முரிக்கி சாலன் (கோழி குழம்பு)

வழங்கியவர் : ஆமினா
தேதி : வியாழன், 02/09/2010 - 02:05
ஆயத்த நேரம் : 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 15 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 3 நபர்கள்
- கோழி-1/2 கிலோ
- பெரிய வெங்காயம்-2
- மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
- சீரகத்தூள்-1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள்-1/2 ஸ்பூன்
- தனியா தூள்-1 ஸ்பூன்
- வெஜ் பிரியாணி/புலாவ் மசாலா -2 ஸ்பூன்
- உப்பு-தேவைக்கு
- மிளகுத்தூள்-1/2 ஸ்பூன்
- எண்ணெய் -3 மேசைகரண்டி
- கடாயில் எண்ணெய் ஊற்றி நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை போடவும். நன்கு பொரிந்ததும் எடுத்து தனியாக வைக்கவும்.
- அதே எண்ணெயில் கோழி துண்டுகளை இட்டு அரைவேக்காடாக பொரிக்கவும்.
- அதற்குள் எல்லாத் தூள்களையும் ஒரு கப் நீரில் கரைத்துக்கொள்ளவும்.அத்துடன் உப்பு,மற்றும் பொரித்த வெங்காயமும் சேர்த்து கோழியில் ஊற்றவும்.
- கோழி வெந்ததும் மேலாக சிறிது பெப்பர் தூவி சற்று கிளறி பின் இறக்கவும்.
Note:
சப்பாத்தி,பூரி,நாண்,இடியாப்பம்,சாதம் இவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். வெஜ் பிரியாணி/புலாவ் மசாலாவிலேயே வாசனை பொருட்கள் இருப்பதால் கிராம்பு,பட்டை,ஏலக்காய் போட தேவையில்லை. விருப்பப்பட்டால் இஞ்சி,பூடு பேஸ்ட் 1 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
ஆமினா பிரியாணி மசாலா, கறிமசாலா தெரியும். இந்த புலாவ் மசாலா என்ன என்ன பொருட்கள் சேர்த்து இருப்பாங்க. புலாவ் மசாலானு தனியா கடைல கிடைக்குதா.
தனியாவே கடைல கிடைக்குது பா. நான் எவரெஸ்ட் புலாவ் மசாலா தான் யூஸ் பண்ணுவேன். கறிமசாலா,பிரியாணி மசாலா பொடி மாறி தான் இருக்கும். இங்கே நிறைய சமையலில் அதை தான் சேர்க்குறாங்க. புலாவ் செய்யும் போதும் காய்கறிகளோடு சேர்த்து இந்த பொடியையும் வதக்கி புலாவ் செய்றாங்க.
அங்கே கிடைக்கும் என நினைக்கிறேன்.
கிடைத்தால் செய்து பார்த்துட்டு சொல்லுங்க. இந்த குறிப்பு எங்க ஆபிஸ்ல மாஸ்ட்டர் செஞ்சது. அருமையா இருக்கும். செய்து பாருங்க.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
நன்றி ஆமினா பதில் சொன்னதற்கு. எவரெஸ்ட் புலாவ் மசாலாவா பேர நோட் பண்ணி வைச்சுக்கிட்டு இங்குள்ள கடைகளில் கேட்டு பார்க்குகிறேன்.
நன்றி வினோஜா
கிடைக்கும் போது கண்டிப்பா செய்து பாருங்க. உங்களுக்கே பிடித்துப்போகும்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஆமினா,
கரம் மசாலா சேர்த்து செய்யலாமா?எனக்கு புலாவ் மசாலா கிட்டாது
புலாவ் மசாலாவில் என்ன பொருள்கள் இருக்கு கொஞ்சம் சொல்லுங்க?செய்து வச்சிடுவோம்...
கம கம குறிப்பு வாழ்த்துக்கள்..
அன்புடன்,
கவிதா
கவிதா
கரம் மசாலா கொஞ்சமா சேக்கலாம்.
புலாவ் மசாலா பாக்கெட் தூக்கி போட்டுட்டேன். நாளைக்கு பார்த்துட்டு சொல்றேன். விஜிடபிள் பிரியாணி மசாலா நான் உபயோகப்படுத்தி பார்த்தது இல்லை. அதுனால அதுல என்னன்ன இருக்கும்னு தெரியல. பொடியும்,பட்டை,ஏலக்காய்,கிராம்பு,அன்னாசி பூ,பிரிஞ்சி இலை.....இப்படி இருக்கும் தானே? அப்ப அதையே உபயோகப்படுத்தலாம். புலாவ்க்கும் பிரியாணிக்கும் பெருசா வித்தியாசம் இருக்காதுன்னு நினைக்கிறேன். எதுக்கும் நாளைக்கு கன்பார்ம் பண்ணிட்டு சொல்றேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிதா.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
பிரியாணி மசாலா,புலாவ் மசாலா எல்லாம் ஒன்று தான். நான் தான் சரியாக கவனிக்கல. குறிப்புலையும் போட்டேன்.
கவிதா நீங்க கேட்டது...
Biriyani/pulav masala((எவரெஸ்ட் மசாலா பாக்ஸ் அட்டையில் எழுதியிருந்தது)
cumin, cassia, caraway, black pepper, cardamom,netmeg, mace, chilli, cassia leaf, dry fenugreek leaf(kasuri methi) ,termeric, clove, coriander and black cardamom
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
நன்றி ஆமினா
கிடைக்குதா பார்க்கிறேன்...
பொடித்த பின்பு சொல்கிறேன்
அன்புடன்,
கவிதா