அரட்டை -- 2010 -- பகுதி -- 29

தூங்கிட்டு இருக்குற தோழிகள், தூங்கப் போற தோழிகள், தூங்கி முழிச்ச தோழிகள், தூங்கியும் தூங்காம இருக்குற தோழிகள்,தூங்காத மாதிரி இருந்துட்டு தூங்குற தோழிகள் எல்லாருக்கும் இந்த காங்கோ கல்பனாவின் இனிய காலை வணக்கம் :)

இவ்ளோ சிம்பிளா யாரால காலை வணக்கம் சொல்ல முடியும் சொல்லுங்க பார்ப்போம் ;)

இன்றைய நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் :)

மாமியோவ்... அது வேற அம்மா..... அறுசுவையின் அரட்டையில் ஒரே அம்மாதான்.. அது என்றுமே தாங்கள்தான்..........

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அதேதான் ராதா. இங்கெல்லாம் சும்மா பச்சையாவே சாதம் மற்றும் சம்பால் தொட்டுக்கிட்டு சாப்பிடறாங்க. அப்புறம் கோழிக்குழம்பிலும் சேர்க்கறாங்க. ஆனா நீங்க அதை சாப்பிட மாட்டீங்களே :(. மற்றபடி அதை தனியாகவெல்லாம் சமித்து நான் பார்த்ததில்லை. மலாய் மக்கள்தான் அதிகம் உபயோகிப்பாங்க. வியர்வை நாற்றத்தை பொக்கும்னு சொல்லுவாங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆமாங்க ஹேமா... ஜீரோங் பாயிண்ட்டுக்கு கழுத்துல கவிசிவானு பேர் மாட்டிக்கிட்டு வந்திருப்பாங்க... பாத்தில்லையா.. அட என்னப்பா.. நான் கூட வந்து ஆட்டோக்ராப் வாங்கினேன்.. சே மிஸ் பண்ணிட்டீங்களே.... ஓகே ஓகே அழுவாதீங்க.. அடுத்த முறை கவிசிவா-வ வீட்டுக்கு கூட்டிட்டு போய் உங்க சமையல சாப்பிடச்சொல்லி பாராட்டிடுங்க.. ஓகேவா

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

எனக்கு தெரிஞ்சு அதை சுவாமிக்கு அர்ச்சனை செய்வாங்க.. நம்ம ஊர்பக்கம் சமையலுக்கு உபயோகிப்பது கிடையாது.. ஆனா இந்த ஊர்ல பச்சையா எந்த இலைய பாத்தாலும் உடனே சமைச்சு சாப்பிடுறாங்க....என்ன கொடுமை சார் இது....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நலமா? நான்,கவி,ராதா எல்லாம் ஒரே ஊர்தான், எப்படியோ மாமி கொடுத்த விரிவான விளக்கத்தவெச்சி தமிழ்ல டைப் கத்துகிட்டிங்களே, Great

எனக்கு உங்க ஊர்ல தேவி,பரணின்னு 2 தோழிகள் இருக்காங்க.

மாமிக்கு ஓஓஒ போடுங்கப்பா

ஓஓஓஓஓஒகோ!

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஒஹ் அந்த ஆட்டோகிடாஃப் வாங்கின லேடி நீங்கதானா ராதா?!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அரட்டை வெகு வேகமா போகுது போல. ஈஸ்வரி வாங்க.... நானும் ஆபிஸில் இருந்துதான் அப்பப்ப வந்து பதிவு போடுவேன். இரண்டு நாட்களாக நானும் ஜோதியில் ஐக்கியம் ஆகலாம் என்று பார்த்தால் முடியவில்லை.

அன்புடன்
மகேஸ்வரி

அரட்டை வெகு வேகமா போகுது போல. ஈஸ்வரி வாங்க.... நானும் ஆபிஸில் இருந்துதான் அப்பப்ப வந்து பதிவு போடுவேன். இரண்டு நாட்களாக நானும் ஜோதியில் ஐக்கியம் ஆகலாம் என்று பார்த்தால் முடியவில்லை.

அன்புடன்
மகேஸ்வரி

சாரிப்பா இரண்டு தடவை பதிவாகி விட்டது.

ஹாய் கவி,

எங்கப்பா பார்த்திருப்பேன், ராதால்லாம் உங்ககிட்ட ஆட்டோகிராப் வேற வாங்கனாங்களாம், ஒரு வேளை பார்த்திருக்கலாம், பாக்காமியும் இருக்கலாம்,இல்ல பாத்தும் பாக்காமியும் இருக்கலாம், இல்ல பாக்காம பார்த்திருக்கலாம்... மொத்தமா நான் என்ன சொல்ல வரேன்னா நான் உங்கள பார்த்திருப்பேன், இப்ப ரெண்டுபேரும் பாத்தம்ன தெரிங்சிடும். என்னப்ப ஜூராங் பாயிண்ட் எப்ப வரிங்க

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மேலும் சில பதிவுகள்