
ஏங்க, என்னிக்கு பௌர்ணமி? கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர்.
இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா? வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்கு கேக்கறீங்க மிஸஸ் தார்?
அச்சா, இன்னும் 2 நாட்களிருக்கே. நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன் சொல்லவா? எல்லா மாசமும், சொசைட்டி மீட்டிங்க், வெறும் பேச்சு என்று உப்பு, சப்பில்லாம போயிண்டு இருக்கு. இந்ததடவை ஒரு நிலா சாப்பாடு வச்சுண்டா என்ன?
அன்று ஐயர் மாமி வீட்டில் மெம்பர்கள் அனைவரும் கூடி இருந்தார்கள். எல்லாரிடமிருந்தும் உற்சாக ஆமோதிப்புகள். ஓ.எஸ், குட் ஐடியா. எல்லாரும் ஃபேமிலியோட கலந்துக்கணும். சரி நாம 8 ஃபேமிலி இருக்கோம். ஐயர் மாமி வீட்லதான் மொட்டைமாடி வசதி இருக்கு. அங்க வச்சுக்கலாம்.
நாம எல்லாரும் வேற, வேற பாஷைக்காரங்கதான். ஆனாகூட நல்ல நட்புணர்வோட பழகிண்டு இருக்கோம். குட் ஃப்ரெண்ட்ஸாவும் இருக்கோம். இப்போ ப்ளான் போடலாமா?
'ஒவ்வொருவர் ஒவ்வொரு டிஷ் பண்ணிண்டு வரணும்.'
அவங்க, அவங்க வீட்ல பண்ணிட்டு வரலாமா. இல்லைனா தேவையான சாமான்களை இங்கே கொண்டு வந்து சூடு, சூடா தயார் பண்ணலாமா?
எல்லாரும் ஒரே குரலில், 'சாமான்களைக்கொண்டு வந்து இங்கியே சூடாக தயார் பண்ணலாம். அதுதான் சரியா இருக்கும்.'
சரி இப்போ யாரு, யாரு, என்ன டிஷ் பண்றீங்க? முதல்ல மிஸஸ் தார்..
"நான் காஷ்மீரி அதனால அங்க ஃபெமசான குல்கந்தும், ஆப்பில் சாக்லெட்டும் பண்ரேன்."
அடுத்து ஐயர் மாமி "நீங்க மதராசி, உங்கஃபெவரிட் இட்லி தோசை,சட்னி, சாம்பார் பண்ணிடுங்க."
நெக்ஸ்ட் பட்டாச்சரியா, "நீ பெங்காலி உன்னோட பெவரிட் என்னா? ஃப்ரட் ஃபிஷ் என்று மிஸஸ் பட்டாச்சரி ஆரம்பிக்கும்போதே ஐயர் மாமி காதுகளைப் போத்திக்கொண்டு சிவ, சிவா, பௌர்ணமியும் அதுவுமா, மீனெல்லாம் ஏண்டி சொல்ரேள். நாங்கல்லாம் சுத்தமான வெஜிடேரியன் தெரியுமோ இல்லியோ? அதுவும் தவிர எல்லாரும் சேர்ந்து சாப்பிடும்போது இந்த மீனு, முட்டை யெல்லாம் வேண்டாமே. என்று ஐயர்மாமி அழமாட்டாக் குறையாக சொல்லவும்
உங்க கூட இதுதான் மாமி ரொம்ப கஷ்டம் அது சாப்பிடமாட்டோம், இது சாப்பிட மாட்டோம் என்ரெல்லாம் சொல்லி எங்க மூடையே கெடுத்துடரீங்க. சரி, சரி, நான் ரச குல்லா, கலாகந்தும் பண்றேன்.
'மிஸஸ் மல்கோத்ரா உங்க பஞ்சாபி ஃபேவரிட் என்னா?'
'ஆலு ப்ரோட்டாவும், மிக்ஸ்ட் பாஜியும் நான்பண்ரேன்.'
'மிஸஸ் கர்க் உங்க ஹிந்துஸ்தானி டிஷ் என்ன?'
'நான் பேல்பூரியும், தஹி பூரியும்.'
'ஓ.கே. இன்னும் யாரு பாக்கி. நானு மஹாராஷ்ட்ரியன் ஷீரா, புரன்போளி கொண்டு வரேன். மிஸஸ் தினேஷ் நீங்க் ஐஸ்க்ரீமும், ஃப்ரூட் சாலட்டும் மிஸஸ் டெனிஸ் நீங்க வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ். எல்லருக்கும் ஓ.கே.வா. இப்போவே நாக்கு ஊறுது.'
பேசி முடித்து அவரவர் வீடு சென்றனர்.
குறிப்பிட்ட புதன் கிழமையும் வந்தது. மதியம் ஒரு மணிக்கு அனைவரும் ஐயர் மாமி வீட்டில் கூடினர். கலகலப்பாக பேசியவாறே அனைவரும் வேலைகளைத் தொடங்கினார்கள். கிச்சனில் பாதி பேர், ஹாலில் பாதி பேர் என்று கல்யாண வீடு மாதிரி களை கட்டி இருந்தது. வித, விதமான வாசனைகள் தெருவில் போவோரைத் திரும்பி பார்க்க வைத்தது. மும்முரமாக வேலையில் ஈடு பட்டிருந்ததால் டயம் என்ன என்று கூட பார்க்கலை. 7.30. க்கு எல்லா வேலைகளும் முடிந்தன. அய்யோடா டயம் பாரு 7.30. ஆச்சு. நான் என் வீட்டுக்காரர், குழந்தகளை 8 மனிக்கெல்லாம் இங்க வரச்சொல்லி இருக்கேன்.
வாங்கோ எல்லாரும்.. நாமும் கொஞ்சம் முகம், கைகால் அலம்பி ஃப்ரெஷ் ஆகலாம்.
8 மணிக்கு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். சாயங்காலமே மொட்டைமாடியை பெருக்கி சுத்தம் செய்திருந்தனர். ஆளுக்கொரு சாமானாக மாடியில் கொண்டு வைத்தனர்.
அன்றைக்கென்று பார்த்து நிலா வெளியில் தலையை காட்டவே இல்லை. ஜில் என்று குளிர்ந்த காற்று வேறு அடித்துக்கொண்டிருந்தது. ஆஹா, என்ன சூப்பர் க்ளைமேட் இல்லையா, என்று ஆரவாரமாக எல்லாரும் அரட்டையில் மூழ்கினார்கள்
எல்லாருக்குமே நல்ல பசி. ஐயர் மாமிதான், எல்லாருக்கும் சேர்ந்தாப்போல இலையைப்போடுங்கோ எல்லா ஐட்டங்களையும் பரிமாறிட்டு எல்லாருமே சேர்ந்து உக்காந்துடலாம் என்றாள்.
ஐயர் மாமா., இன்னும் நிலாவே வல்லியே, நான் கீழ போயி 100 வாட்ஸ்பல்ப் கொண்டு வரென்னு சொல்லி கொண்டு வந்து மாட்டினார். எல்லாருமே சேர்ந்து அமர்ந்தனர்.
ப்ரேயர் சொல்லிட்டு சாப்பிட துவங்கும் சமயம், பட் என கரண்ட் போச்சு. அடடா, லைட்டு போச்சே இப்போ என்ன பண்ரது. கீழ போயி கேண்டில் கொண்டுவரேன்னு கேண்டில் லைட் டின்னராக ஸ்டார்ட் பண்ணினோம். ஒருவாய் கூட சாபிட்டிருக்க மாட்டோம் சட, சட வென்று மழைத்தூறல் வேறு போட ஆரம்பித்து விட்டது. எல்லாரும் இலையை சுருட்டிண்டு கீழே ஓடினோம். கீழே வீட்டில் கேண்டில்லைட் வெளிச்சத்தில் இலையை விரித்தால் எல்லாரும் ஆசை, ஆசை யாக சமைத்திருந்த உண்வு வகைகள் எல்லாம் நாங்களும் எவ்வளவு ஒற்றுமை என்று சொல்வதுபோல ஒன்றுடன், ஒன்று கலந்து ஸ்பெஷல் ருசியுடனிருந்தது.
அதிலிருந்து ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இந்த கேண்டில் லைட் டின்னர்தான் நினைவுக்கு வரும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
நல்ல கதை கோமு!
வெவ்வேறு பிரிவுகளில் வேற்றுமை இருந்தாலும் ஒன்றோடொன்று கலந்துவிட்டனர் என்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
கோமு, நம் இந்தியாவே ஒரு கதம்ப சாம்பார்தான். அதில் இன்ன ருசி உள்ளது என்று யாராலும் பிரித்து சொல்ல முடியாத அளவிற்கு அனைத்து காய்களின் ருசியும் ஒன்றோடு ஒன்று பிணைந்து ஒரு தனி ருசியை தரும். அது போல தான் நம் நாட்டில் வாழும் மக்களும் அவர்களின் உணர்வுகளும். உங்களுடைய மூன் லைட் டின்னர் கதையின் மூலம் வேற்றுமையில் ஒற்றுமையை சிம்ளி சூப்பராக விளக்கியுள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
கோமு,
மூன் லைட் டின்னர்,கேன்டில் லைட் டின்னர் ஆன கதை நன்றாக இருந்தது.என்ன தான் பவர் கட் ஆனாலும்,மழைபெய்தாலும் எல்லாரும் சேர்ந்து சாப்பிடும் சுகமே தனி.படிக்கும் போதே,மகிழ்ச்சியாக இருந்தது.யதார்த்தமான கதை. மேலும் நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
கோமு நம் இந்திய நாட்டின் ஒற்றுமையை சாப்பாடு முலம் அறுசுவைக்கு கதையா எழுதி விளக்கிட்டேள்பா... நம் நாட்டின் ப்ளஸ் பாயிண்டே இந்த ஒற்றுமை தான். அங்கொன்றும் இங்கொன்றும் வேற்றுமை இருந்தாலும் ஒற்றுமைக்கும் பஞ்சமில்லை. அழகான அருமையான கதை. வாழ்த்துக்கள். எனக்கு இப்பவே நீங்க சொன்ன எல்லாம் சாப்பிடனும்போல இருக்கு. இது மாதிரி எங்க வீட்ல சின்ன வயசுல சாப்பிடுவோம். 8வீடு சேர்ந்து இருக்கும். மாடி ஒரே மாடி. பெரிய மாடியாக இருக்கும். எல்லாரும் வீட்டிலிருந்து மண்ணெண்ணெய் அடுப்பு எடுத்துவந்து தோசை சப்பாத்தி என்று செய்து சாப்பிட்டுவிட்டு அங்கேயே அன்று இரவு படுத்து துாங்கிவிடுவோம். அழகான நாட்கள் அவை. அதை மறுபடியும் ஞாபகப்படுத்திவிட்டீா்கள். நன்றி... எல்லாரையும் ஒன்னா ஒக்கார சொல்லி அம்மா கைல பிசைந்து போடும் தயிர்சாதம் கூட மிகவும் ருசியாக இருக்கும். (போதும் ராதா கதை சொன்னது. கதைக்கு பின்னுாட்டம் கொடுக்க சொன்னா நீ ஒரு கதையே போட்டுடுவ போலயே.. இடத்தக்காலி பண்ணு முதல்ல...)
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
உ
அடடா! சொல்லிருந்தா நானும் வந்து ஜோதில ஐக்கியம் ஆகிருப்பேனே!
மிஸ்ஸாயுடுத்து! அடுத்த நிலா சாப்பாட்டுக்கு நான் வந்து ‘’பார்ட்டியா’’ கொண்டாடிவோம்!( ஹிஹிஹிஹி)
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
கதையைப் படித்து பாராட்டியுள்ள தோழிகளுக்கு நன்றிகள்.
நான் வேறு ஊர் வந்திருப்பதால, அடிக்கடி அருசுவைக்குவர
முடியலை. அதனால மொத்தமாகதான் என் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிரேன்,
நான் எழுதிய கதையை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி.
எல்லாரின் பாராட்டுக்களையும் பார்க்கும்பொதுஇன்னமும்
கவனத்துடன், நிறைய நல்ல கதைகள் எழுதி அனுப்ப
தோணரது.
அட...!!! உங்கக்கிட்டருந்து இப்படியொரு கதை....அசத்திட்டீங்க.
இதுதான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று சொல்வார்களோ.
இன்னும் பல கதைகள் படைத்திட வாழ்த்துக்கள் கோமு.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
என்ன கோம்ஸ் இது, கதையை படிக்க படிக்க, சாப்பிடணும் போல இருக்கே, நல்ல கதை, வாழ்த்துக்கள்.
அன்புடன்
பவித்ரா
கோமு...
எனக்கும் அவங்களொட சேர்ந்து சமச்சு ( கஷ்டம் தான் ) சாப்பிடனும் போல இருந்தது. இப்படி ப்ளான் பண்ணி கடைசில சொதப்பிடுச்சு. சரி அதானே ஒவ்வொரு பௌர்ணமியும் கேண்டில் டின்னரை நினைவுபடுத்துகிறது ;)
வாழ்த்துக்கள்.
Ramya Karthick B-)
ஒருவரின் முதுகிற்கு பின்னால் செய்ய வேண்டிய ஒரே வேலை தட்டிக் கொடுப்பது மட்டுமே.
மூன்லைட் டின்னர் ஒரு கதை போலவே இல்லை. ஒரு ஃப்ங்க்ஷனில் கலந்து கொண்டமாதிரிதான் இருந்தது. நல்லா இருந்தது. ஒவ்வொரு ரெசிப்பியைப்பற்றி படிக்கும் போதும் அப்படியே நாக்கு ஊறுது.
ஆஹா! அருசுவைக்கு ஏத்த கதையா எழுதியிருக்கீங்க. அடுத்த தடவை என்னயும் மறக்காம கூப்பிடுங்க;-)
நல்லா எழுதியிருக்கீங்கபா, இன்னும் நிறைய எழுதுங்க, வாழ்த்துக்கள்.
* வீடு சவுகரியமா இருக்கா, அடிக்கடி அருசுவைக்கு வாங்க;-)
Don't Worry Be Happy.
கோமு மேடம்,
நிலா சோறு இனிக்கிறது...
நம் ஒற்றுமையை காட்டும் இனிய கதை...
வாழ்த்துக்கள் தொடர்ந்து நிறைய கதைகளை எழுதுங்க...
அன்புடன்,
கவிதா
கோமு மூன் லைட் டின்னர் கதை சூப்பர். 8 பேமிலி சேர்ந்து தனித்தனியா விதவிதமா சமைச்சு எல்லோரும் ஒன்னா சாப்பிடுறது ஒரு பங்கஷன் கொண்டாடின மாதிரில இருக்கும். இந்த மழை வந்துதான் சொதப்பிடிச்சு. இனிமேல் எனக்கு ஒவ்வொரு பவுணர்மியிலும் உங்கள் மூன் லைட் டின்னர்தான் நினைவுக்கு வரும். நல்லா எழுதியிருக்கீங்க கோமு. தொடரட்டு உங்கள் எழுத்துப்பணி.
என்கதையைப்பாராட்டிய
ஆமினா,
கல்பனா,
ஹர்ஷா,
ராதாஹரி,
உ.மாமி,
யோகராணி,
பவித்ரா,
ரம்யாகார்த்திக்,
சித்ரா.m,
ஜெயலஷ்மி,
கவிதா,
வினோஜா.
எல்லாருக்கும் நன்றிகள். தனித்தனியா பதிவு போட முடியலை சாரி.
வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எழுதுங்கள்.
அன்புடன்
ஜெமாமி
உங்க வாழ்த்து பதிவு பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி
கோமு மேடம் கதை ரொம்ப நல்லா இருந்தது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க.... கிரேட்.. மேடம்.
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்
கதை எழுதி இத்தனை நாட்களக்குப்பிறகும் வாழ்த்துக்கள் வந்தவண்ணம்
இருக்கு. பாக்கவே சந்தோஷமா இருக்குப்பா. நன்றி.
கோமு மேடம் வெரி சாரி...
எனது ஓவ்வொரு கதைக்கும் மறக்காமல் பதிவு போடும் உங்கள் கதையை நான் எப்படி பார்க்காமல் இருந்தேன்...
உண்மையில் நல்லா இருக்கு கதை..ஆனால் ரெண்டு இடங்களில் பிழை தெரிந்தது..பரவாயில்லை....
நீங்கள் டைப் பன்ன எதை பயன் படுத்துகிறீர்கள்?NHM டௌன்லோட் செய்து INSTAAL பன்னி டைப் பன்னுங்கள்..அதிக பட்ச்சம் பிழை இருக்காது..கதை அனுப்பும் முன் அட்லீஸ்ட் நான்கு தடவையாவது சரி பாருங்கள்...
அப்புறன் என்ன?உங்களை அடிச்சுக்க ஆளே இருக்காது!
நானும் ஜெயந்தி மாமியின் அறிவுறைப்படி அதை டௌன்லோட் செய்து இப்போது அதிகபடியான பிழை இல்லை..நன்றி!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
அப்பாடா!!!!!!!!!!!! உங்க பின்னூட்டம் பார்த்தப்பரம் தான் திருப்தி ஆச்சு. நானும்
N. H. M. யூஸ்பண்ணித்தான் டைப் பண்ரேன். மிடில், மிடில்ல தகறாறு பண்ணுது.
நான் படிச்சது, வளந்தது எல்லாமேவடக்கில்தான். வீட்ல கொஞ்சம், கொஞ்சம்
தமிழ் பேச வருமே தவிர எழுத, படிக்க சுத்தமா தெரியாது. என் ஃப்ரென்ட்தான்
என்னை ஒரு வருடம் முன்பே அருசுவையில் சேர்த்து விட்டா. ஆனாலும் தமிழ்
எழுதவராம எப்படி? அதனால அவளே எனக்கு தமிழ் எழுத படிக்க எல்லாம் சொல்லித்தந்தா. 6 மாசம் முன்புதான் என்னால ஓரளவு தமிழ் எழுதவே முடியரது
இப்போகூட நான் இன்த அளவுக்கு தமிழ்ல எழுதரேன்னா அதற்கு என் ஃப்ரெண்ட்தான்
முழு காரணம். இப்போகூட நிரைய தடுமாற்றம் இருக்கு. க்ரமர் வைஸ் சரியா
எழுத தெரியலை. ஜஸ்ட் ஒ.கே. ரகம்தான்.
கோமு
ஃபெமசான குல்கந்தும், ஆப்பில் சாக்லெட்டும், இட்லி தோசை,சட்னி, சாம்பார், 'ஆலு ப்ரோட்டாவும், மிக்ஸ்ட் பாஜியும், பேல்பூரியும், தஹி பூரியும், ஷீரா, புரன்போ, ஐஸ்க்ரீமும், ஃப்ரூட் சாலட்டும், வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் படிக்கும் போதே சாப்பிடனம் போல இருக்கே ஆனா கதைய படிச்சவுடனே ஒரு திருப்தி இருக்கே ஆஹா……. நாமெல்லாம் இப்படி எப்போ சாப்பிடலாம்
மீரா கிருஷ்ணன்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நாம அறுசுவை அரசிகள் எல்லாருமா சேந்து ஒரு மூன்லைட் டின்னர்ஏற்ப்பாடு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
செய்துடலாமா????????????????????