கீரையோ கீரை!!!!!!!!!

கீரை சொன்னாலே நம்ம ஆளுக இடத்தை காலி பண்ணீடுவாங்க. நானும் அப்படி தான். அதுக்காக தான் இந்த இலை எழுதறேன். கீரை ல யே கொஞ்சம் வித்தியாசமான சொல்லுங்க.... நிறையா அனுபவசாலிக இருக்கீங்க, எனக்கு help பண்ணுங்க
<!--break-->

வாங்க வாங்க, நல்ல நல்ல இழையா ஆரம்பிக்கிறீங்க. கீரை எனக்கு பிடிக்கும், ஆனா சோம்பேறித்தனமா இருக்கும், அதனால ஜாஸ்தி வாங்க மாட்டேன். புளிச்சக்கீரைன்னா ரொம்ப இஷ்டம், வெந்தய்க்கீரை கூட அறுசுவையில் பார்த்துட்டு செய்யணும்ன்னு நினைச்சுட்டு இருக்கேன். அனுபவசாலிகள் வந்து நிறைய சொல்லுவாங்க, நான் கத்துக்குட்டிதான் சமையல் பொறுத்தவரை.

அன்புடன்
பவித்ரா

ஹாய் சுகந்தி நல்ல இழை(இலை இல்லை)... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது முருங்கைக்கீரை தான் அத எப்படி பன்னாலும் சாப்பிடுவேன். அம்மா அதை பருப்பு போட்டு, முட்டை போட்டு, எதுமே போடாம தேங்காய் மட்டும் போட்டுன்னு விதவிதமா பொரியல் பன்னுவாங்க. குழம்பு கூட வெப்பாங்க தேங்காய் அரச்சும் பன்னுவாங்க பருப்பு போட்டும் பன்னுவாங்க. எப்படி பன்னினாலும் ஒரு புடி புடிப்பன்ல?????

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

எனக்கு எல்லா கீரையும் பிடிக்கும்.குறிப்பா சொல்லனும்னா
பொன்னாங்கண்ணி- இதை பருப்புல போட்டு கடைஞ்சி சாப்பிடலாம்,பொறியலும் செய்யலாம், இது சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு நல்லது, உடம்பு பொன் மாதிரி மின்னுமாம்.
முருங்கைகீரை- இதுல ஏகப்பட்ட இரும்பு சத்து இருக்கு, இதையும் பொரிய்ல் பண்ணிதான் சாப்பிடுவேன்.

வெந்தயக்கீரை - இது உடம்புக்கு குளிர்ச்சியானது, இதை பருப்புல போட்டு கடைஞ்சி சாப்பிடலாம்,பொறியலும் செய்யலாம்,சட்னி,சப்பாத்தி மாவுல போட்டு பிசைந்து சப்பாத்தி செய்யலாம், அடை கூட செய்யலாம்.

சிறுகீரை,தண்டுகீரை, பசலைக்கீரையும் இதே போலத்தான் கட்லெட்,சப்பாத்தி,வடை போன்றவை செய்யலாம்.

மணத்தக்காளிக்கீரை- இது வாய்புண் மற்றும் வயிற்றுப்புண்ணுக்கு நல்லது, இதை பருப்பு போட்டு பொறியல் செய்து சாப்பிடலாம்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

சகோ.சுகந்தி,

கீரையில் நான் அதிகம் கேள்விப்பட்டது பொன்னாங்கண்ணி,முருங்கைக்கீரை, முளைக்கீரைதான்.

முருங்கைக்கீரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.முளைக்கீரை தான் அம்மா அடிக்கடி சமைப்பாங்க.

பொன்னாங்கண்ணி, 'கண்ணுக்கு நல்லதென கேள்விப்பட்டிருக்கிறேன். ஊரை விட்டு வந்த பின் இவையெல்லாம் வெறும் பெயரளவில் மட்டுமே நின்றுவிட்டன என்பது வருத்தம் தான்.

கீரை' கட்டாயம் தேவை என்பதால்; நாங்க குழந்தையா இருக்கும் போது 'அம்மா, பருப்பினுள் கலந்துசமைத்துத் தருவார்கள் மிகச்சுவையாக இருக்கும்.

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா'

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். மாசமா இருக்கும் போது கீரையை அப்படியே தட்டில் வைத்து ஸ்பூனால் டீவி பார்த்துட்டே சாப்பிடுவேன். முருங்கை கீரைன்னா உயிர். பொன்னாங்கன்னி கீரையில் உள்ள வாசனைக்கே நல்லா சோறு இறங்கும். பக்கத்து ஊர்ல இருந்து ப்ரஷ்ஷா கொண்டு வருவாங்க. குரல் கேட்டாலே போதும். வாசல்ல எட்டிபாக்கும் முதல் ஆள் நான் தான்.

சென்னையிலும் கீரை சீப்பா இருந்தது. ஒரு கட்டு 5 ரூபா தான். விதவிதமா கீரை கொண்டுவருவாங்க. வாரத்துல 6 நாளும் கீரை தான்.

ஆனா இங்கே கீரைன்னா அவங்களுக்கு தெரிஞ்சது பாலக் மட்டுமே:(
மாலில் உள்ள புட்பஜாரில் மட்டுமே கிடைக்கும். அதுவும் அரைக்கீரை,சிறுகீரை மட்டுமே.

பருப்பு போட்டு,கசகசா தண்ணீர்,தேங்கய் பால்,தேங்காய் துருவல்,முட்டை,வெங்காயம் .....இப்படி எப்படி போட்டாலும் எங்க வீட்டுல காலியாயிடும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கீரைல எனக்கு சிறுக்கீரை, பருப்புக் கீரை, முருங்கை கீரை, கொடி பசலை மிகவும் பிடித்த வகைகள்.

முருங்கை கீரைல துவரம்பருப்பு தேங்காய் போட்டு கூட்டு பண்ணுவாங்க அம்மா. அப்புறம் பொரியல் அப்பிடியே சாப்பிடலாம். அம்மா வீட்ல முருங்கை மரம் இருந்தது. வாரத்துல் 3நாளும் கீரை தான்.

பருப்பு கீரை இருக்கு பாருங்க அடாடா அப்படி ஒரு டேஸ்ட் போங்க. இன்னைக்கு எல்லாம் சாப்டுட்டே இருக்கலாம் போல இருக்கும். நான் கர்ப்பமா இருந்தப்ப நிறைய சாப்டிருக்கேன்.

செடி பசலையும் இருந்தது. அதை பயித்தம் பருப்பு போட்டு கூட்டு செய்வாங்க நல்லா இருக்கும். அதை விட கொடி பசலை அப்படி ஒரு டேஸ்ட். நல்ல இரத்த விருத்தி ஆகும். இரும்பு சத்தும் கூட.

சிறுகீரை எப்பவும் என் செல்ல கீரை. அதன் சுவையும், மணமும் ஈடு இணை இல்லாதது. மற்ற கீரைகள் எனக்கு எதிரி இல்லை. எல்லாமே அறுசுவை தோழிகள் போல அன்பான கீரைகள் தான்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அடேங்கப்பா கீரை க்கு இவளோ fans பேர் இருக்கீங்களா!!!!! ரொம்ப சந்தோசம். கீரை கடையறது, பொரியல் இல்லாம வேற different dish ஏதாவது பண்ண முடிய்மா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

http://www.arusuvai.com/tamil/recipes/109

இந்த லிங்க்ல போய் பாருங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரொம்ப நன்றி ஆமினா மேடம்.....இது தான் முதல் முறையா உங்க கிட்ட பேசறேன், ரொம்ப சந்தோசம்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நீங்க சொன்ன விதமே சாப்பிட்ட மாதிரி இருக்கு.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்