குடை மிளகாய் தொக்கு

தேதி: August 25, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

குடை மிளகாய் -1 கப்
தக்காளி - 1/2 கப்
வெங்காயம்-1/4 கப்
கடுகு - 1 ஸ்பூன்
வர மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
சீரகத்தூள் -1/2 ஸ்பூன்
எண்ணெய் - 3 மேசை கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

குடைமிளகாய்,தக்காளி,வெங்காயம் பொடிதாக நறுக்கவும்.

எண்ணெயில் கடுகு,கறிவேப்பிலை,வரமிளகாய் தாளிக்கவும்.

பின் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,சீரகத்தூள் சேர்த்து பின் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

தக்காளி கொஞ்சம் குழைந்தவுடன் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். அரை டம்ளர் தண்ணீர்,உப்பு சேர்த்து சுருளும் வரை வேக விடவும்.

கலவை நன்கு குழைந்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் போது இறக்கி பரிமாறலாம்.


வெறும் சாதத்துடன் சேர்த்து பிரட்டி சாப்பிட சுவையாக இருக்கும். சாம்பார்,ரசம்,குருமா போன்ற குழம்புகளுடனும், பூரி, சப்பாத்தி, இடியாப்பமுடனும் நல்ல காம்பினேஷன்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆமினா,
காரமா இருக்குமா?
நல்ல காரசாரமா குறிப்பு தரீங்க
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

குடைமிளகாயில் காரம் அதிகமா இருக்காது. அதனால் தான் வரமிளகாய்,மிளகாய் தூளும் சேர்க்க சொன்னேன். இது திருப்பதியில் இருக்கும் என் நாத்தனார் சொல்லி கொடுத்தது. அங்கு எல்லாமே காரம் தான் :)

நன்றி கவிதா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா, இன்னிக்கு எங்க வீட்ல குடை மிளகாய் தொக்கு ரெசிப்பீ தான். ரொம்ப நல்லா டேஸ்டியா இருக்கு. காரம் மட்டும் நீங்க ஆந்திரா சமையல்னு குறிப்பிட்டதால கொஞ்சம் குறைச்சிட்டேன். Thanks a lot for this very good recipe.

இதுவும் கடந்து போகும்.

ஆமினா விருப்பப் பட்டியலில் சேர்த்திட்டேன். தற்சமயம் குடைமிளகாய் இல்லை. வாங்கியதும் செய்யணும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா

மிகுந்த சந்தோஷம். கிடைக்கும் போது செய்து பாருங்க கண்டிப்பா:)

இங்கே உங்க பதிவு பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

யோகா

செய்து பார்த்து பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி! எங்க வீட்டுல இந்த காரமே பத்தாது.

தோசைக்கு காரசட்னி இல்லைனா சாப்பிட மாட்டாங்க. அதை என்னால் வாயில் கூட வைத்து உப்பு சரியா இருக்கான்னு பாக்க முடியாது.

ஆனாலும் இந்த தொக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்.வாசனையும் நல்லா இருக்கும்.
மீண்டும் நன்றி யோகா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வெகு நாட்களுக்குப் பின் அறுசுவை வந்தேன்... முகப்பின் "சமீபத்திய கருத்துகள்" பட்டியலில் "யோகா" என்ற தலைப்பில் சகோதரி ஆமினாவின் பதிவை ஆர்வமாய் கிளிக்கி உள்ளே போனேன்... கடைசி பதிவில் சகோதரி கவிசிவாவிடம் "நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்கள்" எல்லாம் படித்து மேலே பார்த்தால் தான் புரிந்தது... நான் நினைத்த "யோகா" இல்லை என்று. இந்த நகைச்சுவையை பகிர்ந்து கொண்டு உங்கள் "குடை மிளகாய் தொக்கு" பதிவையும் படித்தேன். வாழ்த்துக்கள்.

உங்க பதிவு பார்த்ததும் புரிவதற்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. பிறகு தான் புரிந்து இப்போ வரை சிரிச்சுட்டே இருக்கேன். பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கும் அதே யோகா குழப்பம் வந்தது..நானும் எந்த போசோ புதுசான்னு பாக்க வந்தேன்..ஆமினா ஆமினா:-D

யோகா(லெட்சுமி)-தளிகா

இத்தன பேரை குளப்பிடுச்சா?

:))

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அன்புள்ள ஆமினா,

மிக அருமையான தொக்கு இது.நான் வாரம் ஒரு தடவை செய்வேன்.ஆனால் இதனுடன் கொஞ்சம் மாசித்தூள் அல்லது பொரித்த நெத்தலி கருவாடு சேர்ப்பேன்.

அன்புடன்
அமலா

ஆஹா மாசியும், கருவாடும் ஞாபகப்படுத்திட்டீங்களே?!!!
என் ஊரில் மீனே சரியாக இருக்காது. அதில் கருவாடா? சொல்லவே வேண்டாம். குடை மிள்காயில் சேர்த்தது இல்லை. ஆனால் தக்காளி தொக்கில் சேர்ப்பேன்.மாசமா இருக்கும் போது நெத்திலிப்பொடி கருவாடு தான் முழு போடு போடுவேன்.

ஊரில் இருந்து வரும் போதே இராமேஸ்வரத்தில் இருந்து கருவாடு வாங்கிட்டு வந்துடுவேன். மாசி கிடைப்பது கடினம். கீழக்கரையில் இருந்து தான் வாங்கிட்டு கொண்டு வருவேன். விலையும் ஜாஸ்தி.

நெய் மீன் கருவாடு சேர்த்தால் அதைவிட வாசம் அதிகமாக தூக்கும். வெறும் சாதத்தில் பினைந்தே சாப்பிடுவேன்(கருவாடுக்கு பால் ஊறும் என்பதால் முன்பு அடிக்கடி இந்த முறையில் தான் சாப்பிடுவேன்)

இப்ப பசிய தூண்டிட்டீங்க. நானும் செய்துடுறேன். வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி,
இப்போ தான் உங்க குடைமிளகாய் தொக்கு செய்தேன்.ரொம்ப நல்லா இருக்கு.நான் குடை மிளகாயை உருளைக்கிழங்குடன் பொரியலில் சேர்ப்பேன்.ஃப்ரைட் ரைஸ் செய்வேன்.ஆனால் க்ரேவி செய்தது இல்லை.உங்க குறிப்புக்கு நன்றி.

மிக்க நன்றி பா செய்துட்டு பின்னூட்டமிட்டதற்கு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நேத்துபோயி குடைமிள்கா வாங்கி வந்து இன்னிக்கு பண்ணி பாத்தாச்சு. ரொம்ப நல்லா வந்தது. ஷாம் பர்த்டேக்கு என்னஸ்ப்ஷல் ஸ்வீட் பண்ணினீங்க ஆமி?

செய்து பார்த்துட்டு பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி கோமு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா, இந்த குறிப்பு செய்வதற்கு சுலபமாக இருந்தது. நன்றாக இருந்ததுங்க. சாம்பார், ரசம் சாதத்தோடு சாப்பிட நல்ல காம்பினேஷனா இருந்தது. மிக்க நன்றி.