கண்ணின் ஓரத்தில் வீக்கம்

எனக்கு கண்ணின் ஓரத்தில் வீங்கியதுபோல் உள்ளது, மேலும் அந்த இடத்தில் சில சமயம் அரிப்பு உள்ளது,அந்த இடத்தில் வலியும் உள்ளது, ஏதாவது வீட்டு வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள் தோழியரே.

1. அது கண்கட்டியா அல்லது எறும்பு கடித்ததா என்று கண்டுபிடிக்கமுடியவில்லை

என்ன ஹேமா சரியாக தூங்க வில்லையோ?.. உடல் சூட்டினால்தான் கண் கட்டி வரும். அதன் ஆரம்ப நிலையும் இப்படித்தான் இருக்கும். நாமக்கட்டியை குழைத்து வைத்தால் சரி ஆகி விடும். ஆரம்ப நிலை எனில் ஒரே நாளில் சரி ஆகி விடும். தரமான நாமக்கட்டியை பயன்படுத்தவும். கைகளை வைத்து தேய்த்து விட வேண்டாம்.. கட்டையில் இருந்து அரைத்து எடுத்த சந்தனமும் வைக்கலாம். கடைகளில் கிடைக்கும் சந்தன பொடியை மட்டும் பயன்படுத்தி விட வேண்டாம். அது பிரச்சினையை அதிகமாக்கிவிடும்..

ஐஸ் க்யூப் ஐ (அல்லது அதில் பஞ்சை நனைத்து )கட்டி வந்த இடத்தில் அவ்வப்போது வைத்துகொண்டே இருந்தாலும் சரி ஆகி விடும்..சமீபமாக என் தம்பி செய்து கொண்ட சுய வைத்தியம் இது.. 5 மணி நேரத்தில் சரி ஆகி விட்டது...

எறும்பு கடித்தால் எப்படி இருக்கும் என தெரியவில்லை எனக்கு.. ஆனால் கண்கட்டி கீழ் இமைமுடியை ஒட்டி வரும்.. எனக்கு அப்படித்தான் வந்த்தது.. :)

ஆமாப்பா போன வாரம் முழுவதும் ஹப்பி ஆபீஸ் முடிந்து வருவதற்கு 12 மணீ ஆகிவிட்டது நன்றாக தூங்கவில்லை, நீங்கள் சொன்ன டிப்ஸ்-ஐ செய்து பார்க்கிறேன், கண்ணின் மேல் இமை ஓரத்தில் தான் வீங்கியது போல் உள்ளதுப்பா.
பதிலுக்கு மிக்க நன்றி.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

முன்பு எனக்கு அடிக்கடி கண்கட்டி வரும்(நிச்சய்தார்த்தம் அன்னிக்கு கூட வீங்கிய கண்ணோடுதான் இருந்தேன் :-( ). இரண்டு காரணங்களால் வரும். சூட்டினால் மற்றும் தூக்கமின்மையால். இன்னொன்று ஐ மேக்கப் சரியாக ரிமோவ் பண்ணாமல் விடுவதால் துவாரங்கள் அடைத்துக் கொண்டு இன்ஃபெக்ஷன் ஏற்படுவதால். அடிக்கடி வர்வதாக இருந்தால் கண்டிப்பாக ஐ மெக்கப் தவிர்க்க வேண்டும். அப்படியெ போட்டுக் கொண்டால் அதை சரியாக ரிமூவ் செய்ய வேண்டும். நல்ல தூக்கம் அவசியம். மற்றபடி சாந்தினி சொன்ன மருத்துவ முறைகள்தான் ட்ரீட்மெண்ட். கண் அதிகமாக உறுத்தல் அல்லது வலி இருந்தால் eyemo eye drops விடலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிக்க நன்றி கவி,சூடுன்னு தாம்பா நினைக்கிறேன், முடியல

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

நாம கட்டி போடுங்கள். உடல் சூட்டினால் கண்கட்டி வரும். ஆகவே இளநீர், பசும் பால் பச்சையாக குடியுங்கள்

ஹேமா கம்ப்யூட்டரை ஷட் டவுன் பண்ணிட்டு போய் தூங்குங்க. இப்போ அதிகமா கண்ணுக்கு வேலை கொடுத்தீங்கன்னா வலியும் வீக்கமும் அதிகரிக்கும். ரோஸ்வாட்டர் இருக்குதுன்னா காட்டனில் நனைத்து கண் மீது வச்சுட்டு தூங்குங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்