கோதுமை கஞ்சி (குழந்தைகளுக்கு)

image

வழங்கியவர் : Ms. Moorthy, USA

தேதி : செவ்வாய், 24/08/2010 - 06:06

ஆயத்த நேரம் : 5 நிமிடம்

சமைக்கும் நேரம் : 10 நிமிடம்

பரிமாறும் அளவு : 4

0
No votes yet
Your rating: None
 

 

  • கோதுமை மாவு - 1 கப்
  • பாதாம் - 10
  • அக்ரூட் (வால்நட்) - 10
  • சர்க்கரை - 3 tsp
  • ஏலக்காய் - 2
  • பால் - 1 கப்

 

  • பாதாம் அக்ரூட்டை வெயிலில் காயவைத்து ஏலக்காய் சர்க்கரையுடன் பொடியாக திரித்து வைக்கவும்.
  • கோதுமை மாவை வாசம் வரும் வரை வறுத்தெடுக்க வேண்டும்.
  • இப்பொழுது மாவுடன் பால் கலந்து கட்டி இல்லாமல் வைக்கவும்.
  • இதனுடன் திரித்து வைத்திருக்கும் பொடியை ( 5 tsp) சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து 8 நிமிடம் கிளறி இறக்கவும்.
  • சத்தான கோதுமை கஞ்சி தயார்.

Note:

இதனுடன் நெய் கலந்தும் கொடுக்கலாம். பாதாம் பொடியை பாலுடன் கலந்து ஸ்கூல் செல்லும் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.