தேங்காய் சொதி

image

வழங்கியவர் : சீதாலஷ்மி

தேதி : வெள்ளி, 27/08/2010 - 22:09

ஆயத்த நேரம் : 20 நிமிடம்

சமைக்கும் நேரம் : 30 நிமிடம்

பரிமாறும் அளவு : 4-5 நபர்களுக்கு

4
3 votes
Your rating: None
 

 

  • தேங்காய் - 1 மூடி
  • காய்கள்:
  • முருங்கைக்காய் - 1
  • கத்தரிக்காய் - 1
  • அவரைக்காய் - 3
  • காரட் - 2
  • பீன்ஸ் - 3
  • பட்டாணி - 3 ஸ்பூன்
  • பட்டர் பீன்ஸ் - 3 ஸ்பூன்
  • புடலங்காய்(சிறியது) - 1
  • உருளைக் கிழங்கு - 2
  • பெரிய வெங்காயம் - 1
  • சின்ன வெங்காயம் - 15
  • வெள்ளைப் பூடு - 7
  • இஞ்சி - 1 துண்டு
  • அரைக்க:
  • பச்சை மிளகாய் - 7 அல்லது 8
  • பொட்டுக் கடலை - 4 ஸ்பூன்
  • உப்பு - 1 ஸ்பூன்
  • எலுமிச்சம்பழம் - 1 மூடி
  • கருவேப்பிலை - சிறிது
  • தாளிக்க:
  • தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
  • கடுகு, உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
  • முந்திரிப்பருப்பு - 6

 

  • தேங்காயை பூவாகத் துருவி எடுக்கவும்.
  • மிக்ஸியில் போட்டு, தேங்காய்ப் பால் எடுக்கவும்.
  • முதலில் எடுத்த பாலை தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • இரண்டாவது, மூன்றாவது முறை எடுத்த தேங்காய்ப் பாலை தனியாக வைக்கவும்.
  • காய்களை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
  • பெரிய வெங்காயத்தையும் அதே போல நறுக்கவும்.
  • சின்ன வெங்காயம், வெள்ளைப் பூடு உரித்து வைக்கவும்.
  • இஞ்சியை சிறு துண்டுகளாக தட்டி வைக்கவும் அல்லது மெலிதாக நறுக்கி வைக்கவும்.
  • காய்களுடன், வெங்காயம், பூடு, இஞ்சி சேர்த்து, வேக வைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், உப்பு, பொட்டுக்கடலை மூன்றையும் மிக்சியில் ஒன்றாகப் போட்டு, அரைத்து எடுக்கவும்.
  • இரண்டாவது, மூன்றாவதாக எடுத்த தேங்காய்ப் பாலில் அரைத்த கலவையை ஊற்றி, கட்டியில்லாமல் கரைக்கவும்.
  • இதை அடுப்பில் வைத்து, இரண்டு முறை நுரை கட்டி வரும் வரை கிளறி விடவும்.
  • பிறகு, வெந்த காய்களையும் சேர்க்கவும்.
  • மீண்டும் ஒரு முறை பொங்கி வரும் வரை கிண்டி விடவும்.
  • பிறகு, முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி, அடுப்பை அணைத்து விடவும்.
  • கருவேப்பிலையை கழுவி, கையால் கிள்ளி, இதில் சேர்க்கவும்.
  • பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, சொதியில் சேர்க்கவும்.
  • முந்திரிப் பருப்பை, சிறு துண்டுகளாக்கி, வறுத்து, சொதியில் சேர்க்கவும்.
  • எலுமிச்சம்பழச் சாற்றை சேர்க்கவும்.
  • சுவையான தேங்காய் சொதி தயார்

Note:

வெள்ளைப் பூடு, இஞ்சி ஆகியவற்றை, காய்களுடனேயே சேர்த்து வேக வைப்பதால், நன்றாக வெந்து விடும். இஞ்சி, பூடு வாசனை தனியாகத் தெரியாது. நன்றாக ஜீரணமாவதற்கும், தேங்காய் நிறைய சேர்வதனால் ஏற்படும் பித்தத்தை தணிப்பதற்கும் உதவும். அரைத்த கலவையை அடுப்பில் வைத்ததும், அடி பிடிக்காமல் சிறிது நேரம் கிளற வேண்டும். எவர்சில்வர் பாத்திரத்தில் வைக்காமல், குக்கர் அல்லது அலுமினிய பாத்திரம்/வாணலியில் ஊற்றி, கொதிக்க விடவும்.







சீதா மேடம்,
எனக்கு சொதி ரொம்ப பிடிக்கும்
fridge க்ளியர் செய்யும் பொது செய்ய கூடிய பதார்த்தம் இது
கண்டிப்பாக செய்து பார்கிறேன்

அன்புடன்,
கவிதா

அருமையாயிருக்கு!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ரொம்ப நல்லாருக்கு உங்க குறிப்பு. நான் சொதி வைக்க பொட்டுகடலைக்கு பதில் பாசி பருப்பு வேக வைத்து செய்வேன்.கொதிக்கும் போது கருப்பு திராட்சை பழங்களும் சேர்ப்பேன்

அன்பு கவிதா,

இன்னிக்குதான் இந்தப் பதிவுகளைப் பார்க்கிறேன். இவ்வளவு நாள் கழித்து, பதில் தருவதற்கு சாரிப்பா.

பின்னூட்டத்திற்கு நன்றி. செய்து பார்த்தீங்களா?

அன்பு மோகனா மாமி,

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

அன்பு கீதாசங்கர்,

பாசிப்பருப்பு சேர்த்து செய்வாங்க, பார்த்திருக்கிறேன். கருப்பு திராட்சை பழங்கள் இதுவரை சேர்த்ததில்லை. கோவையில் ஹோட்டல்களில், தயிர் சேமியா என்று ஒரு ஐட்டம் தருவாங்க. அதில் பச்சை திராட்சை, கருப்பு திராட்சை சேர்த்து தருவாங்க.

அன்புடன்

சீதாலஷ்மி