தேங்காய்பால் சாதம்

தேதி: August 31, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (6 votes)

திருமதி. ஆமினா அவர்களின் குறிப்பினை பார்த்து செய்து அதை நம்முடன் விளக்கபடங்களுடன் திருமதி. அன்பரசி பாலாஜி அவர்கள் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

 

பாசுமதி அரிசி - ஒரு டம்ளர்
தேங்காய்பால் - 1 1/2 டம்ப்ளர்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 2 அல்லது 3
ஏலக்காய் - ஒன்று
நெய் மற்றும் எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

அரிசியை 20 - 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும். தாளித்தவற்றுடன் கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.
இப்போது ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, தேங்காய் பாலும் சேர்க்கவும்.
குக்கரை மூடி ஒரு விசில் வந்து, 2 நிமிடங்கள் ஆகும் வரை வேக வைத்து பின்னர் நிறுத்தவும்.
சுவையான தேங்காய்ப்பால் சாதம் தயார். இதனுடன் எல்லா வெஜ் மற்றும் நான் வெஜ் கிரேவிகள், ரைத்தா நன்கு பொருந்தும். பார்ட்டிகளின் போது தயாரிக்க கூடிய எளிய உணவு.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பரசி!

சொன்னபடியே செய்து கலக்கிட்டீங்க!

குக்கர்ல செய்து பார்த்ததில்லை. இம்முறையும் செய்து பார்க்கிறேன். நன்றி!

வாழ்த்துக்கள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி,
உங்கள் தேங்காய்பால் சாதம் நன்றாக வந்தது, கறிவேப்பிலை வாசத்துடன். உருளைக்கிழங்கு குர்மாவுடன் சாப்பிட்டோம். என் பையனும் விரும்பி சாப்பிட்டான்.
ஸ்டெப் பை ஸ்டெப் ஃபோட்டொ எடுத்ததால், உங்கள் குறிப்பை அனுப்பி விட்டேன், தப்பா நினைக்க வேண்டாம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கும், அறுசுவை குழுவினருக்கும் எனது நன்றிகள்.

என்ன இப்படி சொல்லலாமா?

இதுல தப்பா நெனக்க என்ன இருக்கு?

இந்த ஊர்ல கறிவேப்பிலை கிடைப்பது குதிரைகொம்பு. எப்ப எனக்கு அது கிடைக்கும்?நான் எப்ப இந்த குறிப்பை அனுப்புவது?

சொல்லப்போனால் என் வேலையை எளிதாக்கி குடுத்துட்டீங்க!. செஞ்சதும் இல்லால போட்டோ எடுத்து அனுப்புவது எவ்வளவு பெரிய விஷயம். பாக்கும் போது நான் பட்ட சந்தோஷத்தை எப்படி வஎணிப்பதுன்னு தெரியல. என் ஹஸ் கிட்ட காமிச்சு ரொம்பவே சந்தோஷப்பட்டேன்:)

நன்றி ஹர்ஷா!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அன்பரசி,
ஆமினாவோட தேங்காய்பால் சாதம் அசத்தலா கொடுத்து இருக்கீங்க
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஆமி,
இது உங்க குறிப்பு இல்லையா? நீங்க கொடுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் என்று தோன்றியது. நான் சொதப்பிட்டேனோனு நினச்சேன். அதனால் தான் சொன்னேன். உங்களுக்கு பிடிச்சதில் மகிழ்ச்சி.

கவிதா,
வாழ்த்துக்களுக்கும், பதிவிற்கும் நன்றி.

அன்பரசி... தேங்காய் பால் சாதம் பாக்கவே ரொம்ப டெக்கரேடிவ்வா இருக்கு.. நானும் ஆமினா குறிப்புபடி செய்தேன். நன்றாக இருந்தது. அதை போட்டோவோடு அனுப்பியது மிகப்பெரிய விஷயம்.. நன்றிப்பா....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆமினா குறிப்பை அன்பரசி படம் எடுத்தாங்களா? ஹர்ஷா ஏன் நன்றி சொல்றாங்க?

இந்த தேங்காய்ப்பால் சாதம் வித்யாசமான சுவையில் மிகவும் நன்றாக
வந்தது.

Can u pls explain in detailed how to take Thengai Paal

ராதா,
குறிப்பு அனுப்புவதுதான் பெரிய விஷயம், நான் அதை செய்து ஃபோட்டோ எடுத்து அனுப்பினேன், அவ்வளவு தான். பதிவுக்கு நன்றி.

New Mom,
ஆமினாவின் குறிப்பை நான் (அன்பரசி) செய்து பார்த்து படங்களுடன் அனுப்பினேன். குழப்பம் வேண்டாம்.

கோமு,
ஆமாம், இந்த சாதம் எங்கள் வீட்டிலும் எல்லாரும் விரும்பி சாப்பிட்டொம்.

ஜானகி,
தேங்காயை துறுவியோ, அல்லது சிறு துண்டுகளாக வெட்டியோ தண்ணீர் சேர்த்து, மிக்சியில் அடித்து வடிக்கட்டினால் வருவது முதல் தேங்காய் பால். மீதி சக்கையில் திரும்பவும் தண்ணீர் சேர்த்து, அடித்து வடி கட்டினால் கிடைப்பது இரண்டாம் தேங்காய்பால்.

Hi Harsha, thanx for ur input. I have heard people saying that only fresh juice should be used & not the II lot. That's why I wanted clarification.

தேங்காய் பால் சாதம் மிக அருமையாக இருந்தது. குறிப்புகளுக்கு மிக்க நன்றி. தொடர என் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,

s.rengalakshmi lokesh

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ஆமி, அன்பரசி இருவருக்கும் என் நன்றிகள் தேங்காய்பால் சாதம் இன்று செய்து பார்த்துட்டேன் ரொம்ம்ம்ம்ப்........ அருமையா வந்தது எங்க அம்மா செய்ததுமாதிரியே இருக்கு இதனுடன் கோழிக்குழம்பு செய்தேன் மிகவும் அருமை.
குறிப்புக்கு மிகவும் நன்றி ஆமி, அதை அழகாய் செய்து மேலும் என் ஆர்வத்தை தூண்டிய அன்பரசிக்கும் என் நன்றிகள் பலபல....

அன்புடன்
நித்யா

தேங்காய்பால் சாதம் செய்து பார்த்துட்டு,பின்னூட்டம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி.

உங்கள் தேங்காய் சாதம் செய்தேன் .சாதம் உதிர் உதிராய் ரொம்ப சுவையாக இருந்தது.நன்றி மேடம்..

வாழு, வாழவிடு..

தேங்காய்பால் சாதம் செய்து பார்த்து,உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி.பதிவுக்கும் நன்றி.