காலிபிளவர் பொரியல்

வழங்கியவர் : முத்துமாரி சிவசக்திவேல்
தேதி : வியாழன், 02/09/2010 - 22:25
ஆயத்த நேரம் : 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 15 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 4 நபர்கள்
- காலிபிளவர் - 1
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 6 பல்
- பட்டை - சிறிதளவு
- இலவங்கம் - 2
- வெங்காயம் - 2
- கடலைபருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் துருவல் - 1/2 கப்
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
- தனியா பொடி - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
- காலிபிளவரை சிறு சிறு துன்டுகளாக்கி சுடுதண்ணீரில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்
- கடலை பருப்பை வேகவைத்து எடுத்து கொள்ளவும்
- வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- இஞ்சி, பூண்டு, பட்டை, இலவங்கம் இவைகளை ஒன்றாக அரைத்து கொள்ளவும்
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் கறிவேப்பிலையை போட்டு வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து வதக்கி வாசனை வந்ததும் அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதனுடன் மிளகாய் பொடி, தனியா பொடி சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட்டு அதில் காலிபிளவரை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி 10 நிமிடம் வேக விடவும். இடைஇடையே மூடியை எடுத்து கிளறி விடவும்
- காலிபிளவர் நன்கு வெந்த்தும் அதில் வேகவைத்த கடலை பருப்பு போட்டு 1 நிமிடம் கிளறி பிறகு தேங்காய் துருவலை பொட்டு 2 நிமிடம் கிளறி இறக்கவும்
- சுவையான காலிபிளவர் பொரியல் ரெடி
- இந்த பொரியலுக்கு இஞ்சி பூண்டு விழுது பட்டை இலவங்கம் இவைகளை காலிபிளவரின் சைஸுக்கு ஏற்றார் போல் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்
Note:
இந்த பொரியலை ரசம் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் இதனுடன் சாப்பிட நல்ல காம்பினேஷன் ஆக இருக்கும்
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
இந்த செய்முறை நல்லா இருக்கு. செய்து பார்த்துட்டு சொல்கிறேன்.
குறிப்புக்கு மிக்க நன்றி
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
காலிபிளவர் பொரியல்
நான் ஜாஸ்தி இதை உபயோகிக்க மாட்டேன், நல்லாருக்கு, ஒரு முறை ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.
அன்புடன்
பவித்ரா
முத்துமாரி,
இந்த முறை நல்லா இருக்கே
வாழ்த்துக்கள்
அன்புடன்,
கவிதா