மசால் வடை

வழங்கியவர் : harshaa

தேதி : புதன், 01/09/2010 - 17:57

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

3.5
4 votes
Your rating: None
 

 

  • கடலை பருப்பு - ஒரு ஆழாக்கு (200 கி)
  • வெங்காயம் - 2
  • புதினா - ஒரு கைப்பிடி
  • பச்சை மிளகாய் - 3 அல்லது 4
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • உப்பு - தேவைக்கு
  • எண்ணெய் - பொரித்தெடுக்க
  • அரைக்க:
  • காய்ந்த மிளகாய் - 3
  • இஞ்சி - ஒரு துண்டு
  • பூண்டு - 2 அ 3 பல்
  • சோம்பு - அரை தேக்கரண்டி

 

 

கடலை பருப்பை கழுவி 2 முதல் 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், புதினா, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில், அரைக்கத் தேவையான பொருட்களை போட்டு நன்கு மசிய அரைத்துக் கொள்ளவும். ஒரு பிடி பருப்பை தனியே வைத்துவிட்டு மீதமுள்ள பருப்பை, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினாவுடன், தனியே எடுத்து வைத்த பருப்பையும், அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையையும் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் பருப்பு கலவையை வடையாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

சுவையான, மொறுமொறுப்பான மசால் வடை தயார். இதில் வெங்காயத்திற்கு பதில், நறுக்கிய வாழைப்பூ சேர்த்து வாழைப்பூ வடை செய்யலாம்.

 







ஹர்ஷா..

பார்க்கா நல்லா மொறுமொறுனு கலர்ஃபுல்லா இருக்கு..;) வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

ஒருவரின் முதுகிற்கு பின்னால் செய்ய வேண்டிய ஒரே வேலை தட்டிக் கொடுப்பது மட்டுமே.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும், அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

ரம்யா,
பதிவுக்கு நன்றி. செய்து பாருங்க.

அன்பரசி,
புதினா சேர்த்து செய்ததே இல்லை
அடுத்த முறை செய்யும் போது கண்டிப்பாக இப்படி செய்கிறேன்
மேலும் பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

அன்புடன்,
கவிதா

இந்த முறையில் செய்து பார்த்தது இல்லை. கண்டிப்பா செய்து பார்க்கிறேன். குறிப்புக்கு நன்றி!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கவிதா,
வேண்டுமானால் கொத்தமல்லி கூட சேர்த்து கொள்ளலாம்.
பதிவுக்கு நன்றி. செய்துட்டு எப்படி இருந்ததுனு சொல்லுங்க.

ஆமினா,
இந்த முறையிலும் செய்து பார்த்துட்டு சொல்லுங்க.
பதிவுக்கு நன்றி.

சிம்பிளாக கடலை வடை செய்து காட்டியுள்ளீர்கள். நானும் இந்த முறைப்படிதான் செய்வேன்.ஆனால்
புதினா இலை சேர்ப்பதில்லை.
புதினா இலை சேர்த்து செய்து பார்த்துவிட்டு, வருகின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி,
எப்படி இருக்கீங்க? எங்க அம்மா இப்படி தான் செய்வாங்க. எனக்கு இந்த வடை ரொம்ப பிடிக்கும். செய்து பார்த்துட்டு சொல்லுங்க. பதிவுக்கு நன்றி.

அன்பரசி...

வடை இழுக்குதே.... இங்க வரைக்கும் மணக்குது... காலங்காத்தால இதப்பாத்தா பசி கூடக்கொஞ்சம் ஜாஸ்திஆயிடுச்சு... என்னோட விருப்பப்பட்டியலில் சேர்த்துவிட்டேன். நான் வடைக்கு துவரம்பருப்பு கடலைப்பருப்பு இரண்டும் சேர்த்து அரைப்பேன். ஆனால் பண்டிகைக்காலங்களில் செய்வதால் வீட்டில் வெங்காயம் சேர்க்க முடியாது. ஒரு முறை கூட மசால் வடை செய்ய முடியலையே என்று நினைப்பேன். இந்த சனி ஞாயிறு 2 நாட்களில் ஏதேனும் ஒரு நாள் செய்து பார்த்துவிடவேண்டியதுதான்... செய்துபார்த்துவிட்டு சொல்கிறேன். நன்றி.. வாழ்த்துக்கள்..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹார்ஷா மாசால் வடை, மோர்குழம்புனு கலக்குரிங்க ரொம்ப நல்லா இருக்கு நான் வெண்டக்காய் மட்டுமே போட்டு குழம்பு செய்வேன் இப்போ இதுவும் செய்துபார்க்கிறேன் நன்றி.

அன்புடன்
நித்யா

ராதா,
முகப்பில், மசால்வடையோட உங்க தோசை ஜோடி பொருத்தம் நல்லாயிருக்கு. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா செய்து பாருங்க. பதிவுக்கு நன்றி.

நித்யா,
எங்க வீட்ல, எங்க அம்மா எப்பவும் வடை போட்டு தான் மோர் குழம்பு செய்வாங்க, நீங்களும் செய்து பாருங்க. பதிவுக்கு நன்றி. மசால் வடையும் மோர் குழம்பும் ஒரே நாள் செய்தது, அதான் அடுத்தடுத்து வந்துடுச்சு.

நேற்று நோன்பு திறக்க செய்தேன்.நோன்பு கஞ்சியுடன் combinationரொம்ப நல்லா இருந்தது.

ரீம்,
செய்துட்டீங்களா? சந்தோஷம். பிடிச்சதா? பதிவுக்கு நன்றி.

கடலை பருப்பு வடை மிகவும் அருமை மிக்க நன்றி

கடலை பருப்பு வடை மிகவும் அருமை மிக்க நன்றி

மசால் வடை அருமை.நானும் இப்படித்தான் செய்வேன் ஆனால் புதினா சேர்த்ததில்லை.இன்று புதினா சேர்த்து செய்தேன் சூப்பர்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹர்ஸா.. மசால்வடை அருமை. புதினா வாசம் நன்றாக இருந்தது ..நானும் புதினா சேர்த்து செய்தது இல்லை.. சேர்த்தபின் டேஸ்ட் சூப்பர்..நன்றி..

வாழு, வாழவிடு..

harshaa i like masaal vada ,its super .....

முயன்றால் முடியாதது
எதுவும் உண்டோ ?

அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

ஸ்வர்ணா,
உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி.தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

ருக்சானா,
உங்க பதிவு கண்டு மகிழ்ச்சி.மிக்க நன்றி.

பாரதி,
உங்க பதிவை இப்போதான் பார்க்கிறேன்.ரொம்ப நன்றி.