கத்தரிக்காய் சம்பல்

தேதி: September 4, 2010

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (5 votes)

 

பெரிய கத்தரிக்காய்-1
தக்காளி-2
வெங்காயம்-2
பச்சை மிளகாய்-1
புதினா,கொத்தமல்லி-சிறிதளவு
தேங்காய் துறுவல்-ஒரு கைப்பிடி
உப்பு-தேவைக்கு


 

கத்தரிக்காயை தீயில் காட்டி சுடவும். தக்காளியையும் தோல் பிரியும் அளவுக்கு சுடவும்.

இரண்டிலும் கருகிய தோலை நீக்கிவிட்டு கையால் பிசையவும்.

அதில் மேலே சொன்ன எல்லா பொருட்களையும் போட்டு நன்கு பிசையவும்.

அரை மணிநேரம் ஊறவைத்து பின் பரிமாறலாம்


சைட் டிஷ் இல்லாத நேரங்களில் அவசரத்துக்கு இது போல் செய்யலாம். சாப்பிட அருமையாக இருக்கும். கத்தரிக்காய் இல்லாமலும் செய்யலாம். இன்னொரு முறையில் நகர பொடிகருவாடு சுட்டு/பொரித்து முள் இல்லாமல் எடுத்து இதில் சேர்த்து சாப்பிடலாம். தேங்காய் விருப்பம் இருந்தால் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆமினா கத்தரிக்காய் சம்பல் நல்லதொரு ரேசப்பி
எழிதாக செய்து விடலாம்.இந்த சற்றடே செய்யலாம் என்றிருக்கின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

கண்டிப்பா செய்து பாருங்க யோகராணி. சண்டே வந்து நான் கேப்பேன் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

புதுமையாக இருக்கிறது, கத்திரிக்காய் சம்பல், இதுவரை நான் அப்பளத்தை மட்டுமே சுட்டு இருக்கிறேன். இது புதுமையாக உள்ளது. கண்டிப்பாக ஒரு நாள் செய்து பார்க்கிறேன்.

ரங்கலஷ்மி லோகேஷ்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

இதுவரை நான் அப்பளத்தை சுட்டதில்லையே! நானும் செய்து பாக்குறேன். புதுமை இல்லை ரங்கா.. இது பழைய ரெசிபி தான். என் பாட்டிக்கு அவங்க பாட்டி சொல்லி கொடுத்தாங்களாம். எனக்கு என் பாட்டி சொல்லி கொடுத்தாங்க. நாளைக்கு என் பேத்திக்கும் சொல்லி கொடுப்பேன் :)

கண்டிப்பா செய்துட்டு எப்படி இருந்ததுன்னு மறக்காம சொல்லிடுங்கோ!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா,
என் வீட்டில் எலெக்ட்ரிக் stove இருப்பதால் சுட முடியாது ..அதனால்
கத்தரிக்காய் இல்லாமல் செய்து பார்த்தேன்
நல்லா வந்தது தட்டை,சிப்ஸ் கூட சாப்பிட்டாலும் நல்லா இருக்கு
மேலும் பல குறிப்புகள் தாங்க...

என்றும் அன்புடன்,
கவிதா

எலக்ட்ரிக் ஸ்டவ் வில் நன்றாக சுட வருமே. ஆனால் ஒட்டிகொள்ளும். அதான் சிரமம். ஆனால் இடுக்கியில் வைத்து கேஸில் தான் காமிப்பேன்.

என்னவருக்கும் தக்காளி மட்டும் சேர்த்து செய்தால் ஒரு பிடி பிடிப்பார். மிக்க நன்றி கவிதா.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா கத்தரிக்காய் சம்பல் இந்த சற்றடே செய்து பார்த்தேன்,
நன்றாக வந்தது அத்தோடை ருசியாகவும் இருந்தது.வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மறக்காம பின்னூட்டம் இட்டதற்கு நன்றி யோகராணி.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

hai i am new to this website let teach everything to me to cook because iam in bahrain self cooking

மேலே யாரும் சமைக்கலாம் பகுதியை கிளிக் பண்ணி பாருங்க. வலப்புறத்தில் நிறைய பிரிவுகள் இருக்கும் ;)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ammina