கோதுமை மாவு

கோதுமை மாவு white atta or brown atta இந்த இரண்டு மாவுகளில் எது நம் உடம்பிற்க்கு நல்லது, என் கணவர் வோயிட் ஆட்டாதான் விரும்பிகாறார் எதை நான் தேர்வு செய்வது.

அன்புடன்
நித்யா

ப்ரௌன் (whole wheat) தான் உடம்புக்கு நல்லது. White taste ஆ இருக்கும். ஆனால் உடம்புக்கு நல்லதல்ல.

அன்புடன்,
இஷானி

இஷானி உங்க பதிலுக்கு மிக்க நன்றி வோயிட் ஆட்டாவில் மைதா கலந்திருப்பார்களா?
ஆனால் பிரோன் ஆட்டாவில் எனக்கு சரியாக மாவு பிசைய வரமாடேங்குது அதே போல் வோயிட் ஆட்டாவில் பூரி செய்தால் வாசனை இல்லை ருசியும் வேறுபடுகிறது நான் பிரோன் ஆட்டாவையே உபயோகிக்க முயர்ச்சிக்கிறேன்.

இரண்டு மாவுகளுக்கும் உள்ள வேறுபாடுகளையும் நன்மைகளயும் தெரிந்தவர்கள் இங்கு வந்து கூறுங்கள்.

அன்புடன்
நித்யா

வொய்ட் மாவை கிட்டத்தட்ட மைதான்னே சொல்லலாம். மைதாவும் கோதுமையிலிருந்துதான் வருகிறது. கோதுமையின் எந்த பகுதியை மட்டும் பயன்படுத்தி மாவு தயாரிக்கப்படுகிறது, அதிலிருந்து எது நீக்கப்படுகிறது (உதாரணமாக குளூட்டன்), எது கூடுதலாக சேர்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்து கோதுமையிலிருந்து எடுக்கப்ப்டும் மாவு வகைப்படுத்தப் படுகிறது.

ப்ரௌன் மாவு முழு கோதுமையிலிருந்து தாயாரிக்கப் படுவதால் ஃபைபர் அதிகம். வொய்ட் மாவும், மைதாவும் மேலுள்ள ஃபைபரை நீக்கியபின் உள்ள கோதுமையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

அன்புடன்,
இஷானி

நித்யா, கொதுமையோ, அரிசியோ, வெள்ளைக்கலரை விட ப்ரௌன் கலரில்தான்
சத்துக்கள் அதிகம் இருக்கு கீடியவரை ப்ரௌன்கலர் மாவு யூஸ் பண்ணவும்..

நித்யா, கோதுமையா வாங்கி அரைச்சாலும் பிரெளன் கலர் கோதுமை மாவு தான்ப்பா டேஸ்ட் அதிகம். சத்தும் கூட. நீங்கள் பிரெளன் கலர் மாவையே கூடுமானவரை பயன்படுத்துங்கள். உங்கள் கணவருக்கும் எடுத்து கூறுங்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கோதுமை! நித்யா! அங்க உங்களால் அரைச்சுக்க முடியும் என்றால் அது நல்லதே... இல்லைன்னா இருக்கவே இருக்கு முத நாள் 1/2 கப் போடுங்க ஹோல்வீட் மாவு. அப்படியே வெள்ளையும் பிரவுனும் சேர்த்து சேர்த்து மெதுவா பழக்கணும்... இல்லைன்னா இவ்வளவு நாள் நாக்குக்கு கொடுத்த டிரெயினிங நம்மளயே என்னன்னு கேக்கும் :))

பிரவுன் ஆட்டா ( இங்க ஹோல்வீட் ப்ஃளவர் ) கொஞ்ச நேரம் ஊறினா நல்லா இருக்கும்.. சுடுதண்ணி ஊத்தி பிசைந்தா கொஞ்சம் முரடா இருக்கறது மாதிரி இருக்கும்.. பச்சை தண்ணியே ஊத்தி பிசைந்து பாருங்க.. முதலில் பிசைந்து வச்சிட்டு அப்புறம் 30 நிமிஷம் கழித்து ஒரு 2 டீஸ்பூன் எண்ணை விட்டு பிசைந்து அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து போடுங்க நல்லா வரும்..

இந்த அனுபவம் ஆளுக்காளு மாறும்.. எல்லாம் ட்ரையல் எரர் தான்.. என்ன நம்ம வீட்டு கினி தான் பாவம் :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

தோழிகள் அனைவருக்கும் காலை வணக்கம்
பதில் அளித்த தோழிகள் அனைவருக்கும் நன்றி

இஷானி நீங்கள் சொன்ன பிறகுதான் இதன் நன்மை எனக்கு புரிகிறது ரொம்ப நன்றி இதை பற்றி முதலில் என் கணவரிடம் கூற வேண்டும்.

கோமு
கண்டிப்பா பிரோன் ஆட்டாவே உபயோகிக்க முயற்ச்சிக்கிறேன்.
இப்போழுதுதான் இதில் இவ்வளவு விஷயங்கள் இருப்பதை தெரிந்து கொண்டேன்.

கல்பனா
ஆமாம்பா சப்பாத்தி வோயிட் ஆட்டாவில் நன்றாக வருதுனு செய்தேன் ஆனா என்னுடைய தோழி அதை உபயோகித்தால் நம் எடை கூடும் ஆதலால் உபயோகிக்க வேண்டாம் என்றார்கள், இனி அதை தவிர்த்திட வேண்டியதுதான்.

இலா மேடம்
இங்கு நான் மாவை வாங்கிதான் செய்கிறேன் நான் சுடுத்தண்ணீர் தான் உபயோகித்தேன் நீங்கள் சொல்வதுபோல பச்சைதண்ணீர் சேர்த்தே பிசைந்து பார்க்கிறேன்.

அன்புடன்
நித்யா

மேலும் சில பதிவுகள்