பாகற்காய் ப்ரை

image

வழங்கியவர் : ஆமினா

தேதி : செவ்வாய், 24/08/2010 - 21:02

ஆயத்த நேரம் : 20 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 5 நிமிடங்கள்

பரிமாறும் அளவு : 4 நபர்கள்

0
No votes yet
Your rating: None
 

 

  • நீள பாகற்காய் -4
  • மிளகாய் தூள்-1/2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
  • மல்லி தூள் -1 ஸ்பூன்
  • தயிர் -3 ஸ்பூன்
  • இஞ்சி,பூண்டு விழுது-2 ஸ்பூன்
  • எண்ணெய்- பொரிக்க தகுந்த அளவு
  • உப்பு-தேவைக்கு

 

  • பாகற்காயை நீளவாக்கில் இரு துண்டாக வெட்டி உப்பு சேர்த்து அரை வேக்காடாக அவிக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் சிறிது தண்ணீர் தெளித்து கையால் கிளறவும்.
  • பிறகு பாகற்காயை சேர்த்து பிரட்டி 1/2 மணி நேரம் ஊற விடவும்.
  • பின் இருஇரு துண்டாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Note:

தூள் கலவை இட்லி மாவு விட கொஞ்சம் கெட்டியான பதமாக இருக்க வேண்டும். அதிக தண்ணீர் சேர்க்க கூடாது. பாகற்காயை அரிசி கழுவிய நீரில் ஊறவிட்டு பிறகு அவித்தால் கசப்புத்தன்மை ஓரளவுக்கு நீங்கும் .







பாகற்காய் fry நல்லா இருக்கே..
பலாப்பழ போண்டா நல்லா வந்தது நேற்று மாலை செய்தேன்
வாழ்த்துக்கள்

அன்புடன்,
கவிதா

நன்றி பா.

பலாப்பழ போண்டா செய்தீகளா? கேக்கவே சந்தோஷமா இருக்கு. நன்றி பா!
நேரம் கிடைக்கும் போது இதையும் செய்யுங்க :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா