ப்ரவுன் ரைஸ் புலாவ்

தேதி: August 24, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

ப்ரவுன் ரைஸ் - ஒரு கப்
பட்டாணி,காய்கறி கலவை - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)
பூண்டு - 5 பல்
நெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ - தலா 2
பிரிஞ்சி இலை - 2
புதினா - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப


 

வெங்காயத்தை நீளவாக்கிக் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
குக்கரில் நெய் ஊற்றி சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்க்கவும்.
அவை பொரிந்து வரும் போது வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு காய்கறிகளை சேர்த்து லேசாக வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்கும் போது உப்பு, அரிசி சேர்க்கவும்.
கொதி நன்கு வரும் போது புதினா, கொத்தமல்லி சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி அடங்கியதும் பிரித்து பார்த்தால் புலாவ் தயாராகி விடும்
சுவையான ப்ரவுன் ரைஸ் புலாவ் தயார். தயிர் பச்சடி, டல்மா, கிரேவியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் அனைவரும் சாப்பிட கூடியது மிகவும் சத்தானது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவி புலாவ் பார்க்க சூப்பர்ரா இருக்கு என்ன என்ன காய் சேர்த்து இருக்கீங்க ஒய்ட் ரைஸ்ல செயல்லமா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நஸ்ரீன் ,
நலமா?
பட்டாணி,பரங்கிக்காய்,காரட்,பீன்ஸ் சேர்த்தேன்
தரலாமா white ரைசிலும் செய்யலாம்
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
பிரௌன் ரைஸ் புலாவ், கலர் ஃபுல்லா அழகா இருக்கு. சீக்கிரம் 50 அடிக்க வாழ்த்துக்கள்.

கவிதா, உங்களோட பிரவுன் ரைஸ் புலாவ் சிம்ப்ளி சூப்பர்ப். மசாலா இல்லாத மிதமான மணத்தில் காய்கறிகள் சேர்ந்த ஒரு அருமையான சத்தான ரெசிப்பி. என் ஆத்துக்காரருக்கு இப்படித்தான் பிடிக்கும். தொடர்ந்து இதை போன்றே நிறைய ரெசிப்பி தரவேண்டும். வாழ்த்துக்கள். என்னிடம் பிரவுன் ரைஸ் இல்லை பாஸ்மதி அரிசியில் செய்தால் நன்றாக இருக்குமா கவிதா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா,
தாராளமா பாஸ்மதி அரிசியில் பண்ணலாம்
நானும் நிறைய எண்ணெய்,மசாலா சேர்க்க மாட்டேன் எனக்கு பிடிக்காது :-)
கண்டிப்பாக செய்து பாருங்க
நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பரசி,
ரொம்ப நன்றி
கண்டிப்பாக செய்து பாருங்க

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா
நீங்கள் செய்த புலாவ் பார்பதற்கு ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு கொஞ்ச்ம் பார்சல் பன்னுக்கப்பா.வாழ்த்துக்கள்
valli

உண்மையாய் இரு.

கவிதா பாத்தாலே இங்க வரைக்கும் மணக்கற மாதிரி இருக்கு.. சாப்பிடனும் போல இருக்கு. எனக்கு புலாவ்-னா ரொம்ப பிடிக்கும்.. செய்துபாத்துட்டு சொல்றேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பரங்கிக்காய் குழையாமல் வருமா?

எனக்கு புலாவ் மிகவும் பிடிக்கும்
பிரவுன் ரைஸ் என்றால் என்ன??

ரம்யா மேடம்,
நம்ம ஊர் கைகுத்தல் அரிசி தான்.ரொம்ப polish செய்யாமல் இருக்கும்,உமி கலர் கூட லேசாக இருக்கும்.கண்டிப்பாக வாங்கி செய்து பாருங்க எல்லா இடத்திலேயும் இப்போ கிடைக்கிறது
infact ,இந்தியாவில் இருந்து தான் மற்ற இடத்திற்கு ஏற்றுமதி ஆகுது
கண்டிப்பாக செய்து பாருங்க..
பரங்கிக்காய் ரொம்ப கனிந்ததாக போட்டால் சரியாக வராது ..கொஞ்சம் கெட்டியாக வாங்கி சேருங்கள்
உடலுக்கு நல்லது உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ராதா மேடம்,

செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வள்ளி மேடம் ,
கண்டிப்பாக அனுப்புகிறேன்
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

எனக்கு இந்த அரிசி கிடைக்காது :)

பாஸ்மதில செய்துட்டு சொல்கிறேன் நாளைக்கு.

குறிப்புக்கு நன்றி பா!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா,
இந்த அரிசி இந்தியாவில் இருந்து தான் ஏற்றுமதி ஆகுது
ட்ரை செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும்நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா