பத்திய மிளகுக் குழம்பு

தேதி: August 27, 2010

பரிமாறும் அளவு: 2 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1ஸ்பூன்
பச்சரிசி - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூனுக்கும் குறைவாக
மல்லி - 1/2 ஸ்பூன்
புளி - சிறிய சுளை(மிகச் சிறிய சதுர அளவு)
வெள்ளைப்பூடு - 20 பல்
சின்ன வெங்காயம் - 5
உப்பு - சுவைக்குத் தகுந்தாற்போல

தாளிக்க:

நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்


 

மிளகு, சீரகம், பச்சரிசி, துவரம்பருப்பு, வெந்தயம், இவற்றை ஒவ்வொன்றாக வாணலியில் நன்றாக வறுத்து எடுத்து வைக்கவும்.
மல்லியை லேசாக சூடு படுத்தினால் போதும். அதிகம் வறுத்தால், கசந்து விடும்.
புளியையும் சூடான வாணலியில் போட்டு, எடுக்கவும்.
எல்லாவற்றையும்(புளியையும் சேர்த்து) மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
உரித்த சின்ன வெங்காயத்தையும் உப்பையும், கடைசியில் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெள்ளைப் பூடு போட்டு, நன்றாக வதக்கவும்.
அதிலேயே, அரைத்த கலவையை ஊற்றி, மிதமான தீயில், நன்றாக வதக்கவும்.
தண்ணீர் வற்றி, எண்ணெய் நிறம் மாறி, பிரிந்து வரும்.
பிறகு, ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
கடுகு தாளித்துக் கொட்டவும்.
எண்ணெய் மேலே மிதக்குமாறு இருப்பது சரியான பதமாக இருக்கும்.


இளம் தாய்மார்களுக்கு, புளி அதிகமாக சேர்க்க வேண்டாம். அதனால் சிறிதளவு புளியை வறுத்து அரைத்து சேர்த்தாலே போதும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சீதா லக்ஷ்மி,
உங்க குறிப்பு நல்லாயிருக்கு. விருப்பப் பட்டியலில் சேர்த்தாச்சு. மருமகளுக்கு செய்து கொடுத்த குழம்பா? எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. மேலும் நிறைய குறிப்புகள் கொடுங்க. வாழ்த்துக்கள்.

சீதா மேடம்,
50 outof 50
கிரேட்!
விரைவில் சதம் அடிக்க வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

48!

ஒரே நாள்ள 50 ஆயுடுத்தே!

பரம சந்தோஷம்!

என் பொண் நேத்துதான் மிளகு குழம்பு கேட்டா!

ஒடனே நீங்க போடரேள்!

என்ன ஒரு கோ இன்சிடெண்ட்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எங்க வீட்டிலும் மிளகு குழம்பு இந்தமுறையில்தான் செய்வோம். ஆனா
பூண்டு, வெங்காயம் சேர்க்கமாட்டோம்.

சீதாம்மா இந்த பத்திய மிளகு குழம்பு இன்று மதியம் செய்தேன் இப்போதான் சாப்பிட்டோம் ரொம்ப நன்றாக இருந்தது குறிப்பிற்கு நன்றி

பொன்னி