கிட்ஸ் சிக்கன் சீஸ் பராத்தா

வழங்கியவர் : Ms. Moorthy, USA
தேதி : செவ்வாய், 24/08/2010 - 02:40
ஆயத்த நேரம் : 30 நிமிடம்
சமைக்கும் நேரம் : 20 நிமிடம்
பரிமாறும் அளவு :
- கோதுமை மாவு - 1 கப்
- எலும்பில்லாத சிக்கன் - 100 g
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- மிளகாய் தூள் - 1/2 tsp
- தனியா தூள் - 1/2 tsp
- மஞ்சள் தூள் - 1/4 tsp
- கரம் மசாலா தூள் - 1/4 tsp
- இஞ்சி பூண்டு விழுது - 1/2 tsp
- முட்டை - 1
- சீஸ் - 50 g
- எண்ணெய் - 50 g
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்தில் உப்பு சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.
- அரை மணி நேரம் கழித்து சப்பாத்திகளாக இட்டு வைக்கவும்.
- முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடித்து வைக்கவும்.
- சிக்கன் மிக்சியில் ஒரு சுத்து சுத்தி எடுக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ( 2 tsp) சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கவும்.
- தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி எல்லா தூளையும் சேர்க்கவும்.
- 2 நிமிடம் கிளறி கறியை சேர்த்து 10 நிமிடம் சிறிதளவு தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.
- துறந்து தண்ணீர் வற்றும் வரை வதக்கி கொத்தமல்லி மற்றும் சீஸ் தூவி இறக்கவும்.
- ஒரு சப்பாத்தி எடுத்து பரப்பி செய்து வைத்துள்ள மசாலாவில் இரண்டு ஸ்பூன் எடுத்து பரப்பி சுற்றி முட்டை தடவி மேலே ஒரு சப்பாத்தியை வைத்து மூடவும்.
- தவாவில் போட்டு எண்ணெய் அல்லது நெய் விட்டு இரண்டு பக்கமும் 3 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.
- குழந்தைகளின் லஞ்ச் பாக்சுக்கு ஏற்றது.
Note:
இதையே சிக்கனுக்கு பதிலாக உருளை மற்றும் காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
லாவண்யா ,
நல்ல குறிப்பு
இந்த சண்டே hiking செல்லும் போது இதை எடுத்து செல்லலாம் என்று இருக்கிறேன்
மேலும் பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்
அன்புடன்,
கவிதா
நல்ல குறிப்பு!
மேலும் பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
என்ன ஆமினா நீங்களும் இப்படி கிளம்பிட்டீங்க....
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
tried ur receipe .excellent,very nice.i used shredded mozarella cheese.
உங்களின் பின்னூடத்திற்கு நன்றி. எந்த வகையான சீஸும் பயன் படுத்தலாம். நன்றி.
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!