தேங்காய் மிளகுக்கறி

image

வழங்கியவர் : ஆமினா

தேதி : வியாழன், 02/09/2010 - 02:31

ஆயத்த நேரம் : 15 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 15 நிமிடங்கள்

பரிமாறும் அளவு : 3 நபர்கள்

4
2 votes
Your rating: None
 

 

  • மட்டன் -அரைக்கிலோ
  • தேங்காய்-கால் மூடி (பொடியாக நறுக்கவும்)
  • மிளகு -1ஸ்பூன் (மிக்ஸியில் கரகரப்பாக பொடித்தது)
  • தக்காளி-1
  • பட்ட மிளகாய்-2
  • வெங்காயம்-1
  • சின்ன வெங்காயம்-5 (அரைக்கவும்)
  • இஞ்சி,பூடு பேஸ்ட்-1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  • பட்டை-1
  • ஏலக்காய்-2
  • கிராம்பு-3
  • உப்பு-தேவைக்கு
  • எண்ணெய்-தாளிக்க தகுந்த அளவு

 

  • எண்ணெயில் பட்டை,ஏலக்காய்,கிராம்பு போட்டு முறியவிடவும்.
  • அத்துடன் பட்ட மிளகாய்,தேங்காய்,வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • பின் இஞ்சி,பூடு விழுது,
  • அரைத்த சின்ன வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போன பின் தக்காளி,மஞ்சள் தூள், மிளகு தூளில் பாதி சேர்க்கவும்.
  • எல்லாம் நன்கு வெந்து எண்ணெய் பிரியும் போது கறியை சேர்த்து வதக்கவும்.
  • சிறிது தண்ணீர் தெளித்து குக்கரை மூடவும்.
  • 4 விசில் வந்ததும் 5 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.
  • அதன் பின் மூடியை திறந்து தண்ணீர் வற்றும் வரை கிளறவும். முழுவதும் வற்றும் முன்பே மீதமுள்ள மிளகையும் சேர்த்து கிளறிவிட்டு பின் இறக்கவும்.

Note:

சாதத்திற்கு சாம்பார் அல்லது ரசமுடன் இதையும் சேர்க்க அருமையாக இருக்கும்.







ஆமினா என்ன நீங்க எனக்கு பிடித்த ரெசிப்பியா கொடுக்கிறீங்க.இதுவும் நான் செய்வேன்.கறியை மாற்றிவிட்டு அந்த பாத்திரத்தில் சாதம் போட்டு பிரட்டி சாப்பிட்டால்.அருமையாக இருக்கும்.nice receipe.

ஆமினா,
அம்மா இதே போலே தான் செய்வாங்க மட்டன் செய்து நாளாச்சு இந்த வாரம் மட்டன் வாரம் தான்..
செம ருசியாக இருக்கும்
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்..

அன்புடன்,
கவிதா

ரீம் நீங்க நம்ம கட்சியா? நானும் அப்படி தான். கறி அடுப்பில் இருந்து இறக்கிய உடனேயே அதில் சாதம் போட்டு பிரட்டி சாப்பிடுவேன். ஏன்னா பிறகு கிடைக்காது. வீட்டில் எல்லாருக்கும் அந்த கிரேவி ரொம்ப பிடிக்கும்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கவிதா

மட்டன் இல்லாம சாப்பாடா? சீக்கிரம் வாங்கி செய்யுங்க. வாரம் ஒரு நாள் மட்டன் இல்லைனா ஆமி அம்மாவுக்கு போன் போட்டு அழுகுவா. ஏன்னா ஏக்கத்துல காய்ச்சலே வந்துடும். என் தொந்தரவு தாங்க முடியாம ஆத்துக்காரரே வாங்கிட்டு வந்துடுவார்,

இந்த வாரம் மட்டன் வாரமா? அப்ப நானும் வந்துடுறேன் கவி வீட்டுக்கு!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா