அரிசி-கோதுமை-பருப்புகள்-அவல் கலந்த பாயசம்

தேதி: April 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - கால் கப்
கோதுமைரவை - கால் கப்
பாசிப்பருப்பு - கால் கப்
கடலைபருப்பு - கால் கப்
அவல் - கால் கப்
வெல்லம் பொடி பண்ணினது - இரண்டரை கப்
பால் - ஒரு கப்
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
நெய் - 2 ஸ்பூன்
நறுக்கின முந்திரி - 2 மேசைக்கரண்டி
திராட்சை - 2 மேசைக்கரண்டி


 

அரிசி, கோதுமைரவை, பாசிப்பருப்பு, கடலைபருப்பு, அவல் முதலியவற்றைத் தனித் தனியே வெறும் வாணலியில் வாசனை வரப் பிரட்டிக் கொள்ளவும்.
இதை நன்றாகக் கழுவி விட்டு, 4 கப் தண்ணீரில் பிரஷர் பானில், 2 விசில் வரும்படி வேக வைக்கவும்.
ஓசை அடங்கித் திறப்பதற்குள், அடுப்பில் இரண்டரைக் கப் பொடி பண்ணின வெல்லத்தை அரை கப் தண்ணீரில் நன்கு கரைய விடவும்.
நன்றாக 5 நிமிடங்கள் பாகு கொதிக்கட்டும். பிறகு குக்கரைத் திறந்ததும், பாகை அதில் வடிகட்டி விடவும்.
ஏலப்பொடி போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
இறக்கி வைத்ததும் பாலை விட்டு நன்றாகக் கிளறி விடவும். நெய்யைக் காயவைத்து முந்திரி, திராட்சை வறுத்துப் போடவும்.
சற்றுத் தளர வேண்டும் என்றால் பால் சிறிது கூட விடலாம்.


மேலும் சில குறிப்புகள்