மேதிகோதுமை தோசை

தேதி: September 6, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

வெந்தய கீரையை உணவில் சேர்த்து கொண்ட முதல் மக்கள் இந்தியர்கள், எகிப்தியர்கள் இதனை மருத்துவத்திற்கு மட்டுமே பயன்படுத்தினர். ரோமானியர்கள் மாட்டு தீவனமாக தான் முதலில் பயன்படுத்தினர். அதனால் தான் அதற்கு இன்னொரு பெயராக "கிரீக் ஹே" வந்தது .

 

கோதுமை மாவு - ஒரு கப்
வெந்தயக்கீரை - ஒரு கப்
தோசை மாவு - 2 கரண்டி
தயிர் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய், கடலைப்பருப்பு, உளுந்து, சீரகம், வேர்கடலை, பெருங்காயம் - தாளிக்க
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கு ஏற்ப


 

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, வெந்தயக்கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கோதுமை மாவில் தயிர், தோசை மாவு, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
தோசைக்கல் சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பெருங்காயம் தாளித்து கடலைப்பருப்பு, உளுந்து, வேர்கடலை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
அதிலேயே வெந்தயக்கீரை, கொத்தமல்லித்தழை சேர்த்து அந்த வெப்பத்திலேயே பரத்தி ஆறவைக்கவும்.
ஆறிய பொருட்கள் அனைத்தையும் கோதுமை கலவையில் சேர்த்து, சிறிது நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.
தோசைக்கல் சூடானதும் தோசைகளாக வார்த்து குறைந்த தீயில் இருப்புறமும் வேக வைத்து எடுக்கவும். சுவையான மேதி கோதுமை தோசை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
மேதி கோதுமை தோசை, வித்தியாசமா இருக்கு. கோதுமை மாவுடன் மேதி சேர்த்து செய்ததில்லை. செய்து பார்த்துட்டு சொல்றேன். குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

அன்பரசி,
செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நான் .மேத்தி சேர்த்து பராத்தா தான் செய்திருக்கேன். இந்தக்குறிப்பைப்பார்த்து
இனி தோசையும் செய்து விடுவேன்.

சித்ரா மேடம் ,
செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா