பச்சைப்பட்டாணி சுண்டல்

தேதி: August 27, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

முளைகட்டிய பச்சைபட்டாணி - ஒரு கப்
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
தேங்காய் - சிறிது
கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
ஆல் பர்பஸ் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடலை பருப்பு, உளுந்து, வேர்க்கடலை - தாளிக்க


 

முதலில் தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முளைக்கட்டிய பட்டாணியை உப்பு சேர்த்து குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
பின்பு பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் கடலை பருப்பு, உளுந்து, வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
அதில் வேக வைத்த கடலையை சேர்த்து கிளறவும்.
அதன் பின்பு தேங்காய் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
இறக்கும் போது ஆல் பர்பஸ் பொடி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான பச்சைபட்டாணி சுண்டல் ரெடி.

பூண்டு பொடியை இதன் மீது தூவி சாப்பிட்டாலும் ரொம்ப அருமையாக இருக்கும். வேண்டுமானால் கொஞ்சம் எலுமிச்சை பழச்சாறு சேர்த்தும் சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்லா சத்தான குறிப்புகளா குடுத்துட்டு வறீங்க!

வாழ்த்துக்கள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

it'sveryyum.....

கவிதா,
பட்டாணி சுண்டல் குறிப்பு அருமை. முளைக் கட்டுவது எப்படி?
மேலும் நிறைய குறிப்புகள் கொடுங்க. வாழ்த்துக்கள்.

கவிதா,
நல்ல சத்தான குறிப்புங்க, வாழ்த்துக்கள்..
ஆனா ஹர்ஷா கேட்ட மாதிரி எனக்கும் எப்படி முளைக்கட்டுவதுன்னு தெரியல. கொஞ்சம் சொல்லுங்க.

Devi.

ஆமினா,
நீங்களும் செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஜெயா,

நீங்களும் செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நீங்களும் செய்து பாருங்க முளை கட்டுவது எளிது
முதலில் பயறை 8
மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
பின்பு ஒரு ஜாரில் கடலையை போட்டு அதன் வாய்
பகுதியை மெல்லிய துணி போடு இறுக கட்டி வைக்கவேண்டும்
பின்பு அதை கவிழ்த்து வைக்க வேண்டும் 5
மணி நேரத்திற்கு ஒரு முறை பச்சை தண்ணீரை திறக்காமல் ஊற்றி ஒரு முறை சுற்றி கீழே ஊற்றி விடுங்கள்
பின்பு கவிழ்த்து வைக்க வேண்டும்
இப்படியே இரு நாள் செய்தால் முளை கட்டிய பயறு கிடைக்கும்.நான் sprouts jar வாங்கி வைத்து உள்ளேன் அதிலேயே மேலே துவாரம் இருக்கும் நீங்களும் கடையில் ட்ரை செய்து பாருங்கள்
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
பதில் கொடுத்ததற்கு நன்றி. முளை கட்டுவதில் இவ்வளவு வேலை இருக்கா? நான் sprouts jar இருக்கானு கடைகளில் பார்க்கிறேன்.

கவிதா,
நன்றிங்க... நான் முயர்ச்சித்து பார்க்கிரேன். Sprouts Jar என்ன மாதிரி கடையில் கிடைக்கும். இது வரை என் கண்ணில் பட்டது இல்லை. இந்த வாரம் தேடி பாக்குரேன். :)

சாப்பிட்டாச்சா? பாப்பா என்ன பண்ணூரா?

Devi

கவிதா ரொம்ப அருமையான குறிப்பு.. அது என்னப்பா ஆல்பர்பஸ் பொடி..... இங்க ஆல்பர்பஸ் மாவு தான் கிடைக்கும். அது மைதா மாவு தான... நீங்க சொல்ற பொடி என்னது.. நான் என்னோட விருப்பப் பட்டியலில் சேர்த்துட்டேன்.. மேலும் பல நல்ல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா,
இந்த லின்கில் போய் பாருங்க.
http://www.arusuvai.com/tamil/node/15911

அன்பரசி
நீங்க கொடுத்த லிங்க் போய் பாத்தேன்பா.........தேங்ஸ்.. நாளைக்கே பண்ணி வச்சுடுறேன்... ஹர்ஷா நலமா.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா மேடம்,
செய்து பாருங்க அன்பரசி கொடுத்த லிங்கில் ஆல் பர்பஸ் பொடி குறிப்பு இருக்கு உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா