தக்காளி குழம்பு(இட்லிக்கு)

வழங்கியவர் : harshaa

தேதி : திங்கள், 30/08/2010 - 17:25

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

3.5
8 votes
Your rating: None
 

 

  • பாசிபருப்பு - 2 தேக்கரண்டி
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - 2
  • பச்சை மிளகாய் - 4 அல்லது 5
  • பூண்டு - 2 அல்லது 3 பல்
  • உப்பு - தேவைக்கு
  • கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க

 

 

வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

ஆறியதும், மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதி விடவும். உப்பு தேவையெனில் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம். தக்காளியின் புளிப்பே போதுமானது.

இந்த குழம்பு கொஞ்சம் நீர்க்க இருக்க வேண்டும். இட்லிக்கு ரொம்ப பொருத்தமானதாக இருக்கும்.

 







தக்காளி குழம்பு பாக்கும்போதே நல்லா இருக்கு. ஈசியாகவும் இருக்கு.
நாளை ப்ரெக்ஃபாஸ்டுக்கு இட்லிகூட இந்தக்குழம்புதான் செய்யப்போரேன்.

ITS GOOD FOR BACHELORS, EASY TO PREPARE AND GOOD IN TASTE..!! THANKS

எளிமையான குறிப்பு கொடுத்துருக்கீங்க!

வாழ்த்துக்கள்.நாளைக்கே செய்துட்டு சொல்கிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

கோமு,
வெகு நாட்கள் கழித்து உங்க பதிவைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக உள்ளது. கண்டிப்பா செய்துட்டு எப்படி இருந்ததுனு சொல்லுங்க. உங்கள் பதிவுக்கு நன்றி.

சகோதரர் ஜாயிர்,
நீஙள் சொல்வது சரிதான். அவசரத்துக்கு உடனே செய்து விடலாம். உங்கள் பதிவுக்கு நன்றி.

ஆமி,
கண்டிப்பா செய்து பாருங்க. இது என் அக்காவின் குறிப்பு. உங்கள் பதிவுக்கு நன்றி.

அன்பரசி ,
எளிமையா இருக்கே!!
கண்டிப்பாக செய்து பார்த்து விட்டு சொல்றேன்
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

அன்புடன்,
கவிதா

கவிதா,
இந்த குழம்பு ரொம்ப ஈசி. குக்கரை ஒரு அடுப்பில் வைத்து விட்டு, இட்லி ஊற்றினால் 10 நிமிடங்களில் இரண்டும் ரெடியாயிடும். உங்கள் பதிவுக்கு நன்றி. செய்துட்டு சொல்லுங்க.

ஹர்ஸா உங்கள் குறிப்பு எளிமையாக சூப்பரா இருக்கு அவசரத்துக்கு செய்யக்கூடியது, தொடர்ந்து நிறைய குறிப்புகள் தருவதற்க்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

ஹர்ஷா,
உங்க தக்காளி குழம்பு, செய்வதற்கு மிக எளிமையான குறிப்பு!. மிகப்பொருத்தமாக நேற்று இரவு எங்க வீட்டில் டிபன் இட்லியாக இருந்ததால், உடனே செய்து சுவைத்தும் பார்த்தாச்சு. டேஸ்ட்டும் அருமை! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

ஹர்ஷா இப்பதான் தக்காளி குழம்பு செய்து நல்லா இட்லியோட சேர்த்து ஒரு வெட்டு வெட்டிட்டு வரேன் :). ரொம்ப நல்லா இருந்ததுப்பா. விருப்பப்பட்டியலில் சேர்த்துட்டேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நித்யா,
செய்து பார்த்துட்டு சொல்லுங்க. உங்கள் பதிவுக்கு நன்றி.

சுஸ்ரீ,
செய்து சாப்டாச்சா? குழம்பு நல்லா இருந்ததா? மகிழ்ச்சி. என் அக்காவுக்கு பாராட்டுகளை சொல்லிடுறேன், நன்றி

கவி,
வனி பாஷைல சொல்லனும்னா, என் கால் தரையில் இல்லை. 157 குறிப்புகள் தந்த சமையல் அரசி நீங்க, என் குறிப்பை விருப்பப் பட்டியலில் சேர்த்து கொண்டது மகிழ்ச்சியா இருக்கு. நன்றி.

உங்கள் தக்காளி குழம்பு நேற்று இரவு செய்தேன் என் மகள் தலையை ஆட்டி கொண்டே சொன்னது "yummy yummy "

அன்புடன்,
கவிதா

கவிதா,
உங்க பொண்னுக்கே பிடிச்சதா? சந்தோஷம். செய்து கொடுத்த உங்களுக்கு தான் நன்றி சொல்லனும். என் பையனுக்கும் இந்த குழம்பு ரொம்ப பிடிக்கும்.

நாளைக்கு இதை எப்படியும் செய்துவிடுகிறேன். ரொம்ப சிம்பிளா இருக்கு. குறிப்பிற்கு நன்றி ஹர்ஷா.

அன்புடன்,
இஷானி

இஷானி,
பழுத்த தக்காளியில் செய்தால் புளிப்பும், கலரும் கிடைக்கும். நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்கள்.பதிவுக்கு நன்றி.

அன்பரசி... இன்னைக்கு வீட்ல தக்காளிக்குழம்பு தான் செய்தேன். கணவர் நன்றாக உள்ளது என்று கூறாமல் 3 முறை குழம்பு விட்டு சாப்பிட்டார் (அப்படி செய்தால் மிகவும் பிடித்துள்ளது என்று அர்த்தம், நன்றாக இல்லை என்றால் 1 கரண்டி குழம்போடு எழுந்துவிடுவார்) அவா் சாப்பிட்டு விட்டு சென்றதும் உங்களுக்கு பின்னுாட்டம் கொடுத்துவிட்டேன். மிக்க நன்றிப்பா.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அன்பரசி

தக்காளி குழம்பு அருமையா இருந்தது, இட்லி மேலே அப்படியே ஊத்தி ஊற வச்சு சாப்பிட்டேன்.வாழ்த்துக்கள்

அன்புடன்
பவித்ரா

ராதா,
ரிஸ்க் எடுக்காதீங்க. நீங்க சாப்பிட்டு பார்த்து,பிடிச்சதுனா உங்களவருக்கு கொடுங்க. அப்புறம் என்னை திட்டாதீங்க. உங்களவருக்கு தக்காளி குழம்பு பிடிச்சதில் மகிழ்ச்சி. பதிவுக்கும் நன்றி.

பவி,
குழம்பு நல்லா இருந்ததா? நீங்க ரசிச்சு, ரசிச்சு சாப்பிட்டு, அதை பதிவா போடும் போது, எனக்கும் சாப்பிடணும்னு தோணுது.உங்க பதிவைப் பார்த்த பிறகு,கொத்தமல்லி ரசம் மேல ஆசை வந்துடுச்சு. நானும் செய்து சாப்பிட்டேன். பதிவுக்கு நன்றி.

ஹர்ஷா, உங்க தக்காளி குழம்பு நேற்று செய்தேன்.செய்வதற்க்கு மிக எளிமையா, அசத்தலான சுவையோடு இருந்தது.இட்லிக்கு பொருத்தமான குழம்பு.
ரொம்ப நல்லா இருந்தது.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

திவ்யா,
குழம்பு செய்து பார்த்து, பின்னூட்டம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி.

நேற்று தக்காளி குழம்பு பண்ணினேன். தக்காளி குழம்பு ரெம்ப சுப்பரா இருந்தது.நன்றி
suven

suven,
செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்கு ரொம்ப நன்றி.

ஹர்ஷா... என் மாமியார் வீட்டில் இது போல் செய்வாங்க... எனக்கு செய்ய தெரியாது. உங்க குறிப்பு பார்க்க அதே போல் இருந்ததால் முயற்சி செய்தேன்... அதே அதே அதே தான்!!! ரொம்ப நல்லா இருந்தது. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
உங்க பதிவை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.உங்களுக்கு குழம்பு பிடிச்சதா?இது என் அக்காவின் ரெசிப்பி.அவங்களும் அறுசுவை பார்ப்பாங்க.உங்க பதிவை பார்க்க சொல்றேன்.நன்றி.

hello madam nan arusuvaiku puthithu, ungalathu kulambu vaithen miga miga super. eppothu engal veetil ittlikku enthe kulambuthan vaikirom. thanks mam.