மெகந்தி டிசைன் - 3

தேதி: September 4, 2010

4
Average: 3.8 (8 votes)

 

சாட் பேப்பர்
கருப்புநிற ஸ்கெட்ச் பென்

 

கட்டை விரலுக்கு நேர், எதிர் பகுதிக்கும் நடுவே இரட்டை கோடுகள் போல் ஒரு சிறிய அரை வட்டம் வரைந்து கொள்ளவும். அதன் மேல் சின்ன சின்ன வட்டங்கள் வரிசையாக வரையவும். அதன் மேல் இரட்டைகோடுகள் வரைந்து சின்ன சின்ன இலைகள் போல் இடைவெளி விட்டு வரையவும். மீண்டும் ஒரு இரட்டை கோடுகள் போட்டு அரை வட்டத்தை ஒன்றன் மேல் ஒன்று சாய்வாக வருவது போல் வரைந்து அதனுள்ளே படத்திலுள்ள டிசைனை போல் வரைந்து கொள்ளவும்.
இந்த டிசைனின் இரட்டைகோடுகள் மேல் சின்ன சின்ன வட்டம் வரைந்து ஒவ்வொரு வட்டத்திலும் புள்ளி வைக்கவும். இந்த டிசைனுக்கும் சற்று தள்ளி இரட்டைகோடுகள் வரைந்து அதன் இருப்புறமும் இலைகள் வருவது போல் வரைந்து முடிக்கவும். ஒவ்வொரு இலைகளின் மேலும் வளைவு வளைவாக இரட்டை வளைவுகள் வரைய வேண்டும்.
அடுத்து காலின் மணிக்கட்டு நேராக இரட்டை கோடுகள் வரையவும். அதன் கீழ் சிறிது இடைவெளி விட்டு வளைவு வளைவாக இரட்டை கோடுகள் வரைந்து அதன் உள்ளே படத்திலுள்ள டிசைனை வரையவும். இந்த வளைவு டிசைனில் முக்கால் பாகம் அளவிலிருந்து வரைந்த இலை டிசைனில் கால் பாகம் அளவுக்கு ஒரு அரைவட்டம் வரையவும். அதன் உள்ளே ஒரே அளவாக மொத்தம் 5 இரட்டைகோடுகள் வரைந்து அதன் ஒவ்வொரு வளைவுவிலும் ஒவ்வொரு டிசைன் வரைந்து கொள்ளவும் (படத்திலு உள்ளது போல்). இதே டிசைனை பாதம் ஓரத்தின் மேல் பகுதி வரைக்கும் நான்கு பகுதியாக போட்டு முடிக்கவும்.
மணிக்கட்டு நேர் போட்டுள்ள கோடுகளின் மேல் இரண்டு அரை வட்டம் வரையவும். இரண்டு வட்டத்தையும் சேர்த்தது போல் ஒரு வட்டம் வரையவும். அந்த வட்டத்தின் நடுவில் டைமண்ட் வடிவில் ஒரு கட்டம் வரைந்துக் கொள்ளவும். அதன் இரு ஓரங்களிலும், உள்ளேயும் படத்திலுள்ளது போல் இலைகளும், கோடுகளும் வரைந்து முடிக்கவும். எல்லா கோடுகளுமே இரட்டை கோடுகளாக வரைந்து முடிக்க வேண்டும்.
இப்போது கால் விரல்களிலும், பாதம் ஓரத்தின் இடைவெளி பகுதி முழுவதும் இரட்டை, இரட்டை கோடுகளாக இடைவெளி விட்டு வரைந்து கொள்ளவும். ஓவ்வொரு இரட்டை கோடுகளின் இரு ஒரங்களிலும் சின்ன சின்ன முத்துக்கள் போல் வரைந்து கொள்ளவும்.
திருமணத்தின் போது மணமகள் கால்களுக்கு போட்டுக் கொள்ளக்கூடிய டிசைன் இது. இந்த மெகந்தி டிசைனை அறுசுவை நேயர்களுக்காக வரைந்து காட்டியவர் திருமதி. அனுஷா அவர்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அறுசுவைக்கு நல்லதொரு மெஹெந்தி டிசைன் கலெக்க்ஷன் கிடைக்கும் என்று தெரிகிறது. ;)
அழகாக வரைந்து காட்டுகிறீர்கள். பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

பார்த்த உடனே போடணும்னு தோனுது. இன்றே ட்ரை பண்றேன்.

கவிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta