4 வது மாதம்- படுக்கும் நிலை

4 வது மாதம்- படுக்கும் நிலை
எனக்கு இப்போது நான்காது மாதம் துவங்கியுள்ளது. மருத்துவர் என்னை படுக்கும்போது ஒரு பக்கமாய் படுக்க சொன்னார். ஆனால் நான் எப்போது ஒரு பக்கமாய் படுத்தாலும், விழிப்பு வரும் போது பார்த்தால் நேராகவே படுத்து உள்ளேன். இதனால் எதாவது பாதிப்பு உள்ளதா? மற்றும் இப்போது இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் புரண்டு படுக்கலாமா? அல்லது எழுந்து உட்காந்து பிறகு பக்கம் மாற வேண்டுமா?

லாவண்யா, இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கோ அல்லது வலது பக்கத்திலிருந்து இடது பக்கத்திற்கோ புரண்டு படுக்காதிங்க. எழுந்து உட்காந்து படுங்க அதுதான் சரி.

அப்புறம் தூக்கத்தில உங்களுக்குத் தெரியாமல் நீங்க நேரா படுக்கிறதா சொன்னிங்க, அது போக போக சரியாயிடும்.

ஒருகளிச்சுப் படுக்கும்போது இரண்டு காலுக்கு இடையே தலையணை வச்சுக்கோங்க. கால் வலி வராது.

ஆல் த பெஸ்ட்;-)

Don't Worry Be Happy.

உங்களூக்கு ஒருபுறமாய் படுக்கும் பழக்கம் இல்லாததால் இப்படி ஆகிறது. இப்போதைக்கு பாதிப்பு இல்லை தான். ஆனாலும் இது தொடரக்கூடாது:(

குழந்தை கொடி சுத்திக்கொள்ளவும்,மார்பு மேல் தலை போகவும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் முடிந்த வரை விழிப்பாக இருந்து கவனித்துக்கொள்ளுங்கள். அடிக்கடி இரவில் எழுந்து உங்கள் படுக்கும் நிலையை உறுதிப்ப்டுத்திக்கொள்ளுங்கள். ஒரு புறம் படுத்தால் அடுத்த புறம் அதாவது முதுகு புறத்தில் கனமான தலையணை வைக்கலாம். இதனால் திரும்பும் போது உங்களுக்கு அது தடுக்கும்.

மாறி மாறி படுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. கண்டிப்பாக எழுந்து சிறிது நேரம் உக்கார்ந்து பின் தான் அடுத்த புறம் திரும்ப வேண்டும். அந்த சிறிது நேரம் குழந்தையும் தன்னை தயார்படுத்திக்கொள்ளும். ஆதாவது கற்பபை அதர்கு தகுந்தபடி தன் நிலைக்கு வரவேண்டும்.

மற்ற தோழிகள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உங்களது உடனடி பதிலுக்கு மிக்க நன்றி. ஒரு புறமாகவே படுக்க முயற்சி செய்து வருகிறேன்...ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல் என்னை அறியாமல் திரும்பி விடுகின்றேன். பழகிவிடும் என்று நம்புகிறேன். நன்றி...

பொதுவாக இடது புறம் படுத்தால் நல்லது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.மருத்துவமுறைப்படி இடது புறம் படுத்தால் தாயின் ஹார்ட் பீட் நன்றாக கேட்கும் so நிம்மதியாக உறங்கும் , blood flow flows good

லாவண்யா நீங்க தூங்கும் போது இரண்டு பக்கமும் தலையணை வைத்து கொள்ளுங்கள்.சாப்பிட்ட கொஞ்ச நேரம் களித்து இடது புறம் படுங்கள்.உங்கள் குழந்தைக்கு உணவு நன்றாக போய் சேரும்.

உங்களது பதிலுக்கு மிக்க நன்றி. முடிந்த வரை இடது பக்கம் படுக்க முயற்சிக்கின்றேன்.

மேலும் சில பதிவுகள்