பூண்டு பருப்பு ரசம்

வழங்கியவர் : ஆமினா
தேதி : புதன், 01/09/2010 - 16:13
ஆயத்த நேரம் : 15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 5 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 4 நபர்கள்
- புளி -நெல்லிக்காய் அளவு
- பூண்டு -10 பல்(தட்டியது)
- துவரம் பருப்பு- ஒரு கை
- தக்காளி-2
- வெங்காயம்-1
- மிளகு பொடி -1/2 ஸ்பூன்
- மஞ்சள் பொடி -1/4 ஸ்பூன்
- சீரகப்பொடி- 1/2 ஸ்பூன்
- தேங்காய் துறுவல் -சிறிதளவு
- புதினா,கொத்தமல்லி,கறிவேப்பிலை-சிறிதளவு
- வறுத்து பொடி செய்ய:-
- மல்லி- 1 மேசை கரண்டி
- கடலை பருப்பு-1/2 மேசை கரண்டி
- பூண்டு-10 பல்
- வரமிளகாய்-1
- வெந்தயம்-1/4 ஸ்பூன்
- புளியை வெண்ணீரில் ஊறவைக்கவும்.துவரம் பருப்பை குழைய வேகவைக்கவும்.
- சிறிது எண்ணெயில் மல்லியை தவிர வறுத்து பொடிசெய்ய கொடுத்தவற்றை வறுத்து கடைசியில் மல்லியை அந்த சூட்டிலெயே வறுத்து ஆற வைத்து பொடிக்கவும்.
- புதினா,கொத்தமல்லி,கறிவேப்பிலை,பூடு இவற்றை லேசாக அம்மியில் தட்டி வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- பின் அம்மியில் தட்டியவற்றை சேர்த்து கிளறவும். அதன் பின் எல்லா தூளையும் சேர்க்கவும்.
- இப்போது தக்காளி சேர்த்து வதக்கிவிடவும். நன்கு குழைந்ததும் வறுத்த பொடித்தவற்றை சேர்த்து வதக்கவும்.
- அதன்பின் புளிகரைத்த நீரில் வேகவைத்த பருப்பையும் கரைத்து அதில் சேர்க்கவும்.
- நுரைத்து வரும் போது தேங்காய் துறுவல் தூவி உடனே இறக்கவும்.
Note:
இந்த ரசத்தை கொதிக்கவைக்க கூடாது. அதில் உள்ள சத்துக்கள் முறிந்துவிடும் என்பதால். மல்லியை தீயில் வைத்து வறுக்க கூடாது. இல்லையேல் கசப்புதன்மை கொடுக்கும். தேவைக்கு ஏற்ப காரத்தை மாற்றிக்கொள்ளலாம்.இன்னும் அதிகமாக காரம் வேண்டுமென்றால் ஒரு பச்சை மிளகாய் அம்மியில் தட்டி வதக்கலாம். வாசனையும் கொடுக்கும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஏற்றது.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
ஆமினா,
தேங்காயும்,பச்சை மிளகையும் சேர்த்து ரசம் செய்ததே இல்லை கண்டிப்பாக செய்து பார்கிறேன் மேலும் பல சமையல் குறிப்புகள் தர வாழ்த்துக்கள்
அன்புடன்,
கவிதா
ஆமினா,
நான் ரசம் சாப்பிடுவதை நிறுத்தி பல மாதங்கள் ஆகுது. உங்க பூண்டு- பருப்பு ரசம் பார்த்தவுடனே, சாப்பிடனும் போல இருக்கு. கண்டிப்பா செய்து சாப்பிட்டு சொல்றேன். குறிப்புக்கு நன்றி.
பச்சை மிளகாய் நான் எல்லா ரசத்திலும் சேர்ப்பேன் கவிதா. இதிலும் தான். ஆனா காரம்பிடிக்காதவங்களுக்கு நான் ஓரளவுக்கு கம்மி பண்ணிடுவேன். தேங்காய் துருவல் சேர்ப்பதால் காரம் குறையும்.அதுனால பயப்படாம சேர்க்கலாம். இந்த முறையில் செய்துபாருங்கள்.கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்:)
பதிவுக்கு மிக்க நன்றி
ஊக்கங்களுக்கும் மிக்க நன்றி கவிதா:)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஹர்ஷா
இந்த குறிப்பு கொடுக்கும் போது மனசுப்பூறாவும் உங்க பெயர் தான் ஓடிட்டு இருந்துச்சு. இதுவும் இன்னும் 4 மாசத்துக்கு பிறகு உங்களுக்கு உதவும். இப்ப இருந்தே ட்ரை பண்ணுங்க:)
வருகைக்கு மிக்க நன்றி பா!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஆமினா,
ரொம்ப நன்றி. விருப்பப் பட்டியலில் சேர்த்துட்டேன்.
நன்றி பா.
செய்து பார்க்கும் போது மறக்காம பதில் போட்டுடுங்க:)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா