தக்காளி மிளகு ரசம்

தேதி: April 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புளி - எலுமிச்சம் பழ அளவு
தக்காளி - ஒரு கப் மசித்தது
மிளகுத்தூள் - முக்கால் தேக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கை பிடி
பூண்டு - 8 பல்(சிறியது)
ரசப்பொடி - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
தண்ணீர் - 6 கப்
உப்பு - தேவையான அளவு


 

புளியை போதுமான நீரில் ஊறவைத்து சாறெடுக்கவும். சாறு ஒரு கப் இருக்க வேண்டும்.
இதில் தண்ணீர், தக்காளி, அரை தேக்கரண்டி மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
3 நிமிடம் கொதித்த பிறகு, இன்னொரு பக்கம் வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
கடுகு சேர்த்து அது வெடித்ததும் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து மிகக்குறைந்த தீயில் சிறிது வதக்கவும்.
பிறகு தூள்களைச் சேர்த்து மீதமுள்ள கால் தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து, ஒரு தடவை பிரட்டி ரசத்தில் கொட்டி, போதிய உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோ அக்கா இன்று தக்காளி மிளகு ரசம் செய்தேன். ரொம்ப நல்ல இருந்தது என் பையன் ஹோட்டல் ரசம் போல் இருக்கு என்றார் வாங்கியதா செய்ததா?
என்று கேட்டான்.இன்று உங்கள் ரசமும், என் கேரட் பொரியலும்.தக்காளியை அரைத்து சேர்த்து கொண்டேன் என் பையனுக்கு வாயில் தட்டினால் பிடிக்காது.

ஜலீலா

Jaleelakamal

இன்று மதியம் ரசம் வைத்தேன். சூப்பராக இருந்தது.
என் பையனுக்கு மிகவும் பிடித்திருந்தது.நன்றி.
சவுதி செல்வி

சவுதி செல்வி

அன்புள்ள செல்வி!

தக்காளி மிளகு ரசம் மிகவும் நன்றாக இருந்ததென எழுதிய உங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு என் மகிழ்வான நன்றி!

அன்புள்ள ஜலீலா!

தக்காளி மிளகு ரசம் மிகவும் நன்றாக இருந்ததறிய மிக்க மகிழ்ச்சி. உங்கள் மகனுக்கு என் மகிழ்வைத் தெரிவியுங்கள். உங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு என் நன்றி!

அன்புள்ள மனோ அக்கா,
இன்று உங்கள் தக்காளி மிளகு ரசம் செய்தேன் சுவையாக இருந்தது. உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

அன்புள்ள மைதிலி!

தக்காளி மிளகு ரசம் சுவையாக இருந்ததெனக் கூறிய தங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு என் மகிழ்வான நன்றி!!

இந்த ரசத்தை நான் நீங்க சொன்ன மாதிரி நெய்யில் தாளித்தேன்.ரொம்ப வாசமா இருந்தது.சாப்பிட ரொம்ப நல்லா இருந்தது மேடம்.தங்களின் குறிப்புக்கு மிக்க நன்றி.

நெய்யில் ரசம் தாளிப்பது இதுவே முதல் முறை... வீடு முழுக்க வாசம்.. நல்லா இருந்தது மனோ மேடம். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேம் இந்த ரசம் ஹோட்டல் ரசம் மாதிரியே சூப்பரா இருண்டஹ்து.அதும் நெய்+மிளகாய்தூள் சேர்த்து செய்தது நல்ல வித்தியாசமான சுவை மேம்.நன்றி உங்களுக்கு.

அன்புள்ள மேனகா!

ரசம் மிகவும் சுவையாக இருந்தததென அறிய மிகவும் மகிழ்ச்சி! அன்பு நன்றிகளும் கூட!!

அன்புள்ள வனிதா!

பொதுவாகவே எந்த ரசம் செய்தாலும் எண்ணெயுடன் அரை ஸ்பூனாவது நெய் சேர்த்துத் தாளிதம் செய்தால் ரசம் மிகவும் மணமாக இருக்கும்.

அன்புள்ள சுகன்யா!

நான் கூறியவாறு நெய் சேர்த்து தாளிதம் செய்த ரசம் நன்றாக வாசமாக அமைந்தது எனக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது.

மனோ மேடம் தக்காளி மிளகு ரசம் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது சூப்பரா இருந்தது.

மனோ அக்கா போன வாரம் உங்கள் தக்காளி மிளகு ரசம் செய்தேன் ரொம்ப அருமை.

Jaleelakamal

அன்புள்ள சாய்!

தக்காளி மிளகு ரசம் செய்து பார்த்து சூப்பராக இருந்தது என்று எழுதியிருப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்வாக இருந்தது. உங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு என் நன்றி!!

அன்புள்ள ஜலீலா!

தக்காளி மிளகு ரசம் அருமை என எழுதியிருந்தததைப் பார்த்து மிக்க மகிழ்வடைந்தேன். உங்களின் பின்னூட்டத்திற்கு என் அன்பு நன்றிகள்!!

மனோ மேடம் இந்த ரசம் சுவையாக இருந்தது... குளிருக்கு இதமாகவும் இருந்தது.நெய் வாசமாவும் இருந்தது.

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

அன்புள்ள ஹாஷிணி!

ரசம் உங்களுக்கு சுவையாக அமைந்ததும் பிடித்திருந்ததும் அறிய மிகவும் மகிழ்ச்சி! அன்புப் பின்னூட்டத்திற்கு என் நன்றிகள்!!

மனோ மேடம் இந்த ரசத்தை செய்து சாப்பிட்டோம். மிகவும் நன்றாக இருந்தது. சூப் போல சாப்பிடவும் சூப்பராக இருந்தது. இதனுடன் சௌ சௌ பீர்க்கை கூட்டும் செய்து சாப்பிட்டோம். செய்வதற்கு எளிதாக நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.