பைகானா புட்டா தாலி
வழங்கியவர் : uk5mca
தேதி : வெள்ளி, 03/09/2010 - 17:32
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
இதன் அர்த்தம் கத்தரிக்காய் மூக்கடலை கூட்டு. எப்போதுமே கூட்டு செய்யும் போது ஒரியர்கள் இருவேறு பருப்பு கலவை போட்டு செய்வார்கள்
- கத்தரிக்காய் - 4
- பயத்தம் பருப்பு - கால் கப்
- மூக்கடலை - கால் கப்
- வெங்காயம் - ஒன்று
- பச்சை மிளகாய் - 2
- தக்காளி - ஒன்று
- ஆல் பர்பஸ் பொடி - ஒரு தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
- எண்ணெய், கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க
- கொத்தமல்லி - சிறிது
![]() |
வெங்காயம், பச்சைமிளகாய், கத்தரிக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும். மூக்கடலையை முதல் நாளே ஊற வைக்கவும். |
![]() |
குக்கரில் ஊற வைத்த பருப்பு, கடலை சேர்த்து வேக வைக்கவும். |
![]() |
பின்பு கத்தரிக்காய், வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு விசில் வைத்து இறக்கவும். |
![]() |
இறக்கி வைத்து ஆவி அடங்கியதும் ஆல் பர்பஸ் பொடி, உப்பு சேர்க்கவும். |
![]() |
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றை சேர்த்து தாளிக்கவும். |
![]() |
பருப்பு கலவையில் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். |
![]() |
சுவையான பைகானா புட்டா தாலி தயார். |
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்







கவிதா,
பெயர் மட்டுமல்லாமல்,ரெசிப்பியும் வித்தியாசமாய் உள்ளது.ஒரிய சமையலிலும் கலக்குறீங்க. வாழ்த்துக்கள்.
பைகானா புட்டா தாலி கொஞ்சம் வித்யாசமான குறிப்பா இருக்கே. நாளை செய்து பாத்துட்டு சொல்ரேன். ஓ.கே. வா?
அன்பரசி,
ரொம்ப நன்றி
என் தோழி தீபு தான் இந்த சமையல் செய்ய காரணம்
நல்லா இருக்கும் செய்து பாருங்க
அன்புடன்,
கவிதா
கோமு மேடம்,
நல்லா இருக்கும் செய்து பாருங்க
அன்புடன்,
கவிதா
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி
அன்புடன்,
கவிதா
Very nice. Can we have this with rice or tiffin item
ஹாய் கவிதா நலமா? ரெசிபி ரொம்ப வித்தியாசமா இருக்கு பெயரும் வித்தியாசமா இருக்குபா இதை எதோடு சாப்ட நல்லா இருக்கும்
பிரியா மேடம்,
நீங்க சாதம்,சப்பாத்தி,தோசை,பூரி,நாண்,பிரட் இதுகூட வேண்டுமானாலும் சாப்பிடலாம் உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி
அன்புடன்,
கவிதா
நஸ்ரீன் ,
நான் நலம் நீங்க நலமா?
நீங்க சாதம்,சப்பாத்தி,தோசை,பூரி,நாண்,பிரட் எது கூட வேண்டுமானாலும் சாப்பிடலாம் உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி
அன்புடன்,
கவிதா
நான் நலம் ரொம்ப நன்றி கவி கண்டிப்பா செய்து பார்க்கின்றேன் என் பெயரை nasrin என்று type செய்யுங்கள்
பைகானா புட்டா தாலி கவி இன்று உங்க செய்தேன் பா ஆமினா உடைய பூண்டு சாதத்துடன் நல்லா அருமைய இருந்தது மிக்க நன்றி
மூக்கடலை என்றால் என்ன?எனக்கு தெரியவில்லை...வெள்ளை கொண்டைக் கடலை யா?
வாழ்க்கை வாழ்வதற்கே,வாழ்ந்து காட்டுவோம்!!!
KirubhaArunkumar