உளுந்து முட்டை அடை

image

வழங்கியவர் : Ms. Moorthy, USA

தேதி : Sat, 28/08/2010 - 05:04

ஆயத்த நேரம் : 2 மணி நேரம்

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு : 4

0
No votes yet
Your rating: None
 

 

  • முட்டை - 6
  • உளுந்து - 200 g
  • சீரகம் - 1 tsp
  • பச்சை மிளகாய் - 6
  • பூண்டு - 3 பல்
  • வெங்காயம் - 3
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு

 

  • உளுந்தை 2 மணி நேரம் ஊறவைத்து சீரகம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவேண்டும்.
  • அரைத்த மாவில் முட்டை மற்றும் உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கரைத்து வைத்து கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் சேர்த்து கொள்ளவும்.
  • எண்ணெய் நன்றாக ஊற்றி தோசை போல் வார்த்தெடுக்கவும்.

Note:

நீங்கள் இதில் விருப்பமான காய்கறியை பொடியாக அறிந்து வேகவைத்து சேர்த்தும் சுடலாம்.







நல்ல சத்தான அடை , முட்டை அடைக்கு பதில் உளுந்து முட்டை அடை என்று பெயர் போடலாம்.
பெண்களுக்கு வரும் இடுப்பு வலிக்கு இதை செய்து சாப்பிடலாம்.
பூப்பெய்திய பெண்களுக்கு இடுப்பு பலம் பெற இதை செய்து கொடுக்கலாம்.

ஜலீலா

Jaleela

நீங்கள் கூறிய பெயர் நன்றாக உள்ளது அதனால் மாற்றி விட்டேன். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. பூப்பெய்திய பெண்களுக்கு உளுந்து முட்டை மற்றும் நல்லெண்ணெய் தருவார்கள். அதற்கு பதிலாக இதை செய்து சாப்பிடலாம். சாப்பிடவும் சுவையா இருக்கும்.

உங்களின் பின்னூட்டதிற்கு மிக்க நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நல்லதொரு ரேசப்பி திருமதி முர்த்தி
சத்தானதும் கூட. செய்து பார்த்துவிட்டு வருகின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி

உங்களின் பின்னூடத்திற்கு நன்றி. செய்து பார்த்து எனக்கு கட்டாயம் தெரிய படுத்துங்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சகோதரி இன்று உளுந்து முட்டை ஆடை செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.
நல்ல ரேசப்பி கொடுத்தமைக்கு பாராட்டுக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி உங்களின் அன்பான பின்னூடத்திற்கு மிக்க நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!