ஃபிர்னி

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசுமதி அல்லது ஜீரக சம்பா - அரை கப்
பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - ஒரு கப்
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
ஜாதிக்காய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
நறுக்கின முந்திரிப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
நறுக்கின பிஸ்தா - ஒரு மேசைக்கரண்டி
சாரப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி


 

அரிசியைக் கழுவி சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
அரைக் கப் பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும்.
மீதமுள்ள அரைக் கப் பாலை, ஊறின அரிசியுடன் சேர்த்து மிக நைசாக அரைக்கவும்.
இந்த விழுதைக் கொதிக்கும் பாலில் போட்டுக் கட்டி தட்டாமல் கிளறவும். இது மிகவும் முக்கியம்.
கொதிக்க ஆரம்பித்ததும், பாத்திரத்துக்கு அடியில், அடுப்புக்கு மேல் ஒரு பழைய தோசைக்கல்லை வைப்பது நல்லது. அடிப் பிடிக்காமல் இருக்கும்.
அரிசி நன்றாக வெந்ததும் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும், ஏலப்பொடி, ஜாதிக்காய்ப் பொடி போட்டுக் கலந்து இறக்கவும்.
பொடியாக நறுக்கின முந்திரிப் பருப்பு, பிஸ்தா, சாரப்பருப்பு முதலியவற்றைத் தூவவும்.
நைவேத்தியம் செய்த பின், குளிரவைத்துப் பரிமாறவும்.


இது எளிதாகச் செய்யக்கூடிய ஒரு வடநாட்டுப் பாயசம்.

மேலும் சில குறிப்புகள்