மூக்கடலை குழம்பு

தேதி: September 2, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

 

முளைகட்டிய மூக்கடலை - அரை கப்
சின்ன வெங்காயம் - 8
பூண்டு - 4 பல்
தக்காளி - ஒன்று
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி(காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
புளி - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு ஏற்ப
தேங்காய் - சிறிது
எண்ணெய், கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை - தாளிக்க
ஆல் பர்பஸ் பொடி - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு


 

சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். புளியை வேக வைத்த தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். தேங்காய், சீரகம், 3 வெங்காயம் சேர்த்து தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும்
பின்னர் குக்கரில் கடலையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
அதனுடன் வேக வைத்த கடலையும் சேர்த்து வதக்கவும்
நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது புளிக்கரைசல் ஊற்றி கொதிக்க விடவும்.
நன்றாக கொதிக்கும் போது மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும்
எண்ணெய் பிரிந்து வரும் போது அரைத்து வைத்த தேங்காய், வெங்காய விழுதை போட்டு கொதிக்க வைக்கவும்
கடைசியாக ஆல் பர்பஸ் பொடி மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
சுவையான மூக்கடலை குழம்பு தயார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மூக்கடலைனா சன்னாவை தானே சொல்றீங்க?

இம்முறை வித்தியாசமா இருக்கு.

மேலும் பல குறிப்புகளை பகிர்ந்துக்கொள்ள வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கவிதா 50 குறிப்புகள் தொடர்ந்து விளக்கப்படத்துடன் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள். நிறைய குறிப்புகள் கொடுங்க. எனக்கு சமைக்க ஈசியா இருக்கு. உங்கள் குறிப்புகள் எப்பொழுதும் வித்தியாசமான குறிப்புகளாகவும், செய்வதற்கு ஈசியாகவும் இருக்கும். போட்டோவ பார்க்கும்போதுதான் மூக்கடலைனா சன்னா தெரிந்ததது. இந்த குழம்பு சப்பாத்தி, சாதம் ரெண்டிற்கும் பொருந்துமா.

கவிதா,
மூக்கு கடலை குழம்பு, உங்க ஆல்பர்பஸ் பொடியோட சேர்ந்து மணக்குது. 50 ஆவது குறிப்பும் நல்லாயிருக்கு. மேலும் நிறைய குறிப்புகள் கொடுங்க, வாழ்த்துக்கள்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஆமினா,
சன்னாவேதான்
செய்து பாருங்க நல்லா வரும்
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வினோஜா மேடம்,
எல்லாவற்றுக்கும் பொருந்தும்
செய்து பாருங்க உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பரசி,
ரொம்ப ரொம்ப நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

உங்களது அனைத்துக் குறிப்புகளுமே நன்றாக இருக்கின்றன கவிதா. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

நான் முதலில் இது என்ன புதிதாக மூக்கடலை என்று பார்த்தேன். பிறகு தான் புரிந்தது அது கொண்டைக்கடலை என்று. கண்டிப்பா ஒரு நாள் ட்ரை பண்ணிட வேண்டியதுதான். சப்பாத்திக்கு சைட் டிஷ் கிடைச்சுருச்சு.........

மேலும் மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்...

இனிமே என்னை மேடம் என்று அழைக்கக்கூடாது. அப்படி அழைத்தால் என்ன தண்டனை என்பதை உங்களுடைய முட்டைக்கோஸ் பொரியல் குறிப்பில் உங்களுக்கு குறிப்பிட்டுருக்கிறேன். போய் பாருங்கள்......

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆல் பற்பஸ் பொடி என்றால் என்ன? please

shagila

இமா மேடம்
செய்து பாருங்கள்
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ராதா அக்கா,
மதியமே செய்து விட்டால் சாதத்திற்கும் ஆகிவிடும்
செய்து பாருங்கள்
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஷகிலா மேடம்,
ஆல் பர்பஸ் போடி லிங்க் இங்கு உள்ளது
http://arusuvai.com/tamil/node/15911

உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா