது செய்துபார்கிறேன்பா
ஆமி ஆமினு பதிவுபோட்டு கீபோர்டுல என்னை பார்த்து அழுவுதுபா, கண்ணை தொடச்சுவிட்டு அழுவாதுனு இப்பதான் சமாதானபடுத்திட்டு வந்தேன்,

தொடர்ந்து நிறைய குறிப்புகள் தர வாழ்த்துக்கள் ஆமி....

அன்புடன்
நித்யா

கவிதா!

இதே தான் கவிதா!

திடீர்ன்னு தேங்காய் சாதம் செய்யனும்னு ஆசை வந்தா இப்படி செய்து விடுவேன். வேலையும் சுலபமா முடிஞ்சுடும்.

தொடர்ந்து தரும் ஊக்கங்களுக்கு நன்றி கவிதா!

செய்து பார்த்துட்டு சொல்லுங்க :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹர்ஷா

ஹர்ஷா

கறிவேப்பிலை சேர்த்து செய்து பாருங்க.நல்லா வாசனை கொடுக்கும். நீங்கள் இருக்கும் இடத்தில் கிடைக்காது தானே!

கிடைத்தால் இந்த முறையில் செய்து பார்த்துட்டு சொல்லணும்!

நன்றி பா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் நித்யா

நித்யா,நித்யான்னு டைப்பண்ணி அந்த எழுதுக்களே மறஞ்சு போச்சு!
இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா
புது கீபோர்ட் தான் மாத்தணும்

உங்கள் ஆதரவும்,ஊக்கமும் தான்!

சுலபமானது பா. செய்து பாருங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி,

ஆமி,
இங்கு கறிவேப்பிலை கிடைக்கிறது. ஆனால் விலை கொஞ்சம் அதிகம். அவ்வளவு தான். கண்டிப்பாக செய்துட்டு சொல்றேன்.

ஹர்ஷா

கிடைக்கும் போது கண்டிப்பா இந்த முரையில் செய்து பாருங்க. சாப்பிட்டுட்டு மறக்காம பதில் போடுங்க. காத்திட்டு இருப்பேன் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி,

ஆமி,
கறிவேப்பிலை கை வசம் இருக்கு. செய்துட்டு, போட்டொவே அனுப்புறேன். wait பண்ணுங்க.

ஹர்ஷா

சீக்கிரம் அனுப்புங்க. காத்திட்டு இருக்கேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா