கோசும்பரி

image

வழங்கியவர் : Ms. Moorthy, USA

தேதி : Sat, 28/08/2010 - 04:44

ஆயத்த நேரம் : 3 மணி நேரம்

சமைக்கும் நேரம் : 5 நிமிடம்

பரிமாறும் அளவு : 4

0
No votes yet
Your rating: None
 

 

  • வெள்ளரிக்காய் - 2
  • பாசிப்பருப்பு - 100 g
  • தேங்காய் - 1/4 மூடி
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • தாளிக்க:
  • எண்ணெய் - 1 tsp
  • கடுகு - 1/4 tsp
  • உளுத்தம்ப்பருப்பு - 1/4 tsp
  • பெருங்காயம் - சிறிதளவு
  • கருவேப்பிலை - கொஞ்சம்

 

  • வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
  • பாசிப்பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி தண்ணீர் இல்லாமல் எடுத்து கொள்ளவும்.
  • தேங்காயை துருவி கொள்ள வேண்டும்.
  • வெள்ளரிக்காய், பாசிப்பருப்பு மற்றும் தேங்காயை ஒன்றாக கொட்டி கிளற வேண்டும்.
  • தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து இதில் கொட்டவும்.
  • பரிமாறும் போது கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து பரிமாறவும்.

Note:

இதை சாலட் போல் அப்படியே சாப்பிடலாம். வெள்ளரிக்காய் கசப்பில்லாமல் இருக்க வேண்டும். வெள்ளரியை வெட்டுவதற்கு முன் அதன் நுனியை வெட்டி நன்றாக தேய்க்க வேண்டும். நுரைத்து வருவதை கழுவி விடவேண்டும். அப்படி செய்தால் கசப்பு தன்மை இருக்காது. தேங்காயை அப்படியே சேர்ப்பதால் கலோரியும் கம்மி. வெள்ளரிக்கு பதிலாக காரட்டிலும் செய்யலாம்.







இது அடிக்கடி நான் செய்ரது!

ரொம்ப நன்னாருக்கும்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எனக்கும் ரொம்ப பிடிக்கும், பச்சை மிளகாய் தேவை இல்லையா?

அன்புடன்
பவித்ரா

நானும் இதுபோல வெள்ளரி, கேரட்டில் கோசும்பரி செய்வேன். கூடவே பாதி எலுமிச்சம் ப்ழம் பிழிந்து சேர்த்தால் இன்னமும் சுவைகூடும்.

உங்காத்துலேயும் இப்படி தான் செய்வாளா??? பேஷ் பேஷ். நேக்கும் ரெம்ப பிடிக்குமாக்கும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நான் மிளகாய் இல்லாமல் தான் செய்வேன். தேவை என்றால் சேர்த்து கொள்ளலாம். அப்படியேயும் நல்ல இருக்கும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கரெக்ட். எலுமிச்சை பிழிந்தால் இன்னும் நன்றாக இருக்கும். சாப்பிடும் முன்னர் தான் பிழிய வேண்டும் இல்லையேல் நீர்த்து விடும். அதே போல் தான் உப்பும் சாப்பிடும் முன்னர் தான் சேர்க்க வேண்டும். இதில் நான் இஷ்டம் போல் பச்சையாக சாப்பிட கூடியவை எதை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!