How to calculate my month

I have 1year old baby.No menstural period for the past one year.my husband working in abroad.Last month he came to vacation leave.Currently I have vomitting problem.I checked with doctor and confirmed my pregnancy.I am pregnant now.But How to calculate my month...Pls help.

முதலில் நலமுடன் குழந்தை பெற்றெடுக்க உங்களுக்கு வாழ்த்துக்கள்.

பொதுவாக கடைசியாக (உங்கள் விசயத்தில் போனமாதம்) period ஆரம்பித்த நாளிலிருந்து கணக்கிடுவார்கள். உதாரணமாக July 3 ம் தேதி உங்களுக்கு (போன மாத) period ஆரம்பித்திருந்தால் அதுவே உங்கள் கர்ப்பத்தின் முதல் நாளாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே ஆகஸ்ட் 3 ம் தேதி ஒரு மாதம் முடிந்ததாகக் கணக்கிடப்படும்.

உங்களின் உத்தேசமான டெலிவரி நளையும் July 3 ம் தேதியை வைத்தே கணக்கிடப்படும். உங்களின் கடைசி period நாளிலிருந்து (அதாவது July 3) 9 மாதம் சேர்த்து அதனுடன் மேலும் 7 நாட்கள் சேர்த்தால் அதுவே உங்களின் தோராயமான டெலிவரி நாள். July யிலிருந்து 9 மாதம் அதாவது ஏப்ரல் 3, பின் அதனுடன் 7 நாட்கள் எனவே “ஏப்ரல் 10 ம் தேதி” தான் தோராயமான டெலிவரி நாள்.

புரிந்திருக்கும் என் நினைக்கிறேன். ஏதும் சந்தேகமென்றால் கேளுங்கள்.

கீழுள்ள எழுத்துதவியைப் பயன்படுத்தி தமிழில் டைப் செய்ய முயற்சியுங்கள்

அன்புடன்,
இஷானி

இஷானி மேடம் எப்படி இருகீங்க? என் பெயர் நித்யா உங்க குட்டி பொண்னு எப்படி இருக்காங்க? உங்க கணக்கு நல்லா புரிஞ்சிடுச்சு நன்றி நானும் நிறைய தேடிப்பார்த்தேன் ஆனா புரியல இப்போ புரிஞ்சிடுச்சு.

நானும் குழந்தையை எதிப்பார்த்து காத்துக்கொண்டுதான் இருக்குறோம், இனிமே நல்ல செய்தி வந்த பின் கணக்கு பன்னிடுவேன் நன்றி.

அன்புடன்
நித்யா

மகள் நன்றாக உள்ளாள். விசாரித்ததற்கு நன்றி.

புரிந்துவிட்டதா. ரொம்ப சந்தோசம். விரைவில் குழந்தை உண்டாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

//.....கணக்கு பன்னிடுவேன்// ஹ..ஹா. நல்லா கணக்கு பண்ணுங்க :-) வாழ்த்துக்கள்

மேடம் வேண்டாமே.

அன்புடன்,
இஷானி

வாழ்த்துக்கள் priya ramesh
மேலே இஷானி சொன்ன கணக்குப்படி தான் due date calculate பண்ண வேண்டும். periods ஆனா முதல் நாள் +9 months +7 days
ex: june 20+9months+7days= march 27th will be ur due date.
ஆனா உங்களுக்கு லாஸ்ட் one year a periods வரவில்லை இல்லையா, அதனால நீங்கள் சேர்ந்திருந்த மாதத்தில் இருந்து 9 மாதம் 1 வாரம் கணக்கிட்டு கொள்ளுங்கள். இது தோராயமான கணக்கு தான், உங்களுக்கு periods வராததுனால ovalution எப்போ ஸ்டார்ட் ஆகியிருக்கும் சொல்ல முடியாது. நீங்க அடுத்து ultrasound ஸ்கேன் பண்ணும் பொது உங்க baby growth வச்சி expecting due date டாக்டர் சொல்லுவாங்க. இங்க 8 weeks mudinchitta oru scan pannuvanga. உங்கள் ஊரில் எப்படி என்று தெரியவில்லை. next checkup போகும் போது உங்க டாக்டர் கிட்ட கேட்டு பாருங்க.
take care.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

நீங்க சொன்ன பிறகுதான் அவர்கள் கேள்வியை சரியாகப் படித்தேன். ஒரு வருடமாக period வராததால் சரியாக கணிப்பது கொஞ்சம் கஷ்டமான விசயம்தான். எனினும் நீங்கள் சொல்லியதுபோல் ultrasound சரியாகச் சொல்லிவிடும்.

சரியாக பதிலளித்தமைக்கு நன்றி

அன்புடன்,
இஷானி

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் இஷானி. நல்ல படியாக குழந்தை பெற்றெடுத்து ஆரோக்யமாக வாழ வாழ்த்துக்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மேலும் சில பதிவுகள்