முட்டைகோஸ் பொரியல்
வழங்கியவர் : uk5mca
தேதி : செவ்வாய், 31/08/2010 - 17:22
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- முட்டைகோஸ் - 3 கப்(பொடியாக அரிந்தது)
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- தேங்காய் - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- எண்ணெய், கடலை பருப்பு, உளுந்து, பெருங்காயம், சீரகம், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
![]() |
வெங்காயம், பச்சைமிளகாயை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்லவும். |
![]() |
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதில் உளுந்து, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். |
![]() |
பின்னர் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். |
![]() |
நன்கு வதங்கியதும் முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும். |
![]() |
முட்டைகோஸுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேக வைக்கவும். |
![]() |
கோஸ் நன்கு வெந்ததும் தேங்காய் சேர்த்து கிளறவும். |
![]() |
அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான கிட்ஸ் முட்டைகோஸ் பொரியல் தயார். |
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்







நானும் இப்படி தான் செய்வேன். ஆனால் தேங்காய் சேப்பது கிடையாது. இம்முறையிலும் செய்து பார்க்கிறேன்.
குறிப்புக்கு நன்றி!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
கவிதா,
நானும் இதே போல் தான் செய்வேன், ஆனால் வெங்காயம், மஞ்சள் தூள் சேர்க்க மாட்டேன். இது நல்லாயிருக்கு, பளிச்சுனு.
வாழ்த்துக்கள்.
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி
அன்புடன்,
கவிதா
ஆமினா,
செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி
அன்புடன்,
கவிதா
அன்பரசி ,
என் தம்பிக்கு கோஸ் வாசமே பிடிக்காது அதனால் அம்மா இப்படி செய்வாங்கசெய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி
அன்புடன்,
கவிதா
கவிதா முட்டைக்கோஸ் பொரியல் பாக்கவே ரொம்ப அழகா இருக்கு.. சூப்பர். இனிமே அறுசுவைக்கு குறிப்பு அனுப்பும் போது எனக்கும் ஒரு பார்சல் அனுப்பிடுங்க.. வசதியா போயிடும்.. எத்தனை நாளைக்கு தான் பாத்துக்கிட்டே இருக்கிறது....
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
எங்க வீட்ல முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் எதுவுமே பிடிக்காது.
நேற்று இந்த முறையில் செய்தேன். எதுவுமே சொல்லாமல்
சாப்பிட்டார்கள்.
ராதா மேடம் ,
கண்டிப்பாக அனுப்பிட்டா போச்சு
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி
அன்புடன்,
கவிதா
கோமு மேடம்,
அனைவரும் சாப்பிட்டாங்களா?
நல்ல இருந்ததா?
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி
அன்புடன்,
கவிதா
கவிதா இன்னோரு முறை என்னை மேடம் என்று அழைத்தால் உங்க வீட்டுக்கு நான் பண்ணின சீடையை பார்சல் பண்ணி அனுப்பிவிடுவேன். பல்லுபோனா என்னைக்கேக்கக்கூடாது.. ஆமா... எதுக்குப்பா மேடம் எல்லாம்.. அதை மட்டும் கொஞ்சம் கட் பண்ணுங்க...
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
எங்க குடும்பத்திலேயே இப்படிதான் செய்வாங்க, ஆனா வெங்காயம் போட மாட்டாங்க. அதனால நானும் அப்படியே பண்ணிட்டேன். இனிமே வெங்காயம் போட்டு பண்றேன். குறிப்புக்கு நன்றி மேடம்.
Don't Worry Be Happy.
ஜெயலக்ஷ்மி மேடம்,
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி
அன்புடன்,
கவிதா
நானும் இந்த மாதிரி தான் செய்வேன். ஆனால் இதனுடன் இறால் சேர்ப்பேன். நன்றாக இருக்கும்
shagila
ஷகிலா மேடம்,
இறாலோடும் நன்றாக இருக்கும்
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி
அன்புடன்,
கவிதா